Home> Spiritual
Advertisement

ராகுவின் மிகப்பெரிய மாற்றம்: இந்த ராசிகளுக்கு கொண்டாட்டம்... உச்சம் தொடுவார்கள்

Rahu Nakshatra Peyarchi: ராகுவின் நட்சத்திர மாற்றம் அனைத்து 12 ராசிகளுக்கும் தொழில், வேலை, வருமானம், ஆரோக்கியம் மற்றும் காதல் வாழ்க்கை போன்றவற்றில் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்தும். 

ராகுவின் மிகப்பெரிய மாற்றம்: இந்த ராசிகளுக்கு கொண்டாட்டம்... உச்சம் தொடுவார்கள்

Rahu Nakshatra Peyarchi: ஜோதிட சாஸ்திரத்தின் படி, அனைத்து கிரகங்களும் அவ்வப்போது தங்கள் ராசிகளையும் நட்சத்திரங்களையும் மாற்றுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கின்றது. சில கிரகங்கள் குறைந்த இடிவெளியிலும், சில கிரகங்கள் அதிக இடைவெளியிலும் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. 

ஜோதிட கணக்கீடுகளின் படி, இன்னும் சில நாட்களில், அதாவது ஜூலை 8, 2024 அன்று காலையில், ராகு தனது இயக்கத்தை மாற்றுவார். திங்கட்கிழமை காலை 04:12 மணிக்கு ராகு, உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆவார். ராகுவின் நட்சத்திர மாற்றம் அனைத்து 12 ராசிகளுக்கும் தொழில், வேலை, வருமானம், ஆரோக்கியம் மற்றும் காதல் வாழ்க்கை போன்றவற்றில் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்தும். இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அனுகூலமான நன்மைகள் ஏற்படும். இவர்களுக்கு பண வரவு அதிகமாகும். பொருளாதார நிலை வலுவடையும். வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம். 

விருச்சிகம் (Scorpio)

விருச்சிக ராசிக்காரர்களுக்கு ராகு பெயர்ச்சி சாதகமான பலன்களை அளிக்கும். நீங்கள் விரும்பும் நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். தொழிலதிபர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்ல திட்டமிடலாம். பெரிய நிறுவனங்களின் பங்குகளை வாங்குவது இந்த நேரத்தில் சாதகமாக இருக்கும். முன்னர் செய்த முதலீடுகளால் ஆதாயம் கிடைக்கும். வணிகர்களின் வருமானத்தில் திடீர் அதிகரிப்பு ஏற்படலாம். இதன் காரணமாக உங்களுக்கு கடன் தொல்லையிலிருந்து விரைவில் விடுதலை கிடைக்கும். 

மேஷம் (Aries)

அலுவலக பணிகளில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் ராகுவின் அருளால் பண பலம் அதிகரிக்கும். ஆன்மீக விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். தாய் வயிறு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.

மீனம் (Pisces)

அலுவலகத்தில் உங்கள் மேலதிகாரி உங்கள் பணிகளை பாராட்டுவார். சக ஊழியர்களின் ஒத்துழைப்பை பெறுவீர்கள். பங்குகள் மற்றும் பிற முதலீடுகளை இப்போது செய்யலாம். இதனால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். மீன ராசி மாணவர்களுக்கு இப்போது பல வெற்றிகள் கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் பல வித வெற்றிகளை காண்பார்கள். 

மேலும் படிக்க | யாரிடம் நெருங்கவே கூடாது? யாரிடம் விலகியிருந்தால் வெற்றி? சாணக்கியர் சொல்லும் அறிவுரை!

கடகம் (Cancer)

கடக ராசிக்காரர்களுக்கு ராகு நட்சத்திர பெயர்ச்சியால் பணி இடத்தில் ஊதிய உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். தொழிலதிபர்கள் விரைவில் வெளிநாடு செல்லும் வாய்ப்பை பெறுவார்கள். இந்த வெளிநாட்டு பயணங்களால் அனுகூலமான நன்மைகள் ஏற்படும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி இடையே அன்பும் புரிதலும் அதிகரிக்கும். குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். 

துலாம் (Libra)

ராகு நட்சத்திர பெயர்ச்சி துலா ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தொழிலதிபர்கள் புதிய பெரிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள். இதனால் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். திடீர் வருமானம் கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு வேலை, வியாபாரத்தில் அமோக வெற்றி... லாபம் அதிகரிக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More