Home> Spiritual
Advertisement

பிப்ரவரி ராசி பலன்: ‘இந்த’ ராசிகளுக்கு மகாலட்சுமியின் பரிப்பூரண அருள் நிச்சயம்!

February Money Horoscope 2023: பிப்ரவரி மாதத்திற்கான ராசி பலன்: வரும் பிப்ரவரி மாதம் சில ராசிக்காரர்களுக்கு பல பலன்களையும் பண வரவையும், நன்மைகளைகளையும் அள்ளித தரப்போகிறது. 

பிப்ரவரி ராசி பலன்: ‘இந்த’ ராசிகளுக்கு மகாலட்சுமியின் பரிப்பூரண அருள் நிச்சயம்!

பிப்ரவரி மாதத்திற்கான ராசி பலன்: வரும் பிப்ரவரி மாதம் சில ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளை தரப்போகிறது. இந்த மாதம் சில ராசிகள் லட்சுமி தேவியின் பரிபூரண ஆசீர்வாதத்தைப் பெறப் போகிறார்கள். இவர்கள் கஜானா நிரம்பி விடும். 
புதிய மாதம் அனைவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. பிப்ரவரி மாதம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இந்த மாதம் சில சொந்தங்கள் லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தைப் பெறப் போகிறார்கள். இந்த ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும். இந்த மாதம் பணம் சம்பாதிக்க புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எனினும் இந்த மாதம் நீங்கள் சரியான நிதி நிர்வாகத்தை செய்ய வேண்டும், இல்லையெனில் உங்கள் செலவுகள் அதிகரிக்கலாம். இந்த மாதம் உங்களுக்கு திடீர் பண பலன்கள் கிடைக்கும். பிப்ரவரியில், மேஷ ராசிக்காரர்களுக்கு அன்னை லட்சுமியின் அருள் கிடைக்கப் போகிறது. சூரியன், சுக்கிரன், சனி ஆகியோர் அனுகூலமான நிலையில் அமர்வார்கள். அதன் தாக்கத்தால், உங்கள் நிதி நிலை மேம்படும். நீங்கள் புதிதாக முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தால், பிப்ரவரி 15க்கு பிறகு உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

மேலும் படிக்க | சனி கிழமையில் வரும் தை அமாவாசை! முன்னோர்களின் ஆசி கிடைக்க செய்ய வேண்டியவை!

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் மிகவும் வலுவாக இருக்கும். இந்த மாதம் உங்கள் செலவுகள் அதிகரிக்கலாம் என்றாலும், விரைவில் நீங்கள் அதை முழுமையாக கட்டுப்படுத்த முடியும். இந்த மாதம் உங்களின் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். இந்த மாதம் உங்களுக்கு பணம் சம்பாதிக்க புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ரிஷபம் ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் நல்ல பணம் கிடைக்கும். மேலும் நீங்கள் பணத்தை சேமிக்கவும் முடியும். நீங்கள் சொந்தமாகத் தொழில் செய்து, பங்குச் சந்தையில் முதலீடு செய்யத் திட்டமிட்டிருந்தால், பிப்ரவரி 15, 2023க்குப் பிறகு நல்ல லாபத்தைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறலாம்.

விருச்சிகம்

நிதி ரீதியாகப் பார்த்தால், விருச்சிக ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் சாதகமாக இருக்கும். இந்த மாதம் நீங்கள் சில முக்கியமான விஷயங்களுக்கு பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். இந்த மாதம் நீங்கள் பட்ஜெட்டை தயாரித்து, புத்திசாலித்தனமாக பணத்தை செலவழிக்க வேண்டும். விருச்சிக ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி 15-ம் தேதிக்கு பிறகு காலம் மிகவும் சிறப்பாக இருக்கும். உங்களின் பொருளாதார பிரச்சனைகள் குறையும். சந்திரன் ராசியில் வியாழனின் சுப அம்சம் காரணமாக, உங்கள் நிதி நிலைமை முன்பை விட மேம்படும். இந்த மாதம் சுப காரியங்களுக்கு பணத்தை நன்கொடையாக கொடுக்கலாம்.

தனுசு - நிதி ரீதியாக, பிப்ரவரி மாதம் தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த மாதம் பதினொன்றாம் வீட்டில் கேது இருப்பதால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இந்த மாதம் நீங்கள் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை ஆன்மீகப் பணிகளுக்காகவும் கொடுக்கலாம். தனுசு ராசிக்காரர்கள், ஷேர் மார்க்கெட் மற்றும் பங்குச் சந்தையுடன் தொடர்புடையவர்கள், இந்த மாதம் திடீரென்று நல்ல லாபத்தைப் பெறலாம். மேலும், இந்த மாதம் சொத்துக்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.

மேலும் படிக்க | Venus Transit: சுக்கிர யோகத்தால் பிரபலமாகும் ராசிக்காரர்கள்! மகாலட்சுமி கடாட்சம் அதிகரிக்கும்

மேலும் படிக்க | தை அமாவாசையன்று இதை செய்தால், சனீஸ்வரரின் அருட்கடாட்சத்தால் வாழ்க்கை சிறக்கும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More