Home> Spiritual
Advertisement

வேலை வியாபாரத்தில் வெற்றி: சுக்கிரன் உதயத்தால் இந்த ராசிகளுக்கு அமோகமான வாழ்க்கை

Venus Rise: கடகத்தில் சுக்கிரன் உதயமானதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிக்காரர்களுக்கு இதனால் எதிர்பாராத பல நன்மைகள் கிடைக்கப் போகின்றன. 

வேலை வியாபாரத்தில் வெற்றி: சுக்கிரன் உதயத்தால் இந்த ராசிகளுக்கு அமோகமான வாழ்க்கை

கடகத்தில் சுக்கிரன் உதயம், ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிடத்தில், சுக்கிரன் ஒரு மிக நல்ல, மங்கலமான, சுபிட்சம் தரும் கிரகமாக கருதப்படுகிறார். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் சுபமாக இருந்தால், அந்த நபருக்கு ஒருபோதும் செல்வத்திற்கு குறைவு இருப்பதில்லை. அந்த நபர் அபரிமிதமான செல்வத்திற்குச் சொந்தக்காரராக இருந்து வாழ்வின் அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கிறார். மேலும் அவர் அன்பையும் செல்வத்தையும் பெறுகிறார். சுக்கிரனின் தாக்கம் உள்ளவர்கள் கவர்ச்சியான ஆளுமை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். மக்கள் அவர்களை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மறுபுறம், சுக்கிரன் ஒருவரது ஜாதகத்தில் அசுபமான நிலையில் இருந்தால், அந்த நபர் வாழ்வில் போராட்டத்தையும் பற்றாக்குறையையும் எதிர்கொள்கிறார். 

கடந்த சில நாட்களாக சுக்கிரன் அஸ்தம நிலையில் இருந்தார். பொதுவாக கிரகங்களின் அஸ்தமன நிலை அந்த கிரகங்களின் சக்தியை பலவீனப்படுத்துகிறது. அதன் காரணமாக அந்த கிரகங்கள் அசுப பலன்களை தருகின்றன. அஸ்தமன நிலையில் இருந்த சுக்கிரன் 18, 2023 அன்று உதயமானார். கடக ராசியில் சுக்கிரன் உதயமாகியுள்ளது மிகவும் சுபமான பலன் தரும். 

கடகத்தில் சுக்கிரன் உதயமானதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிக்காரர்களுக்கு இதனால் எதிர்பாராத பல நன்மைகள் கிடைக்கப் போகின்றன. இவர்களின் வாழ்வில் நல்ல நாட்கள் துவங்கி பொருளாதார நிலையும் வாழ்க்கையும் மேம்படும். அந்த அதொர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

சுக்கிரன் உதயம்: இந்த ராசிராசிக்காரர்களுக்கு சுப பலன்லள்:

மேஷ ராசி:

மேஷ ராசிக்காரர்கள் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவார்கள். நீங்கள் ஒரு புதிய தொழிலைத் தொடங்கப் போகிறீர்கள் என்றால், இந்த நேரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில் பல சாதகமான நன்மைகள் நடக்கும். பொருளாதார நிலையும் வலுவாக இருக்கும், பதற்றம் குறையும். இத்துடன் மனதின் பயமும் நீங்கும். பல சிரமங்களிலிருந்து விடுபடலாம். குடும்பத்தில் சுபிட்சம் இருக்கும். சொத்து, வாகனம் வாங்கும் யோகம் உருவாகும். 

மிதுன ராசி

சுக்கிரனின் உதயம் மிதுன ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கப் போகிறது. அன்னை லக்ஷ்மி இவர்களிடம் மிகவும் அன்பாக நடந்து கொண்டு பண மழை பொழிவார். இவர்களின் நிதி நிலை நன்றாக இருக்கும். இவர்கள் கடின உழைப்பின் பலனை அடைவார்கள். தொழில், வியாபாரம் நன்றாக நடக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணியில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.

மேலும் படிக்க | குருவோட கைகோர்த்த குபேரன்.. செல்வ மழையில் நனைய போகும் ராசிகள் இவையே

துலாம் ராசி

துலாம் ராசிக்கு சுக்கிரன் அதிபதியாகவும் உள்ளார். ஆகையால் சுக்கிரனின் உதயம் இந்த ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். இவர்களுக்கு எதிர்பாராத இடங்களில் இருந்து பண வரவு இருக்கும். தடைபட்ட பணம் கிடைத்து பெரும் நிம்மதி உண்டாகும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். வருமானத்தைப் பெருக்க புதிய வழிகளைக் காண்பீர்கள். வியாபாரத்தில் எந்த ஒரு புதிய திட்டமும் பெரிய பலன்களைத் தரும். பணியில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.

தனுசு ராசி

சுக்கிரனின் உதயம் தனுசு ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரப் போகிறது. இவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். ஒரு இடத்தில் நீண்ட நாட்களாக சிக்கி இருந்த பணம் இப்போது கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவுடன், உங்கள் பணி முடியும். குறிப்பாக மாணவர்களுக்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும். கடின உழைப்பின் முழு பலனையும் பெறுவீர்கள். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஜாக்பாட் வாழ்க்கை, பண வரவு: சனி வக்ர நிவர்த்தியால் இந்த ராசிகளுக்கு பம்பர் லாபம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More