Home> Spiritual
Advertisement

சந்திர கிரகணம் 2022: ‘சில’ ராசிகளுக்கு பண இழப்பு... ‘சில’ ராசிகளுக்கு பண வரவு!

சந்திர கிரகணம் பூமியில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்றும், இயற்கை பேரழிவு மற்றும் காலநிலை மாற்றத்தை உண்டு பண்ணும் என்றும் ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

சந்திர கிரகணம் 2022: ‘சில’ ராசிகளுக்கு பண இழப்பு... ‘சில’ ராசிகளுக்கு பண வரவு!

சந்திர கிரகணம் 2022: அக்டோபர் 25 ஆம் தேதி சூரிய கிரகணத்திற்கு சரியாக 15 நாட்களுக்குப் பிறகு நவம்பர் 8 ஆம் தேதி ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் நகழ உள்ளது. ஐப்பசி மாத அமாவாசை அன்று சூரிய கிரகணமும், ஐப்பசி மாத பௌர்ணமி அன்று சந்திர கிரகணமும் நகழ்கிறது. 15 நாட்களில் அடுத்தடுத்து இரண்டு கிரகணம் வருவது என்ன விளைவை ஏற்படுத்தும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது பூமியில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்றும், இயற்கை பேரழிவு மற்றும் காலநிலை மாற்றத்தை உண்டு பண்ணும் என்றும் ஜோதிடர்கள் கணித்துள்ளனர். இந்நிலையில், இந்த சந்திர கிரகணம் அனைத்து ராசிக்காரர்களையும் எப்படி பாதிக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

மேஷம்: இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் மேஷ ராசிக்காரர்களுக்கு பாதகமான பலன்களைத் தரும். அவர்கள் பணத்தை இழக்கலாம். மேலும் உடல் நலப் பிரச்சினைகள் இருக்கலாம்.

ரிஷபம்: சந்திர கிரகணத்தின் பலன் கலவையானதாக இருக்கும். பண விவகாரங்கள் சாதகமாக இருக்கும். ஆனால் போட்டியில் தோல்வி ஏற்படலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மேலும் படிக்க | துலாமில் இணையும் புதன்-சுக்கிரன்; லக்ஷ்மி நாராயண யோகம் பெறும் '3' ராசிகள்!

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணம் நல்ல பலன்களை தரும். பண வரவு மகிழ்ச்சியைத் தரும். வராமல் தடைபட்ட பணமும் கிடைக்கும். புதிய வேலையில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு.

கடகம்: கடக ராசியின் கடைசி சந்திர கிரகணம் பிரச்சனைகளை கொடுக்கும். தொழிலில் பிரச்சனைகள் வரலாம். உடல்நலப் பிரச்சினைகள் இருக்கலாம்.

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணம் பலன்களில், உறவு முறை சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கையும் காதல் உறவும் வலுவாக இருக்கும். திருமணம் நிச்சயிக்கப்படலாம்.

கன்னி: கன்னி ராசியினருக்கு சந்திர கிரகணம் கலவையான பலன்களை தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு பெறலாம். எனினும் குடும்பத்தில் டென்ஷன் வரலாம். சொத்துக்களை வாங்கும்வாய்ப்பும் உள்ளது.

துலாம்: சந்திர கிரகணத்தால் துலாம் ராசிக்காரர்களுக்கு பண இழப்பு ஏற்படும். புத்திசாலித்தனமாக பணத்தை செலவிடுங்கள். இல்லையெனில், நஷ்டம் ஏற்படலாம். பட்ஜெட் குழப்பமாக இருக்கலாம்.

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு கடந்த சந்திர கிரகணம் நன்றாக இருக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். சில நல்ல செய்திகள் கிடைக்கும்.

தனுசு: சந்திர கிரகணத்தால் தனுசு ராசிக்காரர்களின் வாழ்வில் ஏற்ற, இறக்கம் ஏற்படும். தொழில் - வியாபாரத்தில் சில சிரமங்கள் ஏற்படலாம். இருப்பினும், பொறுமையுடன் விஷயங்களை கையாண்டால் நிலைமையை மேம்படுத்தலாம்.

மேலும் படிக்க | நவம்பர் ராசிபலன்: யாருக்கு ‘சூப்பர்’... யாருக்கு ‘சுமார்’; பலன்கள் கூறுவது என்ன!

மகரம்: சந்திர கிரகணம் மகர ராசிக்காரர்களுக்கு மதிப்பையும் மரியாதையையும் தரும். புதிய கார் வாங்கலாம். அலுவலகத்தில் சில புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணம் நல்ல பலனைத் தரும். மரியாதை அதிகரிக்கும். அலுவலகத்தில் சில புதிய பொறுப்புகள் கிடைக்கும். குடும்பத்தினருடன் நல்லுறவு இருக்கும். கூட்டாளரைக் காணலாம்.

மீனம்: சந்திர கிரகணம் மீன ராசிக்காரர்களின் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். பண இழப்பு ஏற்படலாம். புத்திசாலித்தனமாக செலவு செய்யுங்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Astro: வாழ்க்கையை புரட்டிப் போடும் குரு சாண்டள யோகம்; சில எளிய பரிகாரங்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Read More