Home> Spiritual
Advertisement

செப்டம்பர் மாதத்தில் ராசி மாறும் சுக்கிரன், யாருக்கெல்லாம் ராசியானவராக இருப்பார்? சுக்கிர பெயர்ச்சி பலன் அறிவோம்...

Venus Transit september 12 : மகிழ்ச்சி, வெற்றி என வாழ்க்கையில் தேவைப்படும் அனைத்தையும் கொடுக்கும் சுக்கிரனின் செப்டம்பர் மாதப் பெயர்ச்சி எந்த ராசிக்கு எப்படி இருக்கும்? தெரிந்துக் கொள்வோம்...

செப்டம்பர் மாதத்தில் ராசி மாறும் சுக்கிரன், யாருக்கெல்லாம் ராசியானவராக இருப்பார்? சுக்கிர பெயர்ச்சி பலன் அறிவோம்...

பெண் கிரகமான சுக்கிரன் செப்டம்பர் 18, 2024 அன்று மதியம் 13:42 மணிக்கு துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகவிருக்கிறார். துலாம் ராசியில் சஞ்சரிக்கும் சுக்கிரன் யாருக்கு என்ன செய்வார் தெரிந்துக் கொள்வோம். ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் வலுவான நிலையில் இருந்தால், திருப்தி, ஆரோக்கியம் மற்றும் மனவலிமை அதிகமாக இருக்கும். மகிழ்ச்சி, வெற்றி என வாழ்க்கையில் தேவைப்படும் அனைத்தையும் கொடுக்கும் சுக்கிரனின் செப்டம்பர் மாதப் பெயர்ச்சி எந்த ராசிக்கு எப்படி இருக்கும்? தெரிந்துக் கொள்வோம்.  

சுக்கிரனின் செப்டம்பர் மாதப் பெயர்ச்சி எந்த ராசிக்கு எப்படி இருக்கும்?

மேஷம்
அரசு துறைகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். விவேகத்துடன் செயல்படுவது நல்லது. ஆர்வமின்மை  செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு என மந்தமாகவே இருக்கும். பொழுதுபோக்குகளால் விரயம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களில் இருந்து லாபம் கிடைக்கும்.

ரிஷபம் 
கல்விப் பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். ரிஷப ராசிக்காரர்கள் மனதில் அன்பு அதிகரிக்கும் நேரம் இது. கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில் கவனமாக செயல்படவும். சொத்துக்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.  கடினமான வேலைகளும் சாதாரணமாக நடந்து முடியும் காலம் இது.

மிதுனம் 
கலை துறைகளில் ஈடுபாடு உள்ளவர்கள் புதிய முடிவுகளை எடுப்பார்கள், பிறரின் எண்ணங்களை புரிந்து கொள்ளும் மிதுன ராசிக்காரர்களுக்கு இருந்துவந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். மருத்துவம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். வியாபார போட்டிகளை சுலபமாக வெற்றி கொள்வீர்கள்.  

கடகம்
மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும் காலம் இது, தேவையில்லாத சிந்தனைகளை குறைத்துக் கொள்வது நல்லது. முதலீடு சார்ந்த விஷயங்களில் கவனம் அவசியம். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை புரிந்து கொள்வதற்கு அனுபவம் தேவை. கலைத்துறையில் ஆர்வமும், ஈடுபாடும் அதிகரிக்கும். 

மேலும் படிக்க | Guru Vakra Peyarchi 2024 : ரிஷபத்தில் வக்ரமாகும் குரு! வக்ர இயக்கத்தால் பணமழையில் நனைந்து மகிழும் ராசிகள்!

சிம்மம் 
உயர் கல்வி படிக்க ஆசைப்படுபவர்களுக்கு ஏற்ற காலம் இது. அரசு தொடர்பான செயல்களில் அனுகூலம் உண்டாகும். கால்நடை தொடர்பான தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு நல்ல காலம் இது.  பயணங்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிரிகளாக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். மனதில் மகிழ்ச்சி பொங்கும், புதிய பொறுப்புகள் கிடைக்கும்.  

கன்னி
உடன்பிறந்தவர்களின் ஆதரவுடன் செய்யும் செயல்களில் திருப்தியான சூழல் ஏற்படும் காலம் இது. சில வேலைகளை செய்து முடிக்க அனைவரின் ஒத்துழைப்பும் தேவைப்படும். கல்வியில் முன்னேற்றம் பெற் மாணவர்கள் வெள்ளிக் கிழமைகளில் மகாலட்சுமி வழிபாடு செய்வது நல்லது.

துலாம்
நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளும் காலம் இது. குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளவும். வெளி வட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். விற்பனை சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும்.  

விருச்சிகம்
மனதில் இருக்கும் ரகசியங்களை பகிர்வது தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதால், ரகசியங்களை ரகசியமாகவே வைத்துக் கொள்ளவும். எதிலும் பகுத்தறிந்து செயல்படுவது நல்லது. பிறர் கருத்துகளுக்கு மதிப்பளித்துச் செயல்படவும். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மேம்படும். விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.

தனுசு
ஆன்மீகப் பணிகளில் ஈடுபடும் காலம் இது. ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். வெளி வட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நிர்வாகப் பணிகளில் கவனத்துடன் செயல்படவும். வாழ்க்கை துணையுடன் வெளியூர் பயணங்கள் சென்று வர வாய்ப்பு ஏற்படும்.  

மேலும் படிக்க | போதாத காலம் வரப்போகுது எச்சரிக்கை! சூரியன் பெயர்ச்சியால் 5 ராசிகளுக்கு மோசம்!

மகரம்
வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். மூத்தவர்களின் ஆசி கிடைக்கும், குடும்பத்தினர் சாதகமாக செயல்படுவார்கள். விரும்பிய பொருட்களை வாங்க சந்தர்ப்பங்கள் வாய்க்கும். சுக்கிரனின் இந்த பெயர்ச்சிக் காலத்தில் மகர ராசிக்காரர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்து வேலை செய்வது நல்லது.  

கும்பம்
உங்கள் அருமையான குணத்தை பிறர் புரிந்துக் கொள்ளும் நேரம் இது. செல்ல விரும்பிய இடங்களுக்கு சென்று வருவீர்கள். உங்களுடன் போட்டிப் போட்டுக் கொண்டிருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். குடும்பத்தினரின் ஆதரவால் நன்மை உண்டாகும், காரிய அனுகூலம் ஏற்படும். 

மீனம்
தந்தைவழி உறவுகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். பணிபுரிபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் உண்டாகும். பயணம் சார்ந்த எண்ணங்களில் மாற்றம் ஏற்படும், கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும், பணப் பிரச்சனைஅக்ள் முடிவுக்கு வரும்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | ரிஷபத்தில் குரு வக்ரமானால் பாவம் மோசமான காலத்தை அனுபவிக்கப் போகும் ராசிகள்! இவர் வக்ர குரு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More