Home> Spiritual
Advertisement

நினைத்த காரியம் நிறைவேற வேண்டுமா... அருகம்புல் செடியை ‘இந்த’ திசையில் நடவும்!

தெய்வங்களுக்கு இஷ்டமான செடிகளை முறைப்படி வீட்டில் நட்டால், அத்தகைய தெய்வத்தின் அருள் வீட்டில் நிலைத்திருக்கும் என்கின்றனர் வாஸ்து நிபுணர்கள். 

நினைத்த காரியம் நிறைவேற வேண்டுமா... அருகம்புல் செடியை ‘இந்த’ திசையில் நடவும்!

இந்து மதத்தில் மரங்கள், செடிகள் மற்றும் பூக்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. தங்களுக்கு விருப்பமான பூக்களை தெய்வங்களுக்கு அர்ப்பணித்து வழபட்டாலோ அல்லது மரங்கள் மற்றும் செடிகளை வழிபட்டாலோ, அவர்கள் விரைவில் மகிழ்ச்சியடைந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள் என்பது ஐதீகம். விநாயகருக்கு அருகம்புல் சாற்றி வழிபடுவது மிகவும் பலனைத் தரும். கணபதிக்கு மிகவும் பிடித்தமான புல் வகை அருகம்புல் என்பது அனைவரும் அறிந்ததே.  விநாயகருக்கு அருகம்புல்  அர்ச்சனை செய்வதன் மூலம் பக்தர்களின் வேண்டுதல்கள் அனைத்தும் விரைவில் நிறைவேறும்.

ஜோதிட சாஸ்திரத்தின்படி, வீட்டில் விநாயகப் பெருமானின் அருள் பரிபூரணமாக இருக்க வேண்டும் என விரும்பினால், அவருக்கு அருகம்புல் அர்ச்சனை செய்வதோடு, வீட்டின் ஒரு மூலையில் அருகம்புல் செடியை வைக்கலாம். வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் அருகம்புல் செடியை நடுவது மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருகிறது. அருகம்புல் செடியை  வைப்பதற்கு முன்,  எந்த திசையில் அதனை வைக்க வேண்டும் என்பதையும் அது தொடர்பான விதிகளையும் அறிந்து கொள்வது அவசியம். அருகம்புல் செடியை நடுவதற்கான சரியான விதிகள் மற்றும் திசை பற்றி தெரிந்து கொள்வோம்.

வீட்டில் அருகம்புல் செடியை நடுவதற்கான விதிகள்

வாஸ்து சாஸ்திரத்தின் படி, எதையும் ஒரு குறிப்பிட்ட திசையில் வைக்கும்போது மட்டுமே அதன் நேர்மறையான பலனைக் கொடுக்கிறது. அருகம்புல் செடி எப்போதும் கிழக்கு நோக்கி வைக்கப்பட வேண்டும். இதனால் விநாயகப் பெருமான் அருள் பரிபூரணமாக கிடைக்கும். இது தவிர, வீட்டின் வடக்கு திசையிலும் இதை நிறுவலாம்.

அருகம்புல் செடியை தவறுதலாக கூட வீட்டின் தெற்கு திசையில் நடக்கூடாது. இதன் காரணமாக, வீட்டில் வசிப்பவர்கள் நிதி நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அமைதியின்மையின் சூழ்நிலை வீட்டில் ஏற்படும்.

அருகம்புல் செடியை ஜன்னலுக்கு அருகில் ஒருபோதும் நடக்கூடாது என்று நம்பப்படுகிறது. அருகம்புல் செடி நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும் என்று கூறப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், அதை ஜன்னல் அருகே வைத்திருப்பது வீட்டில் எதிர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

மேலும் படிக்க | ஏழரை நாட்டு சனி பாடாய் படுத்துகிறதா... சனி பகவானின் அருளைப் பெற செய்ய வேண்டியவை!

அருகம்புல் செடியை எப்போதும் மண் அல்லது செம்பு பாத்திரத்தில் வைக்க வேண்டும் என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். அதற்கு தவறாமல் தண்ணீர் விடவும். இவ்வாறு செடியை பராமரிப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. 

வீட்டின் வடகிழக்கு மூலையில் அல்லது வீட்டின் பூஜை அறையை சுற்றி அருகம்புல் வைப்பது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். இதைச் செய்வதன் மூலம், வீட்டில் பணமும் செல்வமும் நிறைந்திருக்கும்.

கணபதிக்கு அருகம்புல்லை அர்ப்பணித்து பூஜை செய்வதால் வீட்டில் எப்போதும் மகிழ்ச்சி நிலவும். மறுபுறம், நீங்கள் வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு வேண்டும் என விரும்பினாலோ அல்லது உங்கள் வாழ்க்கையில் முன்னேற விரும்பினாலோ அருகம்புல்லை அலுவலகத்தின் மேசையில் வைக்க வேண்டும் என வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க | மகரத்தில் இணையும் சனி - புதன் - சுக்கிரன்; ‘இந்த’ ராசிகளுக்கு பம்பர் பலன்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Read More