Home> Social
Advertisement

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த யோகி பாபு-வின் புது கெட்டப் வீடியோ!

நடிகர் விஜய்யின் சர்கார் படபிடிப்பு தளத்தில் புதிய கெட்டப்பில் வளம் வரும் யோகி பாபு...! 

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த யோகி பாபு-வின் புது கெட்டப் வீடியோ!

நடிகர் விஜய்யின் சர்கார் படபிடிப்பு தளத்தில் புதிய கெட்டப்பில் வளம் வரும் யோகி பாபு...! 

சர்கார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி கோலிவுட் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, இப்படத்தின் படபிடிப்புகள் நடைபெற்று வருகின்ற நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

ஏர்.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் சர்கார். இதில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்து வருகின்றனர். ஏ.ஆர். ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 

சமீபத்தில் நடிகை வரலட்சுமி தனது ட்விட்டர் தளபதி விஜய்-ன் படப்பிடிப்பு தளத்தில் உள்ள புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இதையடுத்து, இவர் தற்போது புதிய பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் சர்கார் குடும்பத்தில் இணைந்துள்ள அடுத்த நடிகரை சொல்லாமல் சொல்லி இருக்கிறார். அந்த வீடியோவில், நகைசுவை நடிகர் யோகி பாபு ஒரு பெண்ணை போல் வேடமிட்டுள்ள ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார்.

அதில், சர்கார் படப்பிடிப்புதலத்தில் மீண்டும் ஒரு பதிவு.... இது யாருடைய கை என்று கண்டுபிடியுங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

அந்த வீடியோ தற்போது இணையத்தில் விரலாக பரவிவருகிது. இந்நிலையில் நயன்தாரா - யோகி பாபு நடிப்பில் உருவாகி வெளிவர காத்திருக்கும் திரைப்படம் ‘கோலமாவு கோகிலா’ வரும் ஆகஸ்ட் 10-ஆம் நாள் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதோ அந்த வீடியோ பதிவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது...!  

 

Read More