Home> Spiritual
Advertisement

இன்னும் 6 நாட்களில் இந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறும்

Mercury Transit 2022: புதனின் ராசி மாற்றத்தின் பலன் மேஷம் முதல் மீனம் வரை இருக்கும். 

இன்னும் 6 நாட்களில் இந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறும்

ஜூலை மாதம், கிரக இளவரசன் புதனின் நிலை மூன்று முறை மாற இருந்தது. அதன்படி தற்போது வரை புதன் கிரகத்தின் நிலை இரண்டு முறை மாறியுள்ளது. இப்போது ஜூலை 31 அன்று, புதன் கடகத்தை விட்டு வெளியேறி சிம்மத்திற்கு மாறுகிறார். சிம்ம ராசியில் புதன் பெயர்ச்சி 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்தவகையில் சில ராசிக்காரர்கள் புதன் பெயர்ச்சியின் போது மகத்தான வெற்றியைப் பெறலாம், சிலருக்கு சிரமங்களைச் சந்திக்க நேரிடலாம். புதன் ராசி மாற்றம் எந்த ராசிக்காரர்களுக்கு பலன் தரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்-

ஜூலை 31 நடக்க உள்ள புதன் பெயர்ச்சியால் நான்கு ராசிக்காரர்களுக்கு எப்படிப்பட்ட பலனை ஏற்படுத்தி தரும் என்பதை பார்ப்போம்.

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சூப்பர், 3 ராசிகளுக்கு சுமார் 

கடகம்- கடக ராசிக்காரர்களுக்கு புதன் சிம்ம ராசியில் செல்வதால் பலன் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் வியாபாரிகள் நல்ல லாபம் பெறலாம். இந்த காலகட்டத்தில் பெரிய முதலீடுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும், இல்லையெனில் வாக்குவாதம் ஏற்படும் சூழ்நிலை ஏற்படலாம்.

கன்னி- கன்னி ராசிக்காரர்கள் சிம்மத்தில் புதன் நுழைவதால் மட்டுமே பலன் கிடைக்கும். இருப்பினும், இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் செலவினங்களைக் கட்டுப்படுத்த வேண்டும், இல்லையெனில் உங்கள் நிதி பட்ஜெட் மோசமடையக்கூடும். இதன் போது, ​​உங்கள் மனைவியுடன் நல்லுறவைப் பேணுங்கள். பயண யோகங்கள் ஏற்படலாம். புதன் சஞ்சாரத்தின் போது வாழ்க்கை துணையுடன் இனிமையான பொழுதை செலவிடுவீர்கள். வருமான ஆதாரங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த ராசியின் அதிபதியும் புதன் கிரகம் என்பதால் இக்காலம் திடீர் பண பலன்களை தரும்.

விருச்சிகம்- விருச்சிக ராசிக்காரர்கள் புதன் சஞ்சாரத்தின் போது பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் பெறலாம். இந்த நேரத்தில் உங்கள் தொழிலில் படிக்கட்டுகளில் ஏறும் வாய்ப்பு கிடைக்கும். இருப்பினும், உங்கள் இயல்பில் மாற்றம் இருக்கலாம். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும்.

மகரம்- மகர ராசிக்காரர்கள் புதன் சஞ்சாரத்தின் போது சில சிரமங்களை சந்திக்க நேரிடும். இருப்பினும் உங்கள் நிதி நிலை சிறப்பாக இருக்கும். மனைவியின் உணர்வுகளைப் புறக்கணிக்காதீர்கள், இல்லையெனில் பதற்றமான சூழ்நிலை ஏற்படலாம். ஆரோக்கியத்தில் விழிப்புடன் இருங்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)

மேலும் படிக்க | சனி அமாவாசையில் சூரிய கிரகணம்; மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Read More