Home> Spiritual
Advertisement

அமாவாசை அன்று சனி ஜெயந்தி விரதம்! இந்த 3 ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும்!

Shani Jayanti: சனி தேவன் ஜ்யேஷ்ட மாதத்தின் அமாவாசை நாளில் தோன்றினார், அதனால் இந்த நாளில் சனி ஜன்மோத்சவ் கொண்டாடப்படுகிறது, எனவே இந்த நாளுக்கு சனி ஜெயந்தி என்று பெயர்.  

அமாவாசை அன்று சனி ஜெயந்தி விரதம்! இந்த 3 ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும்!

இந்த ஆண்டு ஜ்யேஷ்ட அமாவாசை தினத்தன்று சனி ஜெயந்தி மற்றும் வட் சாவித்ரி விரதமும் நிகழவிருக்கிறது, இந்த அற்புதமான நிகழ்வு மே 19 வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  இந்த மகத்தான நிகழ்வில் மூன்று ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் பிறக்க போகிறது, இந்த நிகழ்வு அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த போகிறது.  சனி தேவன் ஜ்யேஷ்ட மாதத்தின் அமாவாசை நாளில் தோன்றினார், அதனால் இந்த நாளில் சனி ஜன்மோத்சவ் கொண்டாடப்படுகிறது, எனவே இந்த நாளுக்கு சனி ஜெயந்தி என்று பெயர்.  இந்த நாளில் சனி தொடர்பான பிரச்சனைகள் எளிதில் தீர்க்கப்படும்.  இந்த அற்புதமான நன்னாளில் நீங்கள் காலையில் நீராடிவிட்டு சுத்தமான உடையணிந்து சூரியபகவான் மற்றும் முன்னோர்களுக்கு நீர் வழங்க வேண்டும்.  அடுத்ததாக அரசமரத்திற்கு நீங்கள் நிறைய தண்ணீர் ஊற்றவேண்டும், இந்த விரதம் தண்ணீர் மற்றும் பழங்களுக்காக அனுசரிக்கப்படுகிறது.  சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, அரச மரத்தின் கீழ் கடுகு எண்ணெய் ஊற்றி விளக்கை ஏற்றவேண்டும்.  பின்னர் சனி கடவுளின் ஆசீர்வாதத்திற்காக நன்கு மனமுருகி இறைவனை பிரார்த்தனை செய்யுங்கள்.  அதன் பிறகு, ஏழை எளிய மக்களுக்கு உணவு மற்றும் ஆடைகளை தானம் செய்யுங்கள், அன்றைய நாள் இரவில் உளுத்தம் பருப்பு கிச்சடி செய்து சாப்பிடுங்கள்.

மேலும் படிக்க | கடகத்திற்கு வரும் சுக்கிரன்... அடுத்த 10 நாள்களில் இந்த ராசிக்காரர்களின் கஷ்டங்கள் பறந்துவிடும்!

ஹிந்து மத சம்பிரதாயத்தின்படி, பெண்கள் தங்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காகவும், மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்காகவும் வட் சாவித்திரி விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.  இதுதவிர வட் சாவித்திரி விரதம் அதிர்ஷ்டம் பெறுவதற்கான சிறந்த விரதமாக கருதப்படுகிறது, இது ஜ்யேஷ்ட கிருஷ்ண அமாவாசை அன்று கொண்டாடப்படுகிறது.  சாவித்திரி, சத்யவான் மற்றும் யம்ராஜ் ஆகியோர் அடையாளமாக வழிபடப்படுகிறார்கள்.

மகா சனியோகத்தில் பயடையப்போகும் மூன்று ராசிகள்:

1) துலாம்: சனி எப்போதும் துலாம் ராசியில் உயர்ந்து பூர்வீகவாசிகளுக்கு மகிழ்ச்சியாக இருப்பதன் மூலம் இந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தருகிறார்.  ஜ்யேஷ்ட அமாவாசை அன்று சனி ஜெயந்தி மற்றும் வட் சாவித்ரி விரதத்தின் கலவையானது துலாம் ராசிக்காரர்களுக்கு பணம், பெயர், புகழ் மற்றும் வெற்றியைக் கொடுக்கப் போகிறது.  வீட்டில் மகிழ்ச்சி மற்றும் செல்வா செழிப்பு அதிகரிக்க போகிறது.

2) மகரம்: தற்போது நடைபெறும் இந்த அற்புதமான நிகழ்வால் சனிபகவானின் அருளால் மகர ராசிக்காரர்களுக்கு செல்வ செழிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.  உங்கள் மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். உங்கள் வேலைகளில் ஏதேனும் தடைகள் இருந்திருந்தால், இப்போது அவற்றை விரைவாக முடிக்க முடியும்.

3) கும்பம்: கும்ப ராசிக்கு அதிபதி சனி கிரகம், எனவே சனி ஜெயந்தி மற்றும் வட் சாவித்திரி விரதத்தின் மூலம் கும்ப ராசிக்காரர்கள் செல்வ செழிப்புடன் இருப்பார்கள்.  மேலும் நீங்கள் இந்த சனி ஜெயந்தி நாளில் எந்த வேலையை தொடங்குகிறீர்களோ அதற்கு நீண்ட காலத்திற்கு பலன் கிடைக்கும் மற்றும் இந்த காலத்தில் உங்களுக்கு மரியாதை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளும் உண்டு.

மேலும் படிக்க | வக்ர நிவர்த்தி அடையும் புதன்! பிரச்சனைகளில் இருந்து விடுபடும் ‘சில’ ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More