Home> Spiritual
Advertisement

இன்னும் 8 நாட்களில் சூரிய பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ராஜயோகம், மகிழ்ச்சியில் திளைப்பார்கள்

Suriya Peyarchi Palangal: சூரியன் கிரகம் இன்னும் 8 நாட்களில் கடக ராசியில் பெயர்ச்சி அடையப் போவதால், சில ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வேலையில் பல நன்மைகளைப் பெறப் போகிறார்கள்.

இன்னும் 8 நாட்களில் சூரிய பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ராஜயோகம், மகிழ்ச்சியில் திளைப்பார்கள்

surya peyarchi palangal: ஜோதிட சாஸ்திரத்தின் படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. இந்த மாற்றம் கிரக பெயர்ச்சி என அழைக்கப்படுகிறது. இந்த கிரகப்பெயர்ச்சிகளின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். சில ராசிகளில் இவற்றால் சுப விளைவுகளும் சில ராசிகளில் பிரச்சனைகளும் ஏற்படலாம்.

கிரகங்களில் சூரியனுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. ஏனெனில் கிரகங்களின் ராஜாவாக சூரியன் கருதப்படுகிறது. இந்த சூரிய கிரகமானது ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றும். சூரியனின் ராசியில் ஏற்படும் மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஜாதகத்தில் சூரியன் சுகமான இடத்தில் இருந்தால் அவரது வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவும் ஒளிமயமாகவும் இருக்கும். ஒரு மாதத்திற்கு ஒரு முறை சூரியன் பெயர்ச்சி ஆகிறார். சூரியனின் பெயர்ச்சி ராசிகளில் மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் கொண்டு வருகின்றது. இந்நிலையில் வருகிற ஜூன் 16 ஆம் தேதி சூரியன் பெயர்ச்சியாக உள்ளார். சூரியன் மிதுன ராசியிலிருந்து கடக ராசியில் பெயர்ச்சியாவார். சூரியன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும். இந்த ராசிக்காரர்களுக்கு ஆக்கப்பூர்வமான பலன்கள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு இருக்கும். பண வரவு அதிகமாகும். இந்நிலையில் அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.

மேலும் படிக்க | உத்திரட்டாதியில் வக்ரமடையும் சனி... அடுத்த ஒரு மாதம் கஷ்ட காலம் தான்... சில பரிகாரங்கள் இதோ..!!

மிதுனம் (Gemini Zodiac Sign): மிதுன ராசியின் அதிபதி கிரகம் புதன் ஆகும். மேலும் தற்போது மிதுன ராசிக்காரர்களுக்கு பணவீட்டில் சூரியன் பெயர்ச்சி அடையப் போவதால் சுப பலன்கள் கிடைக்கும். குறிப்பாக பண மழை கொட்டும். பண கஷ்டங்கள் நீங்கும். புதிய வருமானம் ஈட்டலாம். நிதி சிக்கல்கள் நீங்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பண வரவு அதிகமாகும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் முழுமையான ஆதரவு கிடைக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். 

கன்னி (Virgo Zodiac Sign): கன்னி ராசிக்காரர்கள் சூரிய பெயர்ச்சியால் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். ஏனெனில் சூரியன் இந்த ராசியின் பதினோராம் வீட்டில் பெயர்ச்சி அடையப் போகிறார், இதனால் உத்தியோகத்தில் உயர் பதவியை நீங்கள் பெறலாம். வேலை தேடுபவர்களுக்கு நினைத்த இடத்தில் வேலை கிடைக்கும். வியாபாரத்தில் உயர்வு கூடும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிக்கிறீர்கள் என்றால் இப்போது உங்களின் பணிக்கேற்ப பதவி உயர்வை நீங்கள் பெறலாம்.

துலாம் (Libra Zodiac Sign): கடக ராசியில் சூரிய பெயர்ச்சி அடையப் போவதால், துலாம் ராசிக்காரர்களுக்கு தொழிலில் சிறப்பான மாற்றம் ஏற்படும். குறிப்பாக பெரிய நிறுவனத்தில் இருந்து வேலை வாய்ப்பி பெறலாம். இல்லையெனில் பணிப்புரியும் இடத்திலேயே பதவி உயர்வு பெறலாம். புதிய பணிகளை இப்போது தொடங்கலாம். ஊதிய உயர்வும் கிடைக்கும். 

விருச்சிகம் (Scorpio Zodiac Sign): இன்னும் 8 நாட்களில் நடக்கவுள்ள சூரியப் பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்கள் அதிஷ்ட பலனைப் பெறுவார்கள். மேலும், மகாவிஷ்ணுவின் அருளால், விருச்சிக ராசிக்காரர்கள் வியாபாரத்தில் ஏற்றம் காணலாம். பணியிடத்தில் உங்கள் உழைப்புக்கான பலன் கிடைக்கும். ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த நேரம் உங்களுக்கு ஒரு வரப் பிரசாதமாக இருக்கும். 

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | தனுசு ராசியை எதிர்த்தால் அழிவுதான்.. கட்டாயம் பிடிவாத குணமுடன் இருப்பார்களாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More