Home> Spiritual
Advertisement

பூரட்டாதியில் சனி பகவான்... இந்த ராசிகளுக்கு இனி நல்ல காலம் தான்!

Shani Nakshatra Peyarchi: சனி பகவான் 2024 ஏப்ரல் 6ம் தேதி அன்று பிற்பகலில் பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். சனியின் இந்த நட்சத்திரப் பெயர்ச்சியால் தனுசு, கன்னி உள்ளிட்ட 4 ராசிகளுக்கு நல்ல காலம் பிறக்கும்.

பூரட்டாதியில் சனி பகவான்... இந்த ராசிகளுக்கு இனி நல்ல காலம் தான்!

சனி நட்சத்திர பெயர்ச்சி 2024: சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் பிற்பகல் 3:55 மணிக்கு சஞ்சரிக்கிறார். அக்டோபர் 3, 2024 வியாழன் வரை பூரட்டாதி நக்ஷத்திரத்தில் இருக்கும் சனி, இதற்கு முன் நவம்பர் 24, 2023 அன்று சனிபகவான் சதய நட்சத்திரத்தில் சஞ்சரித்தார். பூரட்டாதி நட்சத்திரத்தில் சனியின் சஞ்சாரம் 12 ராசிகளை பாதிக்கும் என்றாலும், சனியின் இந்த சஞ்சாரம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டத்தை கொண்டு வரும். இவர்கள் பிரச்சனை அனைத்தும் தீர்ந்து நல்ல காலம் பிறக்கும் எனலாம். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இந்த சனிப் பெயர்ச்சி பலன் தரும் என்பதை தெரிந்து கொள்வோம்.

மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்கள் சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சியினால் பண பலன்களைப் பெறுவார்கள். வேலை, தொழில் ரீதியாக வெற்றி பெறுவார்கள். மனதளவில் புதிய சிந்தனை ஏற்படும். ஒரு புதிய வீடு, நிலம் அல்லது ஒரு பிளாட் கூட வாங்கக்கூடிய அளவுக்கு பணம் சம்பாதிப்பீர்கள். குழந்தைகளின் எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். முதலீடுகள் மூலம் நல்ல இலாபம் கிடைக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு மேம்படும். உறவினர்களிடத்தில் மதிப்பு மேம்படும். அரசு வேலைக்கு தயாராகி வருபவர்கள் கடின உழைப்பால் அரசு வேலை பெறலாம். அரசு வேலைக்கு தயாராகி வருபவர்கள் கடின உழைப்பால் அரசு வேலை பெறலாம். 

ரிஷப ராசி

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் நல்ல காலம் தொடங்கும். கடினமான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதரர்களின் வழியில் அனுகூலம் ஏற்படும். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் ஏற்படும். பல வருடங்கள் உழைத்தும் பதவி உயர்வு கிடைக்காமல் போனால் இன்னும் சில நாட்களில் நல்ல செய்தி வந்து சேரும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். அணுகுமுறையில் மாற்றம் ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாகும். வாழ்க்கைத் துணைவரின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். அலுவலகத்தில் நிர்வாக திறமை வெளிப்படும். திருமணம் தொடர்பான தடைகள் நீங்கும்.

மேலும் படிக்க | மீனத்தில் செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் பலன்கள், குபேர யோகம் ஆரம்பம்

கன்னி ராசி

கன்னி ராசியினருக்கு சனியின் ராசி மாற்றம் மிகுந்த பலன் தரும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். நிதி நிலைமை மேம்படும் போது உங்கள் கடன் பிரச்சனையும் குறையும். வாழ்க்கையில் சௌகரியங்களும், வசதிகளும் அதிகரிக்கும், பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கடினமான சூழ்நிலைகளை வெற்றி கொள்வீர்கள். உங்கள் தொழிலில் முன்னேற்றம் காண ஏராளமான புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். 

தனுசு ராசி

தனுசு ராசியிலும் சனிபகவான் அருள் மழை பொழிவார். மனதளவில் இருந்து வந்த கவலைகள் நீங்கும். விரும்பிய வேலையைத் தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு, காத்திருப்பு முடிவுக்கு வரும், குடும்ப உறுப்பினர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். தனவரவுகள் தேவைக்கேற்ப இருக்கும். அலுவலத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் மறைமுக வாய்ப்புகளை அறிந்து கொள்வீர்கள்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | புதன் அஸ்தமனம் ... வேலையில், தொழிலில் சிக்கல்களை எதிர்கொள்ளும் 6 ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More