Home> Spiritual
Advertisement

2024 ஜனவரி மாத ராசிபலன்: 3 கிரகப் பெயர்ச்சிகள்.. இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை

குரு வக்ர நிவர்த்தி அடைவதாலும், 3 கிரகங்களின் ராசி மாற்றத்தாலும், அனைத்து ராசிக்காரர்களும் சுப, அசுப பாதிப்பு ஏற்படும். இதில் 3 ராசிக்காரர்கள் அதிக பலன்களைப் பெறுவார்கள். இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் மிளிரும். வாருங்கள், கிரகங்களின் ராசி மாற்றங்கள் பற்றி அனைத்தையும் தெரிந்து கொள்வோம்-

2024 ஜனவரி மாத ராசிபலன்: 3 கிரகப் பெயர்ச்சிகள்.. இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை

ஜனவரி மாத கிரகப் பெயர்ச்சி 2024: ஜோதிடர்களின் பார்வையில், ஜனவரி 2024 அனைத்து ராசிக்காரர்களுக்கும் மிக முக்கியமானதாக இருக்கும். இந்த மாதத்தில் 3 கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றும். இதற்கு முன் வரும் டிசம்பர் மாதத்தில் 4 கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றும். அதுமட்டுமின்றி, தேவகுரு பிருஹஸ்பதியும் டிசம்பர் 31 ஆம் தேதி வக்ர அடையாவிருக்கிறார். குரு வக்ர நிவர்த்தி அடைவதாலும், 3 கிரகங்களின் ராசி மாற்றத்தாலும், அனைத்து ராசிக்காரர்களும் சுப, அசுப பாதிப்பு ஏற்படும். இதில் 3 ராசிக்காரர்கள் அதிக பலன்களைப் பெறுவார்கள். இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் மிளிரும். வாருங்கள், கிரகங்களின் ராசி மாற்றங்கள் பற்றி அனைத்தையும் தெரிந்து கொள்வோம்-

சூரியன் ராசி மாற்றம் / சூரியப் பெயர்ச்சி:
பொங்கல் பாண்டிக்கை மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்நாளில் வழிபாடு, திருமந்திரம், தொண்டு செய்தல் மரபு. இந்த நாளில் தான் சூரியன் தனது ராசியை மாற்றுகிறார். சூரியன் தனுசு ராசியை விட்டு மகர ராசியில் நுழையும் போது பொங்கல் கொண்டாடப்படுகிறது. ஜோதிடர்களின் கூற்றுப்படி, ஜனவரி 15 ஆம் தேதி அதிகாலை 02:43 மணிக்கு சூரியன் மகர ராசிக்குள் நுழைவார்.

மேலும் படிக்க | வீட்டில் புறா கூடு கட்டுவது நல்லதா அல்லது கெட்டதா? தெரிந்து கொள்ளுங்கள்!

சுக்கிரன் ராசி மாற்றம் / சுக்கிரன் பெயர்ச்சி:
மகிழ்ச்சிக்கு காரணமான சுக்கிரன் தை மாதத்தில் ராசியை மாற்றுவார். புத்தாண்டு தொடக்கத்தில் சுக்கிர பகவான் விருச்சிக ராசியில் அமர்வார். அதே சமயம் ஜனவரி 18 ஆம் தேதி இரவு 08:56 மணிக்கு தனுசு ராசிக்குள் நுழையும். சுக்கிரன் இந்த ராசியில் 25 நாட்கள் இருப்பார். அதன் பிறகு பிப்ரவரி 12 ஆம் தேதி மகர ராசிக்கு மாறுகிறது.

புதன் ராசி மாற்றம் / புதன் பெயர்ச்சி:
கிரகங்களின் அதிபதியான புதன் ஜனவரி 07 ஆம் தேதி தனுசு ராசிக்குள் நுழைகிறார். இதற்கு முன் ஜனவரி 02 ஆம் தேதி புதன் வக்ர நிவர்த்தி அடையும். ராசி மாற்றத்தின் போது, ​​புதன் ஜனவரி 20 ஆம் தேதி பூராடம் நட்சத்திரத்தில் சஞ்சரித்து, ஜனவரி 30 ஆம் தேதி உத்திராடம் நட்சத்திரத்தில் நுழைகிறார். இதைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு புதன் பகவான் தனுசு ராசியை விட்டு மகர ராசியில் பிரவேசிப்பார்.

இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம் உண்டாகும்:

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களின் வாழ்வில் வெற்றியையும் சாதனையையும் கொண்டு வர முடியும். நிதி ஆதாயங்கள் ஏற்படக்கூடும். தொழில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் அமையும். தனிப்பட்ட விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள். சகோதர சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். 

தனுசு: தனுசு ராசிக்காரர்களின் நிதி நிலை மேம்படும். இந்த காலகட்டத்தில், உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் நபர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். சமய காரியங்களில் ஈடுபடலாம்.

மீனம்: இந்த காலகட்டத்தில், உங்கள் மனைவியின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். நம்பிக்கை அதிகரிக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | 2024 புத்தாண்டு ராசிபலன்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டம், கோடீஸ்வர யோகம்... முழு ராசிபலன் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More