Home> Social
Advertisement

Viral video: ஆக்கிரோஷமாக தாக்கும் கீரி; எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் நாகம்!

Cobra vs Mongoose: கீரியின் உடலில் இயற்கையாகவே விஷ எதிர்ப்பு சக்தி உள்ளதால், பாம்பு கொத்தினால், கீரியின் உடலில் காயங்கள் தான் ஏற்படுமே தவிர, சாகாது.

Viral video: ஆக்கிரோஷமாக தாக்கும் கீரி; எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் நாகம்!

பாம்பு என்ற பெயரைக் கேட்டாலே படையே நடுங்கும். அதிலும் நாகப்பாம்பு என்பது மிகவும் ஆபத்தான, அதிக விஷம் கொண்ட பாம்பாக கருதப்படுகிறது. இருப்பினும், சில மனிதர்கள் கூட பாம்பை பிடிக்கும் பணியில் இருக்கிறார்கள் என்பதும் உண்மை தான். அதே போல் பாம்பை அச்சமில்லாமல் தாக்கும் பல விலங்குகளும் உள்ளன. சில விலங்குகள் பாம்புகளை தங்களுக்கு இரையாக ஆக்குகின்றன. அதில் முக்கியமான ஒன்று கீரி. கீரியின் உடலில் இயற்கையாகவே விஷ எதிர்ப்பு சக்தி உள்ளதால், பாம்பு கொத்தினால், கீரியின் உடலில் காயங்கள் தான் ஏற்படுமே தவிர, அது சாகாது என்று கூறுவார்கள்.

பொதுவாக பாம்பு கீரி சண்டையில் பாம்பை கீரி கொன்றுவிடும். பாம்பு படம் எடுத்து கீரியை தாக்கி களைத்துப் போன பின், சோர்வாக உள்ள பாம்பின் தலையை கடித்து கீரி கொன்றுவிடும். இந்நிலையில் பாம்புக்கும் கீரிக்கும் இடையிலான ஆக்கிரோஷமான சண்டை தொடர்பான காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

வைரல் வீடியோவை இங்கே பாருங்கள்:

 

 

மேலும் படிக்க | Viral Video: மலைப்பாம்பிடம் சிக்கிய முதலை... திக் திக் நிமிடங்கள்

நிலப்பகுதியில் கீரியும் நாகமும் சண்டையிடுவதை பார்த்திருப்பீர்கள். ஆனால் இந்த வீடியோவில், நாகமும் கீரியும் ஆக்கிரோஷமாக நீரில் ஆக்கிரோஷமாக சண்டையிடுவதைக் காணலாம். ஆனால், ஆழமில்லாத தேங்கி இருக்கும் நீர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தண்ணீர் தேங்கியுள்ள பகுதியில் ஒரு நாகப்பாம்பு மற்றும் கீரி இருப்பதை காணலாம். இரண்டுமே மோதல் மனநிலையில் இருப்பதால் பரஸ்பரம் தாக்க கடுமையாக முயற்சித்து வருகின்றனர். பாம்பும் கீரியும் ஒன்றுக்கொன்று எதிரிகள் என்பது அனைவரும் அறிந்ததே.

இரண்டும் சண்டை போட்டுக்கொண்டாலும், இறுதியில், பாம்பு தாக்குபிடிக்க முடியாமல் தாப்பி செல்வதையும் காணலாம். இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில், பகிரப்பட்டுள்ளது. பல பயனர்கள் (சமூக ஊடக பயனர்கள்) வீடியோவை மிகவும் விரும்பியுள்ளனர். 

மேலும் படிக்க | Viral Video: அப்படி என்ன தான் சாப்பிட்டீங்க சார்... போதையில் ‘தள்ளாடும்’ அணில்!

மேலும் படிக்க | Viral Video: ‘குட்டிக்கரணம்’ போடும் புறா; இணையவாசிகளை சொக்க வைத்த வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Read More