Home> Spiritual
Advertisement

படுக்கையறையில் இந்த பொருட்களை கண்டிப்பாக வைக்க கூடாது!

வீட்டில் அமைதி நிலவவும், கணவன் - மனைவி இடையில் பிரச்சனை வராமல் இருக்கவும் படுக்கையறையில் சில வாஸ்து குறிப்புகளை பின்பற்ற வேண்டும்.  

படுக்கையறையில் இந்த பொருட்களை கண்டிப்பாக வைக்க கூடாது!

படுக்கையறை அனைவருக்கும் ஓய்வு மற்றும் புத்துணர்ச்சிக்கான இடமாக உள்ளது.  மேலும் அந்த அறை வீட்டில் ஒரு சிறப்பு இடத்தை எப்போதும் பெரும்.  வாஸ்து நம்பிக்கைகளின்படி, வீட்டின் படுக்கையறைக்கு சில வாஸ்து விதிகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம். இது வீட்டில் மகிழ்ச்சியை பராமரிக்கிறது.  வாஸ்து தொடர்பான சில தவறுகள் வீட்டில் வாஸ்து குறைபாடுகளை ஏற்படுத்தும் என்று பொதுவாக நம்பப்படுகிறது.  அதில் முக்கியமானது என்னவென்றால் படுக்கையறையில் பொருட்களை தவறான இடத்தில் வைப்பது. நீங்கள் உங்கள் வீட்டின் படுக்கையை சுற்றி பொருட்களை சரியாக வைக்கவில்லை என்றால், வீட்டில் உள்ளவர்களிடையே பதற்றம் அதிகரித்து அதன் பக்க விளைவுகள் உங்கள் வாழ்க்கையில் தோன்றத் தொடங்கும் என்று நம்பப்படுகிறது. 

மேலும் படிக்க | பங்குச்சந்தை முதலீடு மூலம் கோடீஸ்வரனாக... நீங்கள் கடைபிடிக்க வேண்டியவை!

அதேபோல கணவன்-மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு, ஏன் இப்படி நடிக்கிறது என்ற காரணத்தை கண்டுபிடிப்பதில் சிரமம் இருந்தால், படுக்கையறையின் வாஸ்து விஷயத்தில் நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். கட்டிலுக்கு அடியில் உள்ள இடத்தை அலங்கோலமாக வைக்க வேண்டாம். உங்கள் தூக்கத்தில் எந்த இடையூறும் ஏற்படாதவாறு மனதிற்கு அமைதியை அளிக்கும் விதமாக தூங்குவதற்கு படுக்கை பயன்படுகிறது. பெட் அல்லது கட்டிலுக்கு அடியில் குப்பைகள், உடைந்த பொருட்கள், பழைய துணிகள் அல்லது வேறு எந்த பொருட்களையும் வைக்கக்கூடாது. இந்த இடத்தை சுத்தமாக வைத்திருந்தால், கணவன்-மனைவிக்கு இடையே ஏற்படும் சண்டை சச்சரவுகளில் இருந்து பெருமளவு நிவாரணம் பெறலாம்.

குறிப்பாக கட்டிலுக்கு அடியில் மின்னணு சாதனங்களை வைக்க வேண்டாம். நீங்கள் எவ்வளவுதான் எலக்ட்ரானிக் பொருட்களின் பிரியர்களாக இருந்தாலும், படுக்கைக்கு அடியில் எந்த வகையான எலக்ட்ரானிக் சாதனங்களையும் வைக்கக் கூடாது. இப்படிச் செய்வதால் பதற்றம் ஏற்பட்டு வீட்டில் தேவையில்லாத சண்டைகள் அதிகரிக்கத் தொடங்கும்.  கூடுதலாக, மின்னணு சாதனங்கள் மின்காந்த புலங்களை உருவாக்குகின்றன, அவை உங்கள் தூங்கும் இடத்தில் இயற்கையான ஆற்றல் ஓட்டத்தில் குறுக்கிடலாம். அமைதியான மற்றும் நிதானமான சூழலைப் பராமரிக்க, படுக்கைக்கு அடியில் உள்ள பகுதியிலிருந்து எலக்ட்ரானிக் கேஜெட்களை விலக்கி வைப்பது நல்லது.

மேலும் படுக்கைக்கு அடியில் காலணிகள் மற்றும் செருப்புகளை வைக்க வேண்டாம்.  நீங்கள் காலணிகளை அணிந்துகொண்டு வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, வெளியில் உள்ள அனைத்து அசுத்தங்களும் காலணிகள் வழியாக வீட்டிற்குள் நுழைகின்றன. இந்த காரணத்திற்காக, எப்போதும் வீட்டிற்கு வெளியே காலணிகளை வைக்க அறிவுறுத்தப்படுகிறது மற்றும் தவறுதலாக கூட படுக்கையறையில் வைக்க வேண்டாம்.  அதே போல படுக்கைக்கு அடியில் விளக்கமாறு வைக்க வேண்டாம். வாஸ்து விதிகளின்படி, துடைப்பத்தை ஒருபோதும் படுக்கைக்கு அடியில் வைக்கக்கூடாது, ஏனெனில் அது எதிர்மறை ஆற்றலை ஏற்படுத்தும்.

உடைந்த அல்லது சேதமடைந்த பொருட்களை படுக்கைக்கு அடியில் வைக்க வேண்டாம். உடைந்த அல்லது சேதமடைந்த பொருள்கள் எதிர்மறை ஆற்றலுடன் தொடர்புடையதாக வாஸ்து சாஸ்திரத்தில் நம்பப்படுகிறது. படுக்கைக்கு அடியில் இதுபோன்ற பொருட்களை வைத்திருப்பது உங்கள் வாழ்க்கையில் பதற்றத்தை உண்டாக்கும் மற்றும் சண்டைகளை அதிகரிக்கும், எனவே நீங்கள் அவ்வாறு செய்யாமல் இருப்பது நல்லது. கூடுதலாக, பழைய அல்லது உடைந்த புகைப்படங்கள் மற்றும் அலங்கார பொருட்கள் போன்றவற்றை படுக்கைக்கு அடியில் இருந்து விலக்கி வைக்க வேண்டும்.  கணவன்-மனைவி இடையே நல்ல உறவை நீங்கள் பராமரிக்க விரும்பினால், படுக்கையறை தொடர்பான இந்த வாஸ்து விதிகளை கண்டிப்பாக பின்பற்றவும்.

மேலும் படிக்க | Indian Railways: ஒரே டிக்கெட்டில் 56 நாட்களுக்கு இந்தியா முழுவதும் சுற்றலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More