Home> Spiritual
Advertisement

Venus Transit: சுக்கிர யோகத்தால் பிரபலமாகும் ராசிக்காரர்கள்! மகாலட்சுமி கடாட்சம் அதிகரிக்கும்

Sukra Gochar 2023 January 22: பல சிறப்புகளைப் பெற்ற சுக்கிரன் பகவான், தனது நண்பரான சனியின் ராசிக்குள் நுழைகிறார், 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் சுக்கிரன் ஒருசில ராசிகளுக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்துவார்

Venus Transit: சுக்கிர யோகத்தால் பிரபலமாகும் ராசிக்காரர்கள்! மகாலட்சுமி கடாட்சம் அதிகரிக்கும்

Venus Transit: வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொடுப்பவர் என்று அறியப்படும் சுக்கிர பகவான் ஒருவரின் ஜாதகத்தில் நல்ல யோக அம்சத்துடன் இருந்தால் திருமணத் தடைகள் இருக்காது. ஆனால், சுக்கிரன் ஒருவரது ஜாதகத்தில் அசுபமான இடத்தில் அமர்ந்துவிட்டாலோ வாழ்க்கையில் துணை சரியாக அமையாமல் போவதோடு, காதலும் கசந்துவிடும். சுப கிரகமான சுக்கிரன், அன்பு, பாசம், காதல் ஆகிய மூன்று இன்பங்களையும் அளிப்பவர், ஆனந்தத்தை அடைவதற்குரிய மனநிலையை உருவாக்கும் சுக்கிரன் பகவானே, காதல், காமம், திருமணம் என இரு பாலினங்களுக்கும் இடையிலான உறவையும், சுகத்தையும் அளிப்பவர்.

சுக்கிரன் சஞ்சாரம் 2023

இப்படி பல சிறப்புகளைப் பெற்ற சுக்கிரன் பகவான், தனது நண்பரான சனியின் ராசிக்குள் நுழைகிறார், 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் சுக்கிரன் ஒருசில ராசிகளுக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்துவார். ஜனவரி 22 அன்று, மாலை 3.34 மணிக்கு கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார். 

சுக்கிரனின் இந்த சஞ்சாரத்தால், வாழ்க்கையில் செல்வச் செழிப்புடன் இருக்கப் போகும் அதிர்ஷ்ட ராசிகள் இவை....  

மேலும் படிக்க | மகரத்தில் சுக்கிரன்! '5' ராசிகளின் அதிர்ஷ்டம் கொடி கட்டி பறக்கும்!

சுக்கிரன் சஞ்சார பலன் சிம்ம ராசி

சுக்கிரனின் சஞ்சாரத்தால், சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் தொடங்கப் போகிறது. திருமணமானவர்கள் தங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவார்கள். தனிமையில் இருப்பவர்கள் தங்கள் விருப்பப்படி வாழ்க்கைத் துணையைப் பெற வாய்ப்புள்ளது. கூட்டு சேர்ந்து புதிய தொழில் தொடங்கலாம். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு நல்ல சலுகை கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் செயல்திறன் பாராட்டப்படும். சில புதிய பொறுப்புகளையும் பெறலாம்.  

சுக்கிரன் சஞ்சார பலன் மேஷ ராசி 

மேஷ ராசிக்காரர்கள் தங்கள் திறமையான வாக்கு சாதுர்யத்தால் மக்களைக் கவர்வார்கள். சுக்கிரனின் சஞ்சாரத்தால், செல்வாக்கு மிக்க நபர்களுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கும். இதனால் தொழிலில் முன்னேற்றம், சேமிப்பு மற்றும் முதலீடுகள் என நேர்மறையான பலன்கள் ஏற்படும். வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் உற்சாகம் ஏற்படும். 

சுக்கிரன் சஞ்சார பலன் மீன ராசி

சுக்கிரனின் சஞ்சாரத்தால் ராசிக்காரர்கள் ஆன்மிக நிகழ்ச்சிகளில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கும். குழந்தைகளுக்காக நிதானமாக செயல்பட வேண்டும்.. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்கள் அடுத்த ஆண்டு வெற்றி பெறலாம். வாழ்க்கைத்துணையுடன் அதிக நேரம் செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்துடன் வெளியூர் செல்லும் வாய்ப்பு உண்டு.

மேலும் படிக்க | மகரத்தில் இணையும் சனி - சுக்கிரன்!  ‘இந்த’ ராசிகளுக்கு குபேர யோகம்!

சுக்கிரன் சஞ்சார பலன் தனுசு ராசி

சுக்கிரனின் சஞ்சாரத்தில் தனுசு ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் தொடங்கப் போகிறது. எழுத்தாளர்கள், பதிவர்கள், பத்திரிகையாளர்கள், கவிஞர்கள் மற்றும் நாவல் எழுத்தாளர்கள் போன்றவர்களுக்கு நல்ல நேரம் தொடங்குகிறது. அவருடைய எழுத்துத் திறன் மேலும் மேம்படும். நீங்கள் நீண்ட தூர பயணம் செல்ல திட்டமிடலாம் அல்லது குடும்பத்துடன் புனித யாத்திரை செல்லலாம். மத நடவடிக்கைகளில் உங்கள் நாட்டம் அதிகரிக்கும். வாழ்க்கையில் உங்கள் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆசியைப் பெறுவீர்கள். 

சுக்கிரன் சஞ்சார பலன் மிதுன ராசி

இந்த ராசிக்காரர்களுக்கு ஆன்மீக நடவடிக்கைகளில் ஆர்வம் அதிகரிக்கும். இளைய சகோதர சகோதரிகளுடன் உங்கள் உறவு சிறப்பாக இருக்கும். தொண்டு தொடர்பான பணிகளில் ஈடுபடலாம், அதன் மூலம் உங்கள் மனதுக்கு திருப்தி கிடைக்கும். வேலை சம்பந்தமாக நீண்ட பயணம் செல்லலாம். படிப்புக்காக வெளிநாடு செல்ல நினைக்கும் இளைஞர்களின் விருப்பமும் நிறைவேறும். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | ஜனவரியில் அஸ்தமனமாகும் சனியினால் ‘இந்த’ ராசிகளின் பொற்காலம் ஆரம்பம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Read More