Home> Spiritual
Advertisement

இந்த 3 ராசிகளுக்கு 'புதன்' பண மழையை பொழிவார்.. 4 நாட்களுக்கு பிறகு ஜாக்பாட் தான்

Budh Gochar 2023: புதன் கடக ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். பணம், வியாபாரம், பேச்சு, உரையாடல், தர்க்கம் போன்றவற்றுக்குக் காரணமான புதனின் ராசி மாற்றம் சில ராசிக்காரர்களுக்குப் பணவரவையும் பெரும் வெற்றியையும் தரப் போகிறது.

இந்த 3 ராசிகளுக்கு 'புதன்' பண மழையை பொழிவார்.. 4 நாட்களுக்கு பிறகு ஜாக்பாட் தான்

கடக ராசியில் புதன் பெயர்ச்சி 2023: வேத ஜோதிடத்தில், புதன் கிரகம் கிரகங்களின் இளவரசனாக அழைக்கப்படுகிறார். இதனுடன், புதன் புத்திசாலித்தனம், பேச்சு, கணிதம், பொருளாதாரம், வணிகம் மற்றும் பகுத்தறியும் சக்தி ஆகியவற்றின் காரணியாகுவும் கருதப்படுகிறார். எனவே, புதனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம், 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கம் ஏற்படுகின்றன. இந்த மாதம் 2023 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி புதன் பெயர்ச்சியாக உள்ளது. புதன் தனது ராசியை மாற்றிக் கொண்டு கடக ராசிக்குள் நுழைவார். மூன்று  ராசிக்காரர்களுக்கு கடக ராசியில் புதன் பெயர்ச்சி மிகவும் சிறப்பாக அமையும். இந்த ராசி நபர்களுக்கு வேலை, வணிகம் மற்றும் நிதி நிலைமையில் வலுவான பலன்களைத் தரும். எனவே புதன் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

இந்த ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி சுபப் பலன்களைத் தரும்

சிம்ம ராசி: சிம்ம ராசிக்காரர்களுக்கு புதனின் பெயர்ச்சி (Budh Gochar 2023) பல நன்மைகளைத் தரும். இந்த ராசிக்காரர்களுக்கு பணம் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். சிக்கிய பணத்தை திரும்பிப் பெறுவீர்கள். இது உங்கள் பொருளாதார வளத்தை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சிம்ம ராசிக்காரர்களின் நிலை சிறப்பாக இருக்கும். பழைய மன அழுத்தம்-பிரச்சினைகள் விலகும். தொழிலதிபர்களுக்கு சிக்கிய பணம் கிடைத்து பெரும் நிம்மதி அடைவார்கள். வெளிநாட்டில் இருந்து லாபம் உண்டாகும். பேச்சு சக்தியில் வேலை செய்வார். பொருளாதார நிலை பெரிய அளவில் உயரும். விருப்பமான நிறுவனத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். புதிய வாகனம் வாங்கும் திட்டம் நிறைவேறும்.

மேலும் படிக்க | கடகத்திற்கு வரும் புதன்... இந்த ராசிக்காரர்களுக்கு தொட்டதெல்லாம் தூள் பறக்கும் - செல்வம் செழிக்கும்!

கன்னி: புதன் பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். வியாபாரம் விரிவடையும். கன்னி ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களின் தேடல் முடிவுக்கு வரும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வாழ்வில் சுகபோகங்கள் அதிகரிக்கும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். சம்பள உயர்வுக்கும் வாய்ப்பு உண்டு. வணிக வகுப்பினருக்கு எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும்.

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதனின் பெயர்ச்சி (Budh Rashi Parivartan 2023) பல நன்மைகளைத் தரும். இந்த நேரம் உங்கள் வாழ்க்கையில் நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும். நீங்கள் பெரிய பதவி உயர்வு பெறலாம். தடைப்பட்ட பதவி உயர்வு- சம்பள உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மனைவியுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். கணவன் மனைவி நெருங்கி வருவீர்கள், உங்கள் உறவு வலுவாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை வாய்ப்புகள் உருவாகும். நிறுத்தப்பட்ட பணம் எளிதில் திரும்பப் பெறப்படும். தீவிர பிரச்சனைகள் தீர்க்கப்படும்.

மேலும் படிக்க | இன்னும் 8 நாட்களே... புதன் உதயத்தால் இந்த ரசிகளுக்கு அதிர்ஷ்டம், சரவெடி வெற்றி

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More