Home> Spiritual
Advertisement

ஆண்டின் கடைசி பெயர்ச்சி இது! தனுசு ராசியில் வக்ரமாக சஞ்சரிக்கும் புதனின் தாக்கம்

Mercury Last transit 2022: இந்த ஆண்டின் கடைசி நாளில் நிகழும் புதன் கிரகத்தின் வக்ர பெயர்ச்சியால் யாருக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை தெரிந்துக் கொள்வோம். புத்தாண்டில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தும் புதனின் வக்ர சஞ்சாரத்தால் சிலருக்கு நன்மைகள் என்றால், சிலருக்கு நேரம் மோசமாகும்

ஆண்டின் கடைசி பெயர்ச்சி இது! தனுசு ராசியில் வக்ரமாக சஞ்சரிக்கும் புதனின் தாக்கம்

இந்த ஆண்டின் கடைசி நாளில் நிகழும் புதன் கிரகத்தின் வக்ர பெயர்ச்சியால் யாருக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை தெரிந்துக் கொள்வோம். புத்தாண்டில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தும் புதனின் வக்ர சஞ்சாரத்தால் சிலருக்கு நன்மைகள் என்றால், சிலருக்கு நேரம் மோசமாகும். பலருக்கு மத்திம பலன்கள் இருக்கும். 2022, 31 டிசம்பர் நள்ளிரவு 12:58 மணிக்கு இந்த பெயர்ச்சி நடைபெறும் என்பதால் சிலர் இதை புத்தாண்டின் முதல் கிரக பெயர்ச்சி என்றும் சொல்வார்கள். ஆனால், நமது பாரம்பரியப்படி, சூரிய உதயத்திற்கு பிறகே அடுத்த நாள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்பதால், புதனின் இந்த பெயர்ச்சி, 2022ஆம் ஆண்டின் இறுதி பெயர்ச்சியாகும். 

தனுசு ராசியில் புதன் வக்ர பெயர்ச்சியாக சஞ்சரிப்பதன் தாக்கம் 12 ராசிகளிலும் எதிரொலிக்கும். மேஷம் முதல் கன்னி வரையிலான ஆறு ராசிகளுக்கான புதன் வக்ர பெயர்ச்சியின் பலன்கள்...

மேஷம்
புதன் மூன்றாவது மற்றும் ஆறாம் வீட்டிற்கு அதிபதி மற்றும் மேஷ ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் இருக்கிறார். இது மேஷ ராசியனருக்கு மத்திமமான பலன்களைத் தரும். தொழில் மற்றும் பணியில், போட்டியாளர்களிடமிருந்து எதிர்ப்புகளை சந்திக்க நேரிடும்.  ஈகோ தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தனுசு ராசியில் சஞ்சரிக்கும் புதன், உங்கள் தூக்கத்தைக் கெடுக்கலாம், சிலருக்கு மன அழுத்தம் ஏற்படலாம்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் ஊனமுற்றோருக்கு உணவு வழங்கவும்.

மேலும் படிக்க | 30 வருடத்திற்கு பின் கும்பத்தில் சனி; நிம்மதி பெருமூச்சு விடும் ‘சில’ ராசிகள்!

ரிஷபம்
புதன் இரண்டாவது மற்றும் ஐந்தாம் வீட்டிற்கு அதிபதியாகவும், உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் அமர்கிறார். இதனால், வேலையில் சுணக்கம் ஏற்படும். வேலையில் தாமதம், எதிர்பார்த்த பதவி உயர்வு தள்ளிப்போவது என மன வருத்தம் ஏற்படும். காதல் உறவில் இருப்பவர்களுக்கு சிக்கல்கள் அதிகம் ஆகும்.

பரிகாரம்: சுக்கிரன் கிரகத்திற்கு அர்ச்சனை செய்யுங்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு, புதன் முதல் மற்றும் நான்காம் வீட்டிற்கு அதிபதியாகி ஏழாவது வீட்டில் இருக்கிறார். இதனால், வேலையில் சிறப்பாகச் செயல்பட்டு, நல்ல முன்னேற்றம் அடைய முடியும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். காதல் உறவுகள் இனிக்கும் காலம் இது. வாழ்க்கை துணை மற்றும் குடும்பத்தினருடனான உறவு மேம்படும். 

பரிகாரம்: லட்சுமி நாராயணரை வணங்குங்கள்  

மேலும் படிக்க | 21 நாட்களில் உங்கள் தலைவிதியை மாற்ற தனது ராசியை மாற்றும் புதனின் சஞ்சாரம் 

கடகம்
மூன்றாவது மற்றும் பன்னிரண்டாம் வீட்டை புதன் ஆட்சி செய்கிறார், இது கடக ராசிக்காரர்களுக்கு நன்மையைக் கொடுக்கும். பணியிடத்தில் உங்கள் முயற்சிகளில் வெற்றி பெற முடியும். ஆனால்  தொழில் வாழ்க்கையில் திருப்தி கிடைக்காமல் போகலாம். பண ரீதியாக, கடன்கள் இந்த காலகட்டத்தில் உங்களுக்குக் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல உறவைப் பேண முடியும். உடல் ஆரோக்கியத்திற்கு எந்த குறையும் வராது

பரிகாரம்: திங்கட்கிழமையன்று பார்வதி அன்னையை வணங்கவும்.  

மேலும் படிக்க | விருச்சிகத்தில் 'சதுர்கிரஹி யோகம்'; பண மழையில் நனையும் ‘3’ ராசிகள்!

சிம்மம்
புதன், சிம்ம ராசியின் இரண்டாவது மற்றும் பதினொன்றாம் வீட்டிற்கு அதிபதியாகவும், உங்கள் ராசியைப் பொருத்தவரை ஐந்தாவது வீட்டில் அமர்கிறார். இதனால், வேலையில் உங்களின் பகுப்பாய்வுத் திறன்களையும் புத்திசாலித்தனத்தையும் பயன்படுத்துவீர்கள். அதிகரித்து வரும் பணி அழுத்தத்தை சமாளிக்க வேண்டியிருக்கலாம். எதிர்பார்த்தபடி வருமானம் இருக்காது. தஉடல்நலம் மிகவும் நன்றாக இருக்காது, ஆனால் நீங்கள் எப்படியும் தீவிர பிரச்சனைகளை சந்திக்க மாட்டீர்கள்.

பரிகாரம்: “ஓம் புத்தாய நமஹ” என்று தினமும் 41 முறை ஜபிக்கவும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு முதல் மற்றும் பத்தாம் வீட்டிற்கு அதிபதியான புதன் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் இருக்கிறார். இதன் விளைவாக, பணியிடத்தில் முடிக்க வேண்டிய பணிகள் ஏராளமாக இருக்கும், பணிச்சுமையும், அழுத்தமும் அதிகரிக்கும். ஆரம்ப தடைகளுக்குப் பிறகு சில வருமானம் தரும் வணிக யோசனைகளைச் செயல்படுத்த முடியும். மன அழுத்தத்துடன் இருக்க வேண்டியிருக்கலாம். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெற வாய்ப்புகள் உண்டு.

பரிகாரம்: "ஓம் நமோ நாராயணா" என்று தினமும் 11 முறை ஜபிக்கவும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | கார்த்திகை மாத ராசிபலன்: முருகரின் அருள் பெற்ற ராசிக்கு ஏற்றம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More