Home> Social
Advertisement

Viral Video: கில்லாடி தான்மா நீ... பாம்பின் கிடுக்கிப்பிடியில் இருந்து தப்பித்த தவளை..!

பாம்பு மற்றும் கீரி போன்ற பரம எதிரியான ஜோடி போன்றது தான் பாம்பு மற்றும் தவளை இடையிலான உறவு  என்றால் மிகையில்லை. ஆனால், இவை இரண்டும் எதிரிகள் இல்லை.

Viral Video: கில்லாடி தான்மா நீ... பாம்பின் கிடுக்கிப்பிடியில் இருந்து தப்பித்த தவளை..!

பாம்பு மற்றும் கீரி போன்ற பரம எதிரியான ஜோடி போன்றது தான் பாம்பு மற்றும் தவளை இடையிலான உறவு  என்றால் மிகையில்லை. ஆனால், இவை இரண்டும் எதிரிகள் இல்லை.  தவளைகள் பாம்புகளின் பொதுவான இரையாகும். அவற்றின் வாழ்விடம் தவளைகளையும் உள்ளடக்கியது என்பது தனிச்சிறப்பு. வல்லவன் வாழ்வான் என்ற விதி விலங்குகள் வாழ்க்கையில் மிக சரியாக பொருந்தும். வலிமையும் சாதுர்யமும் பொருந்தியவை, பலம் குறைந்த விலங்களை தனது இரையாக்கிக் கொள்ளும்.  அதே சமயம் வலிமை குறைவாக இருந்தால், தனது சாதுர்யத்தினால், தப்பிக்கும் விலங்குகளும் உண்டு.

ட்விட்டரில் பகிரப்பட்டுள்ள வித்தியாசமான  வீடியோ பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. சுமார்  31 விநாடிகள் நீடிக்கும் இந்த வீடியோ ஒரு திரில்லர் படம் பார்ப்பதைப் போல் உள்ளது. இந்த வீடியோவில் தவளை ஒன்று பெரிய இரும்பு கேட் ஒன்றின் மீது ஏறுவதைக் காணலாம். பாம்பு ஒன்று அதன் கால்களை மிக கெட்டியாக பிடித்துக் கொண்டு அதனை விழுங்க முயற்சி செய்வதையும் காணலாம்.  ஆனால் தவளை தனது முழு வலிமையையும் திரட்டி, பாம்பின் கிடுக்கிபிடியில் இருந்து தப்பிக்கிறது.

வைரலாகும் வீடியோவை கீழே காணலாம்:

பொதுவாக, பாம்பு என்றால் படையே நடுங்கும். பெயரை கேட்டால் எட்டாத தூரம் ஓடும் மனிதர்கள் பலரை நாம் பார்த்திருப்போம். விலங்குகளில் பலவும் கூட பாம்பை சீண்டி பார்க்கும் தைரியத்தை கொண்டிருப்பதில்லை. ஆனால், இங்கே தவளை ஒன்று பாம்பை ஏமாற்றி, அதன் பிடியுல் இருந்து தப்பிப்பதை பார்த்தால் ஆச்சர்யத்திற்கு உள்ளாவீர்கள். தினமும் சமூக ஊடகங்களில் பல வினோதமான மற்றும் விசித்திரமான வீடியோக்கள் பகிரப்படுகின்றன. ஆனால், வழக்கத்திற்கு மாறாக நடைபெறும் இந்த போராட்டம்  மிகவும் வைரலாகியுள்ளது. பொதுவாக மக்கள் தங்கள் அன்றாட வேலைசுமையை குறைக்க, சமூக ஊடகங்களில் அதிக நேரத்தை வீடியோக்களைப் பார்ப்பதில் செலவிடுகிறார்கள். அந்த வகையில் பாம்பு வீடியோக்களுக்கு ரசிகர்கள் ஏராளம். அவர்களை இந்த வீடியோ நிச்சயம் உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.

மேலும் படிக்க | Viral Video: தோகை விரித்து ஆடி காதலியை கவர போராடும் ஆண் மயில்... மசியாத பெண் மயில்!

சில நாட்களுக்கு முன்னர் சிங்கம் மிகவும் ஜாலியாக வந்து விளையாடுவதை காட்டும் வீடியோ மிகவும் வைரலாகியது. சிங்கம் ஒன்று கடற்கரை ஒன்றில் ஜாலியாக பந்து விளையாடுவதை காணலாம். அளவில் பெரியதாக இருக்கும் பந்தினை, இங்கேயும் அங்கேயும் என ஓடி கட்டுப்படுத்தி, உற்சாகமாக பந்து விளையாடுகிறது. கடற்கரை காற்றினை ரசித்துக்கொண்டே, ஓடி விளையாடும் வீடியோ மிகவும் வைரலாகியது. 

மேலும் படிக்க | Viral Video: சிங்கம் வேட்டையாடி பார்த்திருப்பீங்க... ஜாலியா பந்து விளையாடி பார்த்திருக்கீங்களா

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | பாம்புடன் விளையாடும் பாப்பா: இணையத்தை பதற வைத்த பகீர் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

Read More