Home> Spiritual
Advertisement

குரு பூர்ணிமாவில் கிரகங்களின் சேர்க்கை; இந்த ராசிகளின் தலைவிதி மாறும்

Guru Purnima 2022: குரு பூர்ணிமா நாளில் கிரகங்களின் சிறப்பு சேர்க்கை சில ராசிக்காரர்களுக்கு சுப யோகத்தை உண்டாக்கி தரும்.

குரு பூர்ணிமாவில் கிரகங்களின் சேர்க்கை; இந்த ராசிகளின் தலைவிதி மாறும்

இந்து மதத்தில், ஆடி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் வரும் முழு நிலவு குரு பூர்ணிமா எனப்படும். குரு பூர்ணிமா நாளில் குருவை வழிபடுவதன் முக்கியத்துவம் சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது. இந்த ஆண்டு குரு பூர்ணிமா அன்று, கிரகங்களின் சிறப்பு சேர்க்கையால் இந்த நாளின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. இம்முறை குரு பூர்ணிமா நாளில் ஒரே ராசியில் மூன்று முக்கிய கிரகங்கள் ஒன்றாக அமர்ந்திருப்பதால் திரிகிரகம் யோகம் உருவாகும். இந்த நாளில் சூரியன், சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்கள் மிதுன ராசியில் ஒன்றாக சேர்க்கை தர உள்ளனர். இந்த சேர்க்கையால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

மிதுனம் - மிதுனம் ராசிக்காரர்கள் தங்களின் தொழிலில் வெற்றி பெறலாம். இந்த நேரத்தில், உங்கள் செலவுகள் கட்டுப்படுத்தப்படும் மற்றும் நீங்கள் பணத்தை குவிப்பதில் வெற்றி பெறுவீர்கள். அதிர்ஷ்டம் முழு ஆதரவைப் பெறும். குடும்ப பிரச்சனைகள் தீரும். திருமணமானவர்கள் தங்கள் துணையின் முழு ஆதரவைப் பெறுவார்கள். நல்ல செய்தி கிடைக்கலாம்.

மேலும் படிக்க | Astro: ஜாதகத்தில் சனி தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்

துலாம் - துலாம் ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதன் போது உங்களின் நீண்டகாலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர்கள் வெற்றி பெறலாம். பேச்சில் இனிமை இருக்கும். இந்த நேரம் சுப காரியங்களுக்கு சாதகமாக இருக்கும்.

தனுசு - தனுசு ராசிக்காரர்கள் பணியிடத்தில் பாராட்டுகளைப் பெறலாம். உயர் அதிகாரிகள் உங்கள் பணியில் மகிழ்ச்சி அடைவார்கள். சொத்துக்களில் முதலீடு செய்வதற்கு சாதகமாக நேரம் இதுவாகும். கட்டிடம் அல்லது வாகனம் வாங்குவதற்கு சரியான நேரம் இது. அரசு வேலைக்கு தயாராகும் விண்ணப்பதாரர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். பணம் வருவதற்கான புதிய வழிகள் திறக்கப்படும்.

ஜூலை 13 ஆம் தேதி கிரகங்களின் சேர்க்கை
ஜூலை 13-ம் தேதி புதன், சூரியன், சுக்கிரன் ஆகிய மூன்றும் ஒரே ராசியில் அமர்கின்றன. புதன், சூரியன், சுக்கிரன் ஒரே ராசியில் இருந்தால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போவது நிச்சயம். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பெறுப்பேற்காது.)

மேலும் படிக்க | சனி அமாவாசையில் சூரிய கிரகணம்; மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More