Home> Social
Advertisement

Viral Video of Legend Saravanan: லெஜண்ட் சரவணன் படத்தின் ஆக்சன் காட்சி படப்பிடிப்பு!

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது.

Viral Video of Legend Saravanan: லெஜண்ட் சரவணன் படத்தின் ஆக்சன் காட்சி படப்பிடிப்பு!

கடந்த ஆண்டு சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டு இருந்தது. அந்தவவகையில் தற்போது இந்த படத்தின்  படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. 

இந்தப் படத்தை அஜித் (Ajith), விக்ரம் நடித்த ’உல்லாசம்’ படத்தை இயக்கிய ஜேடி ஜெர்ரி இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்படும்.

ALSO READ | நடிகர் அஜித்தின் சங்கடமும் ரசிகர்களின் குமுறலும்… இதில் முதலமைச்சருக்கு என்ன சம்பந்தம்?

இந்த படத்தின் ஒரே ஒரு பாடல் காட்சிக்கு மட்டும் ரூ.10 கோடி செலவு செய்திருப்பதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் இன்று முதல் மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்த படப்பிடிப்பில் அதிரடி ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது என்பதும் இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 

 

 

அந்தவகையில் வேல்ராஜ் ஒளிப்பதிவில் அந்தோணி ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் (Harris Jayaraj) இசை அமைக்கிறார். இப்படத்தில் கீதிகா திவாரி, பிரபு, ரோபோ ஷங்கர், விஜயகுமார், நாசர், தம்பி ராமைய்யா, மயில்சாமி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

ALSO READ | 'ருத்ர தாண்டவம்' படத்தில் வில்லனாக நடிக்கும் Director கௌதம் மேனன்

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More