Home> Spiritual
Advertisement

சிவபெருமானுக்கு பிடித்த அதிர்ஷ்ட ராசிகள்.... உங்க ராசி இருக்கா?

Favourite Zodiac Signs of Lord Shiva: சில ஜோதிட கணக்கீடுகளின் படி, சில ராசிக்காரர்கள் சிவன் அருள் பெறுவதில் அதிர்ஷ்டசாலிகள். சில ராசிகள் சிவனுக்கு பிடித்தமான ராசிகளாக உள்ளன. 

சிவபெருமானுக்கு பிடித்த அதிர்ஷ்ட ராசிகள்.... உங்க ராசி இருக்கா?

Favourite Zodiac Signs of Lord Shiva: இன்று சிவபெருமானுக்கு உகந்த சாவன் மாதத்தின் முதல் நாள் ஆகும். இந்த சாவன் மாதம் இன்று திங்கட்கிழமை தொடங்கி ஆகஸ்ட் 19 ஆம் தேதி வரை நீடிக்கும். சாவன் மாதத்தில் சிவபெருமான் வழிபடுவது விசேஷ முக்கியத்துவம் வாய்ந்தது. எப்படி தமிழகத்தில் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்ததோ அப்படி வட மாநிலத்தில் சாவன் மாதம் சிவனுக்கு மிகவும் உகந்த மாதமாக கருதப்படுகிறது. சவான் மாதம் முழுவதும் சிவபெருமானை பயபக்தியுடன் வணங்குவது அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றும் என்று ஆன்மீக நம்பிக்கை. 

பொதுவாக இந்து சமயத்தின் மிக முக்கியமான கடவுளாக சிவபெருமான் கருதப்படுகிறார். ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருள் அவர். மும்மூர்த்திகளில் ஒருவரான சிவபெருமான் பிறப்புன் இறப்பும் இல்லாதவர். கயிலாயத்தில் வாசம் புரியும் சிவ பெருமான், அண்ட சராசரங்களையும் காத்து ரஷிக்கிறார். சிவ பெருமான் உலகம் முழுதும் பல வடிவங்களில், பல பெயர்களை கொண்டு வியாபித்து இருக்கிறார். 

மேலும் படிக்க | முருகனுக்கு முதலில் காவடி எடுத்தது யார்? ஆடி கிருத்திகையில் பக்தனுக்கு அருள் புரியும் முருகர்!

தமிழகத்துக்கும் சிவனுக்கும் ஒரு தனி பிணைப்பு உண்டு. சிவனை பாடி, அவருக்காக பல பாசுரங்களை எழுதிய நாயன்மார்கள் அனைவரும் தமிழகத்தில் அவதரித்தவர்களே. ‘தென்னாடுடைய சிவனே போற்றி’ என தமிழ்நாட்டை நம் முன்னோர்கள் சிவனுக்கே அர்ப்பணித்தார்கள். ஆனந்த தாண்டவம் ஆடும் நடராஜனாக சிதம்பரத்தில் காட்சியளிக்கும் சிவன், அனைத்தையும் ஆட்கொள்ளும் ஜோதி தானே என்பதற்கு திருவண்ணாமலையில் சாட்சியாய் இருக்கிறார்.

அதேபோல் சாவன் சோம்வார் சிவன் பக்தர்களுக்கு மிக முக்கியமான நாளாக கருதப்படுகிறது. அதாவது திங்கட்கிழமையில் வரும் சாவன் மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. சாவன் சோமவாரத்தில் விரதம் இருந்து சிவபெருமானை வழிபடுவதன் மூலம் பக்தர்கள் செழிப்பு, ஆரோக்கியம், செல்வம் மற்றும் மகிழ்ச்சியை பெறுவார்கள் என்பது நம்பிக்கை. சாவனின் முதல் திங்கட்கிழமை பஞ்சாங்கத்தின்படி இந்த ஆண்டு இன்று குறிக்கப்படும். ன்றைய தினத்தில் அனைத்து சிவாலயங்களிலும் சிவ பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்த நாளில் பக்தர்கள் விரதமிருந்து, சிவ ஸ்தோத்திரங்களை சொல்லி, கன் விழித்து அந்த முக்கண்ணனை வழிபடுகிறார்கள். 

சிவபெருமானுக்கு பிடித்தமான ராசிகள்

சிவனுக்கு (Lord Shiva) அனைவரும் சமமே. அவர் அனைத்து மனிதர்களுக்கும் சமமாக அருள் பாலிக்கிறார். எனினும், சில ஜோதிட கணக்கீடுகளின் படி, சில ராசிக்காரர்கள் சிவன் அருள் பெறுவதில் அதிர்ஷ்டசாலிகள். சில ராசிகள் சிவனுக்கு பிடித்தமான ராசிகளாக உள்ளன. இந்த ராசிக்காரர்கள் நினைத்த மாத்திரத்தில் அவர்களது வேண்டுதல்களை சிவன் நிறைவேற்றுகிறார். இன்னும் சில நாட்களில் மகா சிவராத்திரி கொண்டாடப்படவுள்ள நிலையில், சிவ பெருமானுக்கு பிடித்தமான அந்த ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம். 

மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் உழைப்பாளிகளாக கருதப்படுகிறார்கள். மேஷ ராசியை ஆளும் கிரகம் செவ்வாய். இமயமலையில் வாசம் செய்யும் சிவபெருமானுக்கு பிடித்தமான ராசிகளில் மேஷ ராசியும் ஒன்று. இவர்கள் வாழ்வில் வரும் அனைத்து பிரச்சனைகளையும் சிவன் தீர்த்து வைக்கிறார்.

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கும் செவ்வாய்தான் கிரக அதிபதி. விருச்சிக ராசிக்காரர்கள் இயற்கையாகவே புத்திசாலிகளாக இருக்கிறார்கள். இவர்களுக்கு சிவபெருமானின் விசேஷ அருள் இருக்கின்றது. குறிப்பாக பணியிடத்திலும் வியாபாரத்திலும் ஏற்படும் சங்கடங்களை சிவன் உடனுக்குடன் தீர்த்து வைக்கிறார். 

மகரம்: மகர ராசியின் அதிபதி சனி பகவான். சனிபகவான் சிவனின் மிகப்பெரிய பக்தர். ஆகையால் மகர ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் அருள் இருப்பதுடன் அவர் வணங்கும் சிவபெருமானின் அருளும் எப்போதும் இருக்கும். ஏழரை சனி (Ezharai Sani) காலத்திலும் மகர ராசிக்காரர்கள் சிவ பெருமானை வழிபட்டால், அனைத்து பிரச்சனைகளும் பனி போல் விலகும்.

கும்பம்: கும்ப ராசிக்கும் சனி பகவான்தான் அதிபதி. மகர ராசிக்காரர்கள் மீது இருப்பது போல கும்ப ராசிக்காரர்கள் மீதும் சிவபெருமானுக்கு அதிகப்படியான பற்று உள்ளது. சனி பெயர்ச்சி (Sani Peyarchi), ஏழரை சனி என சனியால் ஏற்படும் பாதிப்புகளுக்கு சிவனால் தீர்வு கிடைக்கும். சிவபெருமான் கும்ப ராசிக்காரர்களுக்கு வாழ்வில் அனைத்து செல்வங்களையும் அளிக்கிறார்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | 119 நாட்களுக்கு குரு ஆட்டம் தொடரும்.. இந்த ராசிகளுக்கு அரச பொற்காலம், அதிர்ஷ்டம், லக்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More