Home> Spiritual
Advertisement

சுக்கிரன் இந்த பாவகத்தில் இருந்தால் அரசு வேலை கட்டாயம் பெறும் ராசிக்காரர்கள்

ஜாதகம் என்பது ஒருவரின் வாழ்க்கையை முடிவு செய்வதாக நம்பப்படுகிறது. அனைத்து திறமைகள் இருந்தாலும் தனக்கு உரிய வாழ்க்கை கிடைக்கவில்லை என்று வருந்துபவர்களின் எண்ணிக்கை உலகத்தில் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

சுக்கிரன் இந்த பாவகத்தில் இருந்தால் அரசு வேலை கட்டாயம் பெறும் ராசிக்காரர்கள்

ஜாதகம் என்பது ஒருவரின் வாழ்க்கையை முடிவு செய்வதாக நம்பப்படுகிறது. அனைத்து திறமைகள் இருந்தாலும் தனக்கு உரிய வாழ்க்கை கிடைக்கவில்லை என்று வருந்துபவர்களின் எண்ணிக்கை உலகத்தில் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

அவரவர் பிறந்த ஜாதகத்தின்படி வாழ்க்கை அமையும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. படிப்பு, திறமை, முயற்சி, உழைப்பு என அனைத்தும் இருந்தாலும் வேலை கிடைப்பது என்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது.

இளம் வயதில் கல்வியை முடித்த பிறகு வேலை சரியாக அமைந்தால்தான் திருமணம் நடைபெறும் என வாழ்க்கையின் சுழற்சி மாறிக் கொண்டே இருக்கிறது. 

மேலும் படிக்க | நாளை முதல் இந்த 5 ராசிக்காரர்களின் தொழிலில் இருந்த தடைகள் நீங்கும்

வேலையிலும், அது அரசு உத்யோகமாக இருக்க வேண்டும் என்று சிலர் விரும்புவார்கள். சரி, அரசுப் பணி யாருக்கு கிடைக்கும்? இதில் ஜோதிடம் என்ன சொல்கிறது?

லக்னாதிபதியும் இரண்டாம் அதிபதியும் இணைந்து இரண்டாம் பாவகத்தில் இருப்பவர்களுக்கு அரசுத் துறையில் வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்.

லக்னத்திற்கோ அல்லது ஏழாம் இடத்தின் அதிபதிக்கோ ஐநதாம் இடத்தில் குரு அல்லது சுக்கிரன் அல்லது சந்திரன் இருப்பவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும்.

மேலும் படிக்க | கடக ராசியை பாடாய் படுத்தும் அஷ்டம சனி: ஜூலை 13ல் இருந்து நிம்மதி பெருமூச்சு விடலாம்

நவாம்சத்திற்கு பத்தாம் இடத்தில் சூரியன், சுக்கிரன் இருப்பதும், குருவும், புதனும் இணைந்து பலம் பெறுவதும் அரசு உத்யோகத்தைப் பெற்றுத் தரும். 

குருவும், ஐந்தாம் வீட்டின் அதிபதியும் இணைந்து பத்தாம் இடத்தில் ஒருவருக்கு இருந்தால் அவர் அரசு வேலை பார்ப்பவராக இருப்பார்.

அரசின் முக்கியப் பதவியில் இருப்பவர்களின் ஜாதகத்தில் சூரியன், சந்திரன், இணைந்து பலம் பெற்று இருப்பார்கள். அதோடு, குருவும், சுக்கிரனும், பத்தாம் இடத்திற்கு சம்பந்தம் பெற்றவர்களாக இருப்பார்கள். அவர்கள் மீது சனியின் பார்வை இல்லாமலிருக்க வேண்டும் என்பது அவசியம் ஆகும். 

மேலும் படிக்க | சனீஸ்வரருக்கு கோபம் ஏற்படுத்தும் செயல்கள்: இதை கண்டிப்பாக செய்ய வேண்டாம்

அதேபோல, செவ்வாய் 3,6,10,11-இல் இருக்கும் நிலையில், செவ்வாயை குரு பார்த்தால் அரசு உத்தியோகம் கண்டிப்பாக கிடைக்கும். இவர்கள் பணியில் இருந்து இயல்பான ஓய்வு பெறுவார்களே தவிர, தானாக முன்வந்து, விருப்பஓய்வு பெறமாட்டார்கள்.

லக்னாதிபதி பத்தாம் இடத்திலும் பத்தாம் இடத்தின் அதிபதி 9ம் இடத்திலும் இருந்தால் ஒருவருக்கு அரசு உத்யோகம் கட்டாயமாக கிடைக்கும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சில நாட்களில் சனியின் வக்ர பெயர்ச்சி, 4 ராசிக்காரர்களுக்கு பணக்கார யோகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More