Home> Spiritual
Advertisement

சனிப்பெயர்ச்சி 2024: நாளை அஸ்தமனம், 3 ராசிகளுக்கு பாடாய் படுத்துவார் சனி

Shani Ast 2024: தற்போது நாளை அதாவது பிப்ரவரி 11, 2024 அன்று, சனி பகவான் கும்ப ராசியில் அஸ்தமனமாகப் போகிறார். சனி அஸ்தமனத்தால் சில ராசிக்காரர்களை பாடாய் படுவார்கள், பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.

சனிப்பெயர்ச்சி 2024: நாளை அஸ்தமனம், 3 ராசிகளுக்கு பாடாய் படுத்துவார் சனி

சனி அஸ்தமனம் பலன்கள் 2024: நீதியின் கடவுள் மற்றும் சூரியனின் மகனுனான சனி பகவான் நாளை கும்ப ராசியில் அஸ்தமிக்கப் போகிறார். சனியின் நிலையில் ஏற்படும் இந்த மாற்றம் அனைத்து ராசிகளையும் நேரடியாக பாதிக்கும். மார்ச் மாதம் வரை அஸ்தமன நிலையில் பயணம் செய்யும் சனி பகவான் மார்ச் 16ஆம் தேதி உதயமாவார். சூரிய குடும்பத்தில் இருக்கும் பஞ்சபூதங்களான செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் மற்றும் சனி ஆகிய 5 கிரகங்கள், சூரியனுக்கு ஒரு குறிப்பட்ட பாகை முன் அல்லது பின் இருப்பின் அது அஸ்தங்க நிலை அடைகிறது. அஸ்தங்கம் அடைந்த அந்த கிரகங்கள் சூரியனிடம் தனது வலிமையை இழந்து பாவத்துவம் அடைகிறது. அதன்படி சூரியனுக்கு சனிக்கும் 15 டிகிரி அஸ்தங்க பாகை அளவு உள்ளது. இந்த பாகை அளவு சூரியன் அந்த கிரகங்களுக்கு குறிப்பிட்ட பாகை அளவில் வரும் போது முழுமையாக அஸ்தங்கம் அடையும். அந்த நிலையில் அஸ்தங்கம் அடைந்த அந்த கிரகம் தனது ஆதிபத்திய வலுவை இழந்து, வெறும் காரகத்துவத்தை மட்டுமே தரக்கூடியதாக இருக்கும். எனவே நாளை முதல் மார்ச் 16 வரை அஸ்தங்கம் அடையும் சனி எந்த ராசிகளை பாடாய் படுத்தப் போகிறார் என்பதைப் பார்ப்போம்.

கடகம் (Cancer Zodiac Sign): சனி அஸ்தமிக்கும் போது, கடக ராசிக்காரர்களுக்கு நெகட்டிவ் தாக்கத்தை தரும். அதுமட்டுமின்றி சனியின் தாக்கத்தால் கடக ராசிக்காரர்களுக்கு சிரமம் ஏற்படும். கடக ராசியினர் அதிக சிரமத்தை சந்திக்க நேரிடும். மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் கஷ்டங்கள் ஏற்படக்கூடும். பொருளாதார ரீதியாகவும் சனிபகவான் உங்களை பாடாய் படுத்துவார். வாழ்க்கையில் தொல்லைகள் ஏற்படக் கூடும். சனியின் அஸ்தங்கத்தின் தாக்கத்தால் தொழிலில் நஷ்டம் ஏற்படக்கூடும்.

மேலும் படிக்க | Sun Transit: கும்பத்தில் சூரியன்: இந்த ராசிகள் மீது பண மழை... செல்வச்செழிப்பில் திளைப்பார்கள் 

மகரம் (Caprocorn Zodiac Sign): சனி அஸ்தமத்தால் மகர ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கும். மகர ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக எதிர்பாராத பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். கடினமாக உழைத்தால் மட்டுமே பலன் கிடைக்கும். அதேசமயம் பதவி உயர்வு கிடைக்க நிறைய சவால்களை சந்திக்க நேரிடும். மகர ராசிக்காரர்களும் உடல் ரீதியாகவும், ஆரோக்கியத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.

கும்பம் (Aquarius Zodiac Sign): கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி நடிந்து வருகிறது. மறுபுறம் சனி அஸ்தமனத்தின் போது கும்ப ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் அதிகமாகும். மேலும் நிதி நிலை மோசமடையும். வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகள் ஏற்படலாம். வாழ்க்கைத் துணையுடன் தேவையில்லாத வாக்குவாதங்கள் ஏற்படக் கூடும். தொழில் மற்றும் வியாபாரத்திலும் பல சவால்களை சந்திக்க நேரிடும். வேலையில் பல தடைகள் வந்து போகலாம்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | shukra gochar 2024: மார்ச் மாதம் சுக்கிரன் உச்சம்.. இந்த 5 ராசிகளுக்கு ராஜ கோடீஸ்வர வாழ்க்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ
 

Read More