Home> Spiritual
Advertisement

இன்றைய ராசிபலன்: வருடத்தின் இறுதி நாளில் 'இந்த’ ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

Today's Rasi Palan 31st December 2023: 2023ஆம் வருடம் இன்றுடன் முடிவடைகிறது. இந்த நாளில், உங்கள் நாள் எப்படியிருக்கப்போகிறது என தெரிந்து கொள்வோமா? 

இன்றைய ராசிபலன்: வருடத்தின் இறுதி நாளில் 'இந்த’ ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

12 ராசிகளுக்கும், அவரவர் கிரகப்பலன்களின்படி, ஒவ்வொரு நாள் ஒவ்வொரு பாணியில் அமையும். அந்த வகையில், மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசிகளுக்கு, வருடத்தின் இறுதி நாளான இன்று (Rasi Palan 31st December 2023) என்னென்ன பலன்கள் காத்திருக்கின்றன என்பதை இங்கு பார்க்கலாம். 

மேஷம்:

காலநிலை மாற்றங்களால் உங்கள் வாழ்விலும் சில நிலைகள் மாறலாம். நிதி சிக்கல்கள் மறைந்து நிதி நிலைத்தன்மை திரும்பும். ஒரு சிலருக்கு இன்று நல்ல வருமானம் இருக்கும். புதிய நபர்களின் சந்திப்பால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகலாம். சிலருக்கு குடும்பத்துடன் வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். ராசியான எண்:11, அதிர்ஷ்டத்தை கொடுக்கும் நிறம்:வெள்ளை.

ரிஷபம்:

ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள் உங்களை விழிப்புடனும் சுறுசுறுப்புடனும் வைக்க உதவும். சிலருக்கு இன்று நல்ல ஓய்வு கிடைக்கும். வேலையில் உங்கள் செயல்திறன் முதலாளிகளால் பாராட்டப்படும். குடும்பத்தினர், உங்களுடன் நேரம் செலவிட விரும்புவர். வீட்டில் நீங்கள் விரும்பும் சூழல் உண்டாகலாம். ஒரு நண்பர் அல்லது உறவினர் உங்களை விடுமுறைக்கு அழைக்கலாம். சொத்து பிரச்சனையிலி இருப்பவர்களுக்கு வெற்றி கிட்டும். அதிர்ஷ்ட எண்:18, அதிர்ஷ்டத்தை தரும் நிறம்: மெரூன்

மிதுனம்:

சிறுசிறு உடல்நலக் கோளாறுகள் எளிதில் தீர்க்கப்படும். வியாபாரத்தில் நல்ல வருமானம் கிடைக்கும். தனிப்பட்ட முறையில் ஏதாவது தொழில் செய்பவர்கள் தங்கள் தொழிலை மேம்படுத்திக் கொள்ள முடியும். நிம்மதியான சூழல் நிலவும். மாணவர்கள், எதிர்பார்த்ததை விட அதிகமாக சாதிக்க முடியும். அதிர்ஷ்ட எண்:7, அதிர்ஷ்டத்தை தரும் நிறம்:பீச் நிறம்

கடகம்:

நீங்கள் அனுபவித்த அனைத்து வலிகளும் இன்று மறைந்துவிடும். பண ஆதாயங்கள் உண்டாகலாம். குடும்பத் தகராறில் சமாதான சூழல் உண்டாகலாம். சிலருக்கு பயணத்தில் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. தொழில்முறை முன்னணியில் அனைத்து சரியான நகர்வுகளையும் செய்வது உங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தலாம். அதிர்ஷ்ட எண்:1, அதிர்ஷ்டத்தை தரும் நிறம்: ஆரஞ்ச்.

சிம்மம்:

உங்கள் சொந்த முயற்சியின் மூலம் நீங்கள் தொழிலில் நிலைத்திருப்பீர்கள். நீங்கள் கணக்குகளை கையாள்வது அல்லது சில நிதி ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கான நாளாக இது அமையலாம். தொழில் ரீதியாக உங்களுக்கு  சாதகமாக சில விஷயங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. குடும்ப உறுப்பினர்கள் இன்று உங்கள் மீது உங்கள் மீது அன்பைப் பொழிவர். இன்று நீண்ட பயணத்தை மேற்கொள்பவர்களுக்கு ஆறுதலும் இன்பமும் கிடைக்காமல் போகலாம். உங்கள் பெயரில் ஒரு சொத்து வாங்க வாய்ப்பு வரலாம். அதிர்ஷ்ட எண்:9, அதிர்ஷ்டத்தை தரும் நிறம்: தங்க நிறம். 

