Home> Spiritual
Advertisement

மகர சங்கராந்தி முதல் பட்டையை கிளப்பப் போகும் 3 ராசிகள்! அதிர்ஷ்டக்காற்று வீசும்

Happy Pongal 2024: தை மாத பிறப்பாக கொண்டாடப்படும் மகர சங்காரந்தியில், சூரிய பகவானின் ராசி மாற்றம் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர இருக்கிறது. 

மகர சங்கராந்தி முதல் பட்டையை கிளப்பப் போகும் 3 ராசிகள்! அதிர்ஷ்டக்காற்று வீசும்

Surya Gochar 2024: சூரியன் அனைத்து கிரகங்களுக்கும் ராஜா என்று அழைக்கப்படுகிறார். ஒவ்வொரு மாதமும், ஒரு குறிப்பிட்ட தேதியில், சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுகிறார். இது சங்கராந்தி என்று அழைக்கப்படுகிறது. சூரியன் எந்த ராசியில் நுழைகிறாரோ அந்த ராசியின் பெயரால் சங்கராந்தி அழைக்கப்படுகிறது. இம்முறை சூரியன் மகர ராசியில் பிரவேசிக்க உள்ளதால் ஜனவரி 15ம் தேதி மகர சங்கராந்தி என்று அழைக்கப்படுகிறது.

தை மாத பிறப்பாக கொண்டாடப்படும் மகர சங்காரந்தியில், சூரிய பகவானின் ராசி மாற்றம் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர இருக்கிறது. சூரிய பகவானான கதிரவனுக்கு பொங்கல், கரும்பு, புதிய காய்கறிகள் படைக்கப்பட்டு நன்றி தெரிக்கும் நாளாக மகர சங்கராந்தி கொண்டாடப்படுகின்றது. பொங்கல் நேரத்தில் நிகழும் சூரிய பெயர்ச்சியால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பதைத் தெரிந்துக் கொள்வோம். 

மேஷம்

ஜோதிட கணிப்புகளின்படி, மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மகர சங்கராந்தி கிரகப் பெயர்ச்சி நல்லதாக இருக்கும். பொங்கலுக்கு பிறகு நல்ல காலம் பிறக்கும். நிதி ஸ்திரத்தன்மையைத் தூண்டும் இந்த கிரகப் பெயர்ச்சி,புதிய பொறுப்புகளையும் கொண்டு வந்துக் கொடுக்கும்.

மேஷ ராசிக்காரர்கள் தங்கள் மனதிற்கு பிடித்தவர்களுடன் தரமான நேரத்தை அனுபவிப்பார்கள்,மாணவர்கள் கடினமாக உழைத்தால் அவர்களின் உழைப்பின் பலன் நிச்சயம் கிடைக்கும். தொழில் வெற்றிக்கான வாய்ப்புகள் உருவாகின்றன.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டின் முதல் சூரியப் பெயர்ச்சி அருமையாக இருக்கிறது. 2024 ஆம் ஆண்டின் முதல் பெயர்சியில் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்றால், பிற கிரகங்களின் இடமாற்றம் நிதி ஸ்திரத்தன்மைக்கு அருமையாகவே இருக்கும்.

காதல் மற்றும் உறவுகள் செழிக்கும், கன்னி ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைக்கும். மிகவும் முக்கியமான காலகட்டமாக இந்த கிரகப் பெயர்ச்சி இருக்கும்.

மேலும் படிக்க | சுக்கிர தசை, அனைத்திலும் வெற்றி: இந்த ராசிகளுக்கு சுக்கிரன் பெயர்ச்சியால் ராஜயோகம்

மகரம் 
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சூரியப் பெயர்ச்சி மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும்.  நேர்மறையான தொடக்கத்தை கொடுக்கும் ஜனவரி மாத சூரியப் பெயர்ச்சியானது, பல்வேறு முயற்சிகளில் கைகொடுக்கும்.

மத நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட வாய்ப்புகள் தென்படுகின்றன. மகர ராசிக்காரர்கள் அவர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு பங்களிக்கும் செயல்களில் ஈடுபட வாய்ப்புகள் இருக்கிறது. இணக்கமான குடும்ப சூழ்நிலையை உருவாக்கும் பெயர்ச்சியாக இது இருக்கும். 

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | நீங்கள் ஜனவரி மாதம் பிறந்தவரா? அப்போ உங்கள் குணம் இப்படித்தான் இருக்கும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More