Home> Spiritual
Advertisement

ராம நவமி 2023 தேதி : பூஜை செய்ய ஏற்ற நேரமும், சொல்ல வேண்டிய மந்திரமும்

Ram Navami 2023: ராம நவமி அன்று பூஜை செய்ய வேண்டிய நேரம் மற்றும் சொல்ல வேண்டிய மந்திரம் குறித்த விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

ராம நவமி 2023 தேதி : பூஜை செய்ய ஏற்ற நேரமும், சொல்ல வேண்டிய மந்திரமும்

மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை அனைவருக்கும் உணர்த்துவதற்காக மகாவிஷ்ணுவே, பூமியில் தானே மனித பிறவி எடுத்து வாழ்ந்து காட்டியது தான் ராம அவதாரம். எத்தனை கஷ்டங்கள், சோதனைகள் வந்தாலும் ஒழுக்க நெறியை தவற கூடாது, அறத்தின் வழியிலேயே வாழ வேண்டும் என மனித குலத்திற்கு கற்றுக் கொடுத்தது தான் ராம அவதாரத்தின் நோக்கம்.

ராமரின் பெருமைகளை போற்றி, அவரின் அருளை பெறுவதற்கு மிகவும் உகந்த நாள் ராம நவமி ஆகும். இராம என்றால் இரவு என்றும், மன் என்றால் தலைவன் என்றும் பொருள். ராமன் என்ற சொல்லுக்கு இரவின் தலைவன். ராமன் என்ற சொல்லுக்கு குளிர்ந்த முகத்துடன் அருள் செய்பவன் என்று பொருள்.

ஸ்ரீ ராம நவமி 2023

மகாவிஷ்ணு எடுத்த ஒன்பது அவதாரங்களில் மிகவும் முக்கியமான அவதாரம் ராம அவதாரம் ஆகும். பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பரந்தாமன் ராமராக அவதாரம் எடுக்க வேண்டும் என முடிவு செய்த போது, அவர் இல்லாமல் எப்படி வைகுண்டத்தில் இருப்பது என மகாலட்சுமி, ஆதிசேஷன் உள்ளிட்ட அனைவரும் வருந்தினர்.

மேலும் படிக்க | கோபத்தை ஒதுக்கினால் செல்லுமிடமெல்லாம் சிறப்பு! விருச்சிக ராசியின் ஏப்ரல் மாத பலன்

அவர்களின் துயரத்தை போக்குவதற்காக மகாலட்சுமி சீதா தேவியாகவும், ஆதிசேஷன் லட்சுமணனாகவும், பெருமாளின் கையில் இருக்கும் சங்கும் சக்கரமும், பரதன் மற்றும் சத்ருகனனாக அவதாரம் எடுத்து, பெருமாளுடனேயே இருக்கும் பாக்கியத்தை பெற்றனர். ராமர் அவதரித்த தினத்தை நாள் ராமநவமியாக (rama navami 2023) கொண்டாடுகிறோம்.

ராமர், பங்குனி மாத சுக்லபட்சம், புனர்பூசம் நட்சத்திரம், நவமி திதியில் அவதரித்தார். இந்த ஆண்டு ராம நவமியானது மார்ச் 30 ம் தேதி வருகிறது. நவமி திதியானது மார்ச் 29 ம் தேதி (ram navami 2023 date) இரவு 11.49 மணிக்கே துவங்கி விடுகிறது. மார்ச் 31 ம் தேதி அதிகாலை 01.40 வரை நவமி திதி உள்ளது. அதனால் மார்ச் 30 அன்று நாள் முழுவதும் நவமி திதி உள்ளதால் நமக்கு எந்த நேரத்தில் வசதியோ அந்த நேரத்தில் பூஜை செய்யலாம். ஆனால் காலையில் பூஜை செய்வது சிறப்பானது.

ராமநவமி பூஜை முறை

ராமநவமி அன்று அதிகாலையில் எழுந்து, குளித்து விட்டு, வீட்டில் உள்ள ராமர் படத்தை சுத்தம் செய்து துளசி மாலை அணிவிக்க வேண்டும். ராமர் பட்டாபிஷேக படம் இருந்தால் இன்னும் சிறப்பானது. நைவேத்தியமாக பால் பாயசம், பானகம், நீர் மோர், துளசி தீர்த்தம், கற்கண்டு வைத்து படைக்கலாம். உணவு வகைகளில் புளியோதரை, வடை, எலுமிச்சை சாதம் படைத்து வழிபடலாம். அனைத்தும் செய்ய முடியாதவர்கள் ஒரு கடைபிடியளவு கற்கண்டு, துளசி இலை, பானகம் மட்டும் கண்டிப்பாக வைத்து படைக்க வேண்டும்.

ராம நவமி நாளில் ராமாயணம், சுந்தர காண்டம், விஷ்ணு சகஸ்ரநாமம் படிக்கலாம். ராமரை போற்றும் பாடல்களை பாடி வழிபடலாம். எதுவும் முடியாதவர்கள் ஸ்ரீ ராம ஜெயம் என தொடர்ந்து பாராயணம் செய்யலாம். ஸ்ரீ ராம ஜெயம் மந்திரத்தை 108 முறை எழுதலாம் அல்லது சொல்லலாம். ஸ்ரீ ராம ஜெயம் என்று சொல்வதை விட ஸ்ரீ சீதா ராம ஜெயம் என சொல்வது சிறப்பானது. இதனால் ராமர், சீதை மற்றும் ஆஞ்சநேயர் ஆகிய மூன்று பேரின் அருளும் கிடைக்கும்.

ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ஸ்ரீ ராம நாம வரானனே
என்ற மந்திரத்தை சொன்னாலே விஷ்ணு சகஸ்ரநாமம் முழுவதையும் பாராயணம் செய்த பலன் கிடைத்து விடும் என சிவ பெருமானே, பார்வதி தேவியிடம் கூறியதாக சொல்லப்படுகிறது.

ராம காயத்ரி மந்திரம்

ஓம் தஸரதாய வித்மஹே
ஸீதாவல்லபாய தீமஹி
தந்நோ ராமஹ் ப்ரசோதயாத் "

என்ற ஸ்ரீ ராம காயத்ரி மந்திரத்தை எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை பாராயணம் செய்யலாம். இப்படி செய்வதால் ஸ்ரீ ராம பிரானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

மேலும் படிக்க | ரேவதி நட்சத்திரத்தில் இணையும் புதன் குரு, இந்த 6 ராசிகளுக்கு ஜாக்பாட்

மேலும் படிக்க | Ram navami 2023: ராம நவமி நாளில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Read More