Home> Spiritual
Advertisement

அக்டோபரில் பெரிய கிரகங்களின் மாற்றம்: இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சி மழை, செல்வம் பெருகும்

Planets Transits in October: அக்டோபர் மாதத்தில் எந்தெந்த கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றவுள்ளன என்பதையும் அதனால் ராசிகளுக்கு கிடைக்கப்போகும் பலன்களை பற்றியும் இந்த பதிவில் காணலாம். 

அக்டோபரில் பெரிய கிரகங்களின் மாற்றம்: இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சி மழை, செல்வம் பெருகும்

அக்டோபரில் கிரகங்கள் பெயர்ச்சி: ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுகிறது அல்லது தனது இயக்கத்தை மாற்றுகிறது. இந்த மாற்றங்களின் பலன் அனைத்து 12 ராசிகளிலும் தெரியும். அக்டோபர் மாதத்தில் 7 கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றப்போகின்றன. இதனால் பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும். பணம் ஈட்ட அதிக வாய்ப்புகள் கிடைக்கும். அக்டோபர் மாதத்தில் எந்தெந்த கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றவுள்ளன என்பதையும் அதனால் ராசிகளுக்கு கிடைக்கப்போகும் பலன்களை பற்றியும் இந்த பதிவில் காணலாம். 

அக்டோபர் 2022 இல் கிரக மாற்றங்கள்:

- மிதுன ராசியில் செவ்வாய் பெயர்ச்சி: அக்டோபர் 16, 2022
- துலா ராசியில் சூரியன்: அக்டோபர் 17 2022 
- துலா ராசியில் சுக்கிரனின் பெயர்ச்சி: 18 அக்டோபர் 2022
- மகர ராசியில் சனியின் நேர் மாற்றம்: 23 அக்டோபர் 2022
- புதன் துலாம் ராசிக்குள் நுழைகிறது: 26 அக்டோபர் 2022
- மேஷத்தில் வியாழன்: அக்டோபர் 28, 2022

அக்டோபர் மாதத்தில் மேற்கூறிய கிரகங்களின் சஞ்சாரமும், நிலை மாற்றமும் சில ராசிக்காரர்களுக்கு மிக நல்ல நேரத்தை கொண்டுவரும். இதனால், இவர்கள் செல்வம், செழிப்பு ஆகியவற்றைப் பெறுவார்கள்.

மேலும் படிக்க | துலாம் ராசியில் நுழையும் சூரியன்; இந்த '5' ராசிகளுக்கு பண இழப்பு ஏற்படலாம்! 

புதனின் நேர் இயக்கம்: ராசிகளில் அதன் விளைவு

புதன் வக்ர நிலையில் இருந்து நேர் இயக்கத்துக்கு மாறுவதால், துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம் துவங்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பார்கள். அவர்களின் வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.

செவ்வாய் மாற்றத்தின் விளைவு

மிதுன ராசியில் செவ்வாயின் சஞ்சாரம் மேஷம் மற்றும் மீன ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான காலகட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. அவர்களின் வருமானம் அதிகரிக்கும். பண வரவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

சூரியனின் ராசி மாற்றத்தின் பலன்கள்

சிம்மம், மகர ராசிக்காரர்கள் சூரியனின் ராசி மாற்றத்தால் நல்ல பலன்களைப் பெறுவார்கள். தங்கள் தொழிலில் லாபம் அதிகரிக்கும். பணியிடத்தில் பணிகளை முடிக்க இது உதவும். சக ஊழியர்களின் ஆதரவையும் பெறுவீர்கள்.

இந்த ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் துலாம் ராசியில் சஞ்சரிப்பது சாதகமாக இருக்கும்

துலாம் ராசியில் சுக்கிரன் சஞ்சாரம் செய்வது மேஷம் மற்றும் கடக ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். பண ஆதாயம் நன்றாக இருக்கும். தங்கள் துறையில் வெற்றி பெறுவார்கள். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிகும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனியின் அருளால் 3 ராசிகளுக்கு அகண்ட சாம்ராஜ்ஜிய ராஜயோகம்: தீபாவளி முதல் பொற்காலம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More