Home> Spiritual
Advertisement

இன்னும் 16 நாட்களே.. சனி ஆட்டம் ஆரம்பிக்கும், இந்த ராசிகளுக்கு உச்ச ராஜயோகம்

Sani Peyarchi Palan 2023 Tamil: நவ கிரகங்களில் சனி பகவான் கர்ம காரகன் என்று அழைக்கப்படுகிறார். அந்த வகையில் திருநள்ளாறு சனி பகவான் ஆலயத்தில் வரும் டிசம்பர் 20ஆம் தேதி சனி பெயர்ச்சி நிகழ உள்ளது. திருக்கணித பஞ்சாங்கப்படி, இந்த பெயர்ச்சி சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் திடீர் திருப்புமுனை ஏற்படப்போகிறது.

இன்னும் 16 நாட்களே.. சனி ஆட்டம் ஆரம்பிக்கும், இந்த ராசிகளுக்கு உச்ச ராஜயோகம்

சனி பெயர்ச்சி பலன்கள் 2023: நீதியின் கடவுளான சனி பகவான் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டு காலம் சஞ்சரிக்கக்கூடியவர். ஒரு ராசியில் சனி பெயர்ச்சி அடையும் போது அந்த ராசிக்கும் அதற்கு முன் மற்றும் பின் உள்ள ராசிகளுக்கு ஏழரை சனியாக அமர்ந்திருப்பார். சனி பகவான் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் சர்வ முட்டாளைக்கூட மிகப்பெரிய பட்டம், பதவி என்று அமர வைத்து விடுவார். பல காரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக் காட்டும் சர்வ வல்லமை படைத்த, ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனியாகும். எனவே தான் ஜோதிடத்தில் சனியைபோல் கொடுப்பவனும் இல்லை கெடுப்பவனும் இல்லை என்று கூறுகின்றனர். 

இந்நிலையில் கர்ம காரகனியான சனி பகவான் திருநள்ளாறு ஆலயத்தின் படி வரும் டிசம்பர் 20ஆம் தேதி பெயர்ச்சி அடைகிறார். திருக்கணித பஞ்சாங்கப்படி, இந்த பெயர்ச்சி சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் திடீர் திருப்புமுனை ஏற்படப்போகிறது. எனவே சனிபகவானால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்: சனிபகவானின் அருளால் புதிய வாகனம் வாங்குவீர்கள். வேலையில்லாதவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். சம்பளம் உயரும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். வருமானம் அதிகரிப்பு உண்டாகும். அதுமட்டுமின்றி நீங்கள் அசையும் மற்றும் அசையா சொத்துக்களால் அமோக லாபம் பெறுவீர்கள். வெளிநாடு போகும் யோகம் உங்களுக்கு உண்டாகும். வியாபாரம் தொழிலில் இருந்த பிரச்சினைகள் ஒரு வழியாக தீர்வுக்கு வரும். பணியிடத்தில் கவுரவம் அந்தஸ்து கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். 

ரிஷபம்: சனி பகவான் உங்களுடைய ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் பெயர்ச்சி அடைவதால், நீங்கள் செய்யும் தொழில் வளர்ச்சியடையும். பட்டம், பதவி, புகழ் தேடி வரும். சுய தொழில் தொடங்கலாம். மிகப்பெயர் வளர்ச்சியும் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் உங்களுக்கு கிடைக்கும். இறை வழிபாட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வெளிநாடு வேலைக்கு செல்வதற்கு நல்ல நேரம் கூடி வந்துள்ளது. உங்களின் தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். 

மேலும் படிக்க | இன்றைய ராசிபலன்: இன்று இந்த ராசிகளுக்கு லக்கி தினம், ராஜயோகம்

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு பாக்ய சனி நடைபெறும் என்பதால் குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் அனைத்தும் நீங்கும். நடக்கவிருக்கும் சனி பெயர்ச்சி உங்களுக்கு யோகங்களை அள்ளித்தரப்போகிறது. சனி பகவான் மிகச்சிறந்த தன யோகத்தை தரப்போகிறார். லாப ஸ்தானத்தின் மீது சனியின் பார்வை விழுவதால் பொருளாதார தடைகள் நீங்கும். நிறைய பணவரவும், அசையா சொத்துக்கள் மூலம் எதிர்பாராத லாபமும் கிடைக்கும். 

கன்னி: இந்த சனி பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு பொன்னான காலமாக இருக்கும். முழு அதிகாரத்தையும் சனி தருவார். இதுவரை நிறைய சறுக்கலை சந்தித்திருப்பீர்கள். சனி தனது சொந்த வீட்டில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் இந்த கால கட்டத்தில் கடன் நோய் எதிர்ப்பு போன்றவை கட்டுப்படும். வெற்றிகள் தேடி வரும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். முழு ராஜயோகம் கிடைக்கப் போகிறது. நோய்கள் தீரும் வம்பு வழக்குகள் சாதகமாக முடியும். 

தனுசு: கஷ்டங்கள், கவலைகள் நீங்கப்போகிறது. உங்களுடைய வாழ்க்கையில் இனி நல்லவைகளை மட்டுமே அனுபவிக்கப் போகிறீர்கள். இதுநாள் வரை பட்ட கஷ்டங்களுக்கு விடிவு காலம் பிறக்கப் போகிறது. குழந்தை பாக்கியம் உண்டாகும். உயர் பதவி யோகம் உங்களை தேடி வரும். புதிய தொழில் அமையும். இனி உங்களுக்கு முழுமையான ராஜ யோகம் தேடி வரப்போகிறது புகழின் உச்சிக்கு செல்லப்போகிறீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | சனி பெயர்ச்சி பலன் 2023.. கோடீஸ்வர ராசிக்காரர்கள் இவர்கள்தான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More