Home> Social
Advertisement

வைரலாகும் கேப்டன் வீராட் கோலி வெளியிட்ட வேடிக்கையான புகைப்படம்..!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் வீராட் கோலி மிக வேடிக்கையான புகைப்படம் ஒன்றை அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்!!

வைரலாகும் கேப்டன் வீராட் கோலி வெளியிட்ட வேடிக்கையான புகைப்படம்..!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் வீராட் கோலி மிக வேடிக்கையான புகைப்படம் ஒன்றை அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்!!

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, நியூசிலாந்து அணியுடன் வரும் 21 ஆம் தேதி டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. முன்னதாக தற்போது பயிற்சி ஆட்டத்தில் இரு அணிவீரர்களும் ஆடி வருகின்றனர்.

நியூசிலாந்தில் உள்ள இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 21ஆம் தேதி துவங்குகிறது. இந்நிலையில் தற்போது இந்திய அணி, நியூசிலாந்து லெவன் அணிக்கு எதிரான மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில் பங்கேற்றது. 

இதற்கிடையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, வேகப்பந்துவீச்சாளர் முகம்மது ஷமி, பிரித்வீ ஷா ஆகியோருடன் சேர்ந்து போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “புது போஸ்ட் அழகான நண்பன்” என குறிப்பிட்டுள்ளார். அந்த போட்டோவில் மூன்று பேரும் வித்தியாசமான முறையில் வேடிக்கையாக செய்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த போட்டோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 21 ஆம் தேதி முதல் வெலிங்டனில் நடக்கிறது.

டெஸ்ட் தொடருக்கு முன்னதாக பயிற்சி ஆட்டமும் நடைபெற்று வரும்நிலையில் இடைப்பட்ட நேரத்தில் தன்னுடைய ரசிகர்களை குஷிப்படுத்தவும் விராட் கோலி தவறவில்லை. அவரும் முகமது ஷமி, பிரித்வி ஷா ஆகியோரும் இணைந்து ரசிகர்களுக்கு எவர்டைம் உற்சாகத்தை தற்போது ஏற்படுத்தியுள்ளனர். அவர்களின் பல்வேறு முக சேட்டைகளை கொண்ட புகைப்படத்தை விராட் கோலி தன்னடை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  

 

Read More