மேலும் படிக்க | 2024ல் சனி ஆட்டம் ஆரம்பம்.. இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்

கன்னி:

உங்களது உடல் ஆரோக்கியம் இன்று சிறப்பாக இருக்கலாம். வியாபாரத்தில் உங்களின் கடின உழைப்பால் நல்ல வருமானம் கிடைக்கும். சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் வியாபாரத்தை உயர்த்துவதைக் காணலாம். வீட்டில் சிலருக்கு சாதகமான மாற்றங்கள் அமையும். புதிய இடத்துக்கு மாறுபவர்களுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படும். அதிர்ஷ்ட எண்: 6, அதிர்ஷ்டத்தை தரும் நிறம்: பழுப்பு

துலாம்:

ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க ஒரு நண்பர் உங்களுக்கு ஊக்கமளிப்பார். முன்னர் செய்த முதலீடுகள் இந்த நாளில் உங்களுக்கு கைக்கொடுக்கும்.  வேலையில், புதிதாக ஒரு முயற்சியை மேற்கொள்ள நீங்கள் தயாராக இருக்கலாம். உங்களில் சிலரின் வீடுகளுக்கு இன்று குடும்ப விருந்தினர்கள் வருகை புரியலாம். பயணம் மேற்கொள்வர்கள் கண்ணும் கருத்துமாக நடந்து கொள்ள வேண்டும். கல்வித்துறையில் யாரையாவது நெருங்கிப் பழகுவது உங்களுக்கு சாதகமாக இருக்கும். அதிர்ஷ்ட எண்: 17, அதிர்ஷ்டத்தை தரும் நிறம்: மெஜந்தா

விருச்சிகம்:

உங்களது ஆரோக்கியமான வாழ்க்கை முறை உடலை பத்திரமாக பார்த்துக்கொள்ள வழி வகுக்கும். தொழில் ரீதியான வெற்றியை அடைய இலக்குகளை முழு ஆற்றலுடனும் கவனத்துடனும் தொடர வேண்டும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல புரிதல் ஏற்படும்.  உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தருவாய்கள் இன்று நடக்கலாம்.  வழக்கத்தில் இருந்து ஓய்வு பெற விரும்புவோர் மகிழ்ச்சியான விடுமுறை எடுக்க வாய்ப்புண்டு. அதிர்ஷ்ட எண்: 2, அதிர்ஷ்டத்தை தரும் நிறம்: ஊதா.

தனுசு:

உங்கள் கனவுகளை நனவாக்குவதில் பண ரீதியாக எந்த சிக்கலும் ஏற்படாது. வேலை தேடுபவர்களுக்கு வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும். குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது இன்று மிகவும் நிறைவாகவும் பொழுதுபோக்காகவும் இருக்கும். வணிக ரீதியான பயணத்தில் இருப்பவர்கள் சில நல்ல செய்திகளுடன் திரும்பி வருவார்கள். அதிர்ஷ்ட எண்: 8, அதிர்ஷ்டத்தை தரும் நிறம்: நீலம். 

மகரம்: 

நிதித்துறையில் இருக்கும் நிலைத்தன்மை சிலருக்கு நிம்மதியை தரும். பொருத்தமான வேலை தேடுபவர்களுக்கு தொழில் ரீதியான ஆட்களுடன் நட்பு ஏற்படுத்திக்கொள்வது உதவியாக இருக்கும். புனித யாத்திரை உங்கள் ஆன்மீக வளர்ச்சிக்கு உதவும். மாணவர்கள் கல்வி அல்லது விளையாட்டில் சிறந்து விளங்குவர். அதிர்ஷ்ட எண்: 4, அதிர்ஷ்டத்தை தரும் நிறம்: காவி 

கும்பம்: 

பலருக்கு நல்ல துணிகளை வாங்க வாய்ப்புள்ளது. கமிஷன் அடிப்படையில் பணிபுரிபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இன்று குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவீர்கள். கடவுள் நம்பிக்கை அதிகமாக உள்ளவர்களுக்கு ஆன்மீக பயணத்தை மேற்கொள்ளலாம். சொத்து தொடர்பான ஆவணங்களில் உள்ள பிரச்சனைகள் விரைவில் முடிக்கப்படும். அதிர்ஷ்ட எண்: 5, அதிர்ஷ்டத்தை தரும் எண்: பச்சை. 

மீனம்:

பண ரீதியான சிக்கலில் இருப்போர் அதிலிருந்து மீள வாய்ப்புள்ளது. தொழிலில் இன்று ஏற்படும் லாபத்தால் பலருக்கு மகிழ்ச்சி கிட்டும். குடும்பத்தில் இருக்கும் உறுப்பினர்கள் உங்களை நல்முறையில் வழிநடத்துவர். எதிர்பாராத வகையில் உங்களுக்கு பிடித்த நிகழ்வுகள் இன்று நடக்கலாம். அதிர்ஷ்ட எண்:22, அதிர்ஷ்டத்தை தரும் நிறம்: பிங்க். 

மேலும் படிக்க | 10 ஆண்டுக்குப் பிறகு உருவாகும் அபூர்வ யோகம், இந்த ராசிகளுக்கு 2024ல் ராஜயோகம்

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More