Home> Spiritual
Advertisement

Venus Dosh: பேர் மட்டும் தான் லட்சுமி நாராயண தோஷம்! உஷராக இருக்க வேண்டிய ‘3’ ராசிகள்

Lakshmi Narayan Raj Dosh: புதன்-சுக்கிரனின் சஞ்சாரம் லக்ஷ்மி நாராயண தோஷத்தால் பணப் பிரச்சனைகளை எதிர்கொள்ளப்போகும் ராசிகள்

Venus Dosh: பேர் மட்டும் தான் லட்சுமி நாராயண தோஷம்! உஷராக இருக்க வேண்டிய ‘3’ ராசிகள்

லக்ஷ்மி நாராயண தோஷம்: ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட நேரத்தில் ராசியை மாற்றுகிறது. கிரகங்களின் பெயர்ச்சிகள், அனைத்து 12 ராசிகளையும் பாதிக்கும் என்பதால், பல வித மாற்றங்கள் நிகழும். சிலருக்கு சுப யோகமும் சிலருக்கு அசுப பலன்களும் ஏற்படும். புதன் கிரகம் டிசம்பர் 28 ஆம் தேதி ராசி மாறப் போகிறது, அதே நேரத்தில் சுக்கிரன் டிசம்பர் 29 ஆம் தேதி ராசி மாறுகிறார். புதன்-சுக்கிரனின் சஞ்சாரம் லக்ஷ்மி நாராயண ராஜயோகத்தை உருவாக்குகிறது, இது மிகவும் மங்களகரமானது.

இன்னும் சில நாட்களில் உருவாக இருக்கும் லக்ஷ்மி நாராயண யோகத்தால் சிலருக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், இதை தோஷம்m என்றும் சொல்வார்கள். சிலருக்கு மோசமான விளைவுகளையும் ஏற்படுத்தும் லட்சுமி நாரயண தோஷம் என்ன செய்யும்? கிரகங்களின் இருப்பு ஒருவருக்கு நன்றாக இருக்கும்போது, வாழ்க்கையில் சுப விஷயங்கள் நடக்கும் என்பது போல, சரியான இடங்களில் கிரகங்கள் இல்லாவிட்டால், சிரமங்களை சந்திக்க நேரிடும்.

ரிஷபம்: புதன் - சுக்கிரன் சஞ்சாரத்தால் உருவாகும் லக்ஷ்மி நாராயண தோஷத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு சற்று பின்னடைவு ஏற்படும். பண விஷயத்தில் கவனமாக இருக்கவும். பணிகளில் முட்டுக்கட்டையும் தடையும் ஏற்படலாம். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். குறிப்பாக வெளிநாட்டில் பணிபுரிபவர்கள், எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

மேலும் படிக்க | மகரத்தில் இணையும் சனி - புதன் - சுக்கிரன்; ‘இந்த’ ராசிகளுக்கு பம்பர் பலன்கள்!

கடகம்: புதன், சுக்கிரன் ஆகிய ராசிகளின் மாற்றத்தால் உருவாகும் லக்ஷ்மி நாராயண யோகம், கடக ராசிக்காரர்களுக்கு, தோஷமாக இருக்கும். பணத்தை சிக்கவைக்கும், எதிர்பாராத செலவு, உங்கள் திட்டமிட்ட சேமிப்பை செய்ய முடியாத சூழலை உருவாக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் எச்சரிக்கையாக இருந்தால் நிம்மதியாக இருக்கலாம்.  

தனுசு: லக்ஷ்மி நாராயண தோஷம், தனுசு ராசிக்காரர்களுக்கு திடீர் செலவுகளைத் தரும். அன்னை லட்சுமியின் கடைக் கண் பார்வை உங்கள் மீது இருப்பதால், வருமானம் அதிகரித்தாலும், செலவுகளுக்கும் பஞ்சம் இருக்காது. எதிர்பார்த்திருந்த சம்பள உயர்வு அல்லது கூடுதல் வருமானம் உடனடியாக கிடைக்காது. வியாபாரத்தில் கவனமாக இருக்கவும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | நவம்பர் மாதத்தில் யோகத்தை அளிக்கும் சூரியன் புதன் சுக்கிரன் பெயர்ச்சி! 4 ராசிக்கு சூப்பர் 

மேலும் படிக்க | Shani+Mercury+Venus: 3 கிரகங்களில் இணைவால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Read More