Home> Spiritual
Advertisement

அசுர வளர்ச்சி.. அமோக வெற்றி: செவ்வாய் பெயர்ச்சியால் இந்த ராசிகளின் தலைவிதி மாறும்

Mangal Gochar: செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் காணப்படும். இருப்பினும், சில ராசிகளுக்கு இந்த பெயர்ச்சியால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். 

அசுர வளர்ச்சி.. அமோக வெற்றி: செவ்வாய் பெயர்ச்சியால் இந்த ராசிகளின் தலைவிதி மாறும்

செவ்வாய் பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிட சாஸ்திரத்தின் படி, அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இந்த கிரக பெயர்ச்சிகளின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் இருக்கும். ஆகஸ்ட் மாதத்தில் பல பெரிய கிரகங்கள் தங்கள் ராசிகளை மற்றவுள்ளன. இப்படிப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி செவ்வாய் கிரகம் கன்னி ராசியில் பெயர்ச்சியாக உள்ளது.

செவ்வாய் கிரகம் முருகர் மற்றும் ஆஞ்சனேயருடன் தொடர்புடையது. செவ்வாய் கிரகம் மங்கள் கிரகரம், அதாவது சுபமான கிரகமாக கருதப்படுகின்றது. ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் நல்ல நிலையில் இருந்தால், அந்த நபரின் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும் என்பது உறுதி. 

எந்த ஒரு நபரின் ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் தொடர்ந்து சுபமாக இருக்கிறாரோ, அந்த நபரின் தன்னம்பிக்கை அபரிமிதமாக அதிகரிக்கும். அப்படிப்பட்ட நபர்கள் மிகுந்த தைரியத்துடன் அனைத்து பணிகளையும் செய்வார்கள். சோம்பேறித்தனம் விலகிப்போகும். அவர்களது உறுதி மற்றும் விடாமுயற்சியால் பல நன்மைகளை பெறுவார்கள். 

செவ்வாய் பெயர்ச்சி

ஆகஸ்ட் 18 அன்று, செவ்வாய் கிரகம் கன்னி ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளது. பொதுவாக அனைத்து கிரகங்களின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் இருக்கும். அந்த வகையில் செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் காணப்படும். இருப்பினும், சில ராசிகளுக்கு இந்த பெயர்ச்சியால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். இவர்கள் வெற்றி வாகை சூடுவார்கள். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

சிம்ம ராசி

ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு மாதமும் நிகழும் கிரகங்களின் பெயர்ச்சி அனைத்து ராசிகளுக்கும் அசுப மற்றும் அசுப பலன்களை ஏற்படுத்துகிறது. கன்னி ராசியில் செவ்வாயின் பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். இந்த ராசிக்காரர்களின் செல்வ ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிக்கப் போகிறார். ஆகையால் இந்த காலத்தில் பொருளாதார பலமும் திடீர் பண ஆதாயமும் உண்டாகும். இத்தனை நாட்களாக தடைப்பட்டிருந்த பணிகள் முடிவடையும். சிம்ம ராசிக்காரர்கள் தங்களது அனைத்து பணிகளிலும் வெற்றி காண்பார்கள். பேச்சில் முன்னேற்றம் காணப்படும். உங்கள் பேச்சால் மக்கள் உங்கள் பக்கம் ஈர்க்கப்படுவார்கள். 

மேலும் படிக்க | உச்ச வேகத்தில் குரு.. 118 நாட்கள் இந்த ராசிகளுக்கு பணமழை கொட்டும்

விருச்சிக ராசி

கன்னி ராசியில் செவ்வாய் பெயர்ச்சி ஆவதால் விருச்சிக ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல பெரிய மாற்றங்கள் ஏற்படும். வருமான வீட்டில் ஏற்படும் இந்த பெயர்ச்சியின் போது சம்பள உயர்வு இருக்கும். உங்கள் நம்பிக்கை உச்சத்தில் இருக்கும். நீண்ட கால சட்ட சிக்கல்களில் இருந்து விடுதலை பெறுவீர்கள். சொத்து கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் ஆதாயம் உண்டாகும். பழைய முதலீட்டில் வெற்றி கிடைக்கும்.

மகர ராசி

ஜோதிட சாஸ்திரப்படி கன்னி ராசியில் செவ்வாய் பெயர்ச்சி ஆவது மகர ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் ராசிக்கு 9 ஆம் வீட்டில் இந்தப் பெயர்ச்சி நடக்கப் போகிறது. இந்த நேரத்தில் நீங்கள் புதிய வாகனம் அல்லது சொத்து போன்றவற்றை வாங்கலாம். இந்த நேரத்தில் உங்கள் வருமானம் அதிகமாகும். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். பணம் ஈட்டுவதற்கான அனைத்து வழிகளில் வெற்றி பெற தற்போது நேரம் சாதமகான இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். பணம் சார்ந்த இன்பங்கள் உங்களுக்கு கிடைக்கும். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | தினசரி ராசிபலன்: இன்று எந்த ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More