Home> Spiritual
Advertisement

தீபாவளியன்று பாரம்பரியம் முறியுமா? சூரிய கிரகணத்தால் மாறும் ’5’ பண்டிகைகளின் தொடர்ச்சி

Diwali Rituals Change: 27 ஆண்டுகளுக்குப் பிறகு தீபாவளியன்று சூரிய கிரகணம் நிகழவுள்ளது. முதல் முறையாக ஐந்து பண்டிகைகள் கொண்டாடப்படும் முறையில் மாறுதல் ஏற்படும் என்பதால் சடங்கு சம்பிரதாயங்களில் மாற்றம் ஏற்படுகிறது

தீபாவளியன்று பாரம்பரியம் முறியுமா? சூரிய கிரகணத்தால் மாறும் ’5’ பண்டிகைகளின் தொடர்ச்சி

Diwali Rituals Chage: 27 ஆண்டுகளுக்குப் பிறகு தீபாவளியன்று சூரிய கிரகணம் நிகழவுள்ளது. முதல் முறையாக ஐந்து பண்டிகைகள் கொண்டாடப்படும் முறையில் மாறுதல் ஏற்படும் என்பதால் சடங்கு சம்பிரதாயங்களில் மாற்றம் ஏற்படுகிறது. இதனால், தீபாவளியன்று பாரம்பரியம் முறியுமா? ஐந்து பண்டிகைகளில் சூரிய கிரகணம் எது போன்ற மாற்றத்தை ஏற்படுத்தும் என பலருக்கும் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. வட இந்தியாவைப் பொருத்தவரையில், தீபாவளியை ஒட்டி முக்கியமான 5 பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. அக்டோபர் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

அதில் எந்த மாறுதலும் இல்லை என்றாலும், மறுநாள் நடைபெறவிருந்த கோவர்தன் திருவிழா ஒரு நாள் பிறகு அதாவது அக்டோபர் 26 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படும். சூரிய கிரகணம் ஏற்படவிருப்பதால், தீபாவளிக்கு மறுநாள் பண்டிகை கொண்டாடப்படாது.. அதே நேரத்தில், தேவ் தீபாவளியிலும் கிரகணம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

மேலும் படிக்க | Astro: தீராத கடன் தொல்லையா; சில எளிய ஜோதிட பரிகாரங்கள்

நவம்பர் 8ஆம் தேதி முழு சந்திர கிரகணம் நிகழவுள்ளது. இருப்பினும், கிரகணத்தை கருத்தில் கொண்டு ஒரு நாள் முன்னதாக தேவ் தீபாவளியை அனுசரிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜோதிடக் கணக்கீடுகளின்படி, அமாவாசை திதியில்தான் சூரிய கிரகணம் உருவாகிறது. இந்த முறையும் ஐப்பசி மாத அமாவாசை அன்று, அதாவது அக்டோபர் 25 செவ்வாய்கிழமை சூரிய கிரகணம் ஏற்படுகிறது, இந்த சூரிய கிரகணம் டெல்லி உட்பட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் தெரியும்.

இந்த முறை தேவதீபாவளி ஐப்படி மாத பெளர்ணமி அன்று கொண்டாடலாம் என்று காசியை சேர்ந்த பண்டிதர்கள் முடிவு செய்ததற்கான காரணம் தெரியுமா?

குறிப்பாக டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூரிய கிரகணத்தால் 44 சதவீதம் வரை பாதிப்படையும். ஆனால் அதற்கு முன் சூரிய அஸ்தமனம் நிகழும் என்பதால் சூரிய கிரகணத்தின் பாதிப்பு இந்தியாவில் இருக்காது. ஜோதிஷாச்சார்யா விபோர் இந்துசுட், பாரத் ஞானபூஷன் மற்றும் ஆச்சார்யா மனிஷ் சுவாமிகளின் கூற்றுப்படி, தீபாவளி வழிபாடு மற்றும் பையா தூஜ் ஆகிய பண்டிகைகள் வழக்கம்போலவே கொண்டாடப்படும். ஏனென்றால், தீபாவளி நள்ளிரவுக்குப் பிறகுதான் சூதக் காலம் தொடங்கும்.  

மேலும் படிக்க | Astro: 19 வருடங்கள் நீடிக்கும் சனி மகா திசை; சனியின் அருளைப் பெற செய்ய வேண்டியவை!

27 ஆண்டுகளுக்கு முன்பு தீபாவளி அன்று கிரகணம் ஏற்பட்டது

தற்செயலாக, 27 ஆண்டுகளுக்கு முன்பு அக்டோபர் 24, 1995 அன்று, தீபாவளி அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது. அது முழு சூரிய கிரகணம். ஆனால் மோட்சகாலத்திற்குப் பிறகு தீபாவளி என்பதால் பண்டிகைகள் கொண்டாடுவதில் எந்த மாற்றமும் இல்லை. தந்தேராஸ், நரக சதுர்தசி, தீபாவளி, கோவர்தன் பூஜை, பையா தூஜ் என தொடர்ந்து வரும் ஐந்து பண்டிகைகளில் இடைவெளி ஏற்படுவது இதுவே முதல் முறை. வழக்கமாக இந்த பண்டிகைகள் அனைத்தும் தொடர்ந்து ஒன்றாக வரும்.

சூரிய கிரகணத்தின் நேரம் - அக்டோபர் 25 அன்று, சூரிய கிரகணம் உலகளாவிய திரையில் மதியம் 2:29 மணிக்குத் தொடங்கும், ஆனால் இந்தியாவில் அது மாலை 4:29 மணிக்குத் தொடங்கும், இது மாலை 6.26 வரை நீடிக்கும். அதாவது, இந்தியாவில் கிரகணம் மாலை 4:29 முதல் 6:26 வரை இருக்கும்.

மேலும் படிக்க | 27 ஆண்டுகளுக்கு பின் வரும் சூரிய கிரகணம்! 1995க்கு பிறகு தீபாவளியில் கிரகணம்

சூதக்காலம் (வழிபாட்டுத் தடை, தேவ தரிசனம், மதச் சடங்குகள்) சூரிய கிரகணத்திற்கு 12 மணி நேரத்திற்கு முன்பு நடைபெறுகிறது, அதே சமயம் சந்திர கிரகணத்திற்கு 9 மணிநேரம் ஆகும். அக்டோபர் 25 ஆம் தேதி 2.29 முதல் சூரிய கிரகணம் உள்ளது, எனவே தீபாவளி இரவு, அக்டோபர் 24/25 அன்று, மதியம் 2.30 மணி முதல் தெரியும். இதனால் தீபாவளி விடியும் வரை செய்யப்படும் நிஷா வழிபாடு பாதிக்கப்படும்.

 சூரிய கிரகணத்தையொட்டி,கோவில்களின் கதவுகள் மூடியே இருக்கும், தீபாவளிக்கு மறுநாள், அக்டோபர் 26ஆம் தேதி கோவர்த்தன் பூஜை கொண்டாடப்படுகிறது. கோவர்தன், மதுராவில் உள்ள முகர்விந்த் கோவிலில் கோவர்தன் பூஜை, அக்டோபர் 26 ஆம் தேதியே நடைபெறும். மதுராவைப் போலவே, மற்ற கோவில்களிலும் கோவர்தன் பூஜை அக்டோபர் 26ம் தேதி நடைபெறும்.

மேலும் படிக்க | கன்னியில் உருவாகும் திரிகிரஹி யோகத்தினால் ‘இந்த’ ராசிகளுக்கு அமோக பலன்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More