Home> Social
Advertisement

Viral News: சாலையை வழிமறித்த யானைகள்; பீதியில் உறைந்த பயணிகள்

யானையின் வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றது. 

Viral News: சாலையை வழிமறித்த யானைகள்; பீதியில் உறைந்த பயணிகள்

தாளவாடி மலைப்பகுதியில் யானை ஒன்று, தனது குட்டியுடன் அரசு பேருந்தை வழிமறித்து நின்றதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். 

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த காட்டு யானைகள் (Elephant) மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் நடமாடுவது வழக்கம்.

ALSO READ: Viral Video: முழு மானை விழுங்கும் மலைப்பாம்பு நெஞ்சைப் பதபதைக்கும் வீடியோ

இந்த நிலையில் இன்று அரசுப்பேருந்து ஒன்றில் 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தாளவாடி மலைப்பகுதியில் இருந்து சத்தியமங்கலம் சென்றது. அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை தனது குட்டியுடன் தேசிய நெடுஞ்சாலையில் ஜாலியாக நடந்து வந்தது. திடீரென காட்டு யானை குட்டியுடன் வருவதை கண்ட வாகன ஓட்டிகள் யானையைக் கண்டு அஞ்சியபடி வாகனங்களை அடுத்தது நிறுத்தினார்கள் இதேபோல் சத்திய மங்கலம் நோக்கி சென்ற பேருந்தும் நிறுத்தப்பட்டது.

ஆனால் அந்த யானைகள் வாகனங்களை பற்றி சற்றும் கவலைப்படாமல் அரசு பேருந்தை நோக்கி வந்தது. இதனை தொடர்ந்து அந்த காட்டு யானை பேருந்தின் முன்புறம் நின்றபடி தனது தும்பிக்கையால் கண்ணாடியை உரசியது. யானை பேருந்தின் முன்பு நின்றபடி கண்ணாடியில் உரசுவதை கண்ட பேருந்தில் உள்ளே இருந்த பயணிகள் அச்சமடைந்தனர்.

பீதியில் உறைந்த பயணிகள்யானையை கும்பிட்டனர். சிலர் அதனை உள்ளே இருந்து விரட்ட முயன்றனர். இதைத்தொடர்ந்து காட்டு யானை பேருந்தில் முன் புறத்தில் இருந்து விலகி ஓரமாக பேருந்தை கடந்து சென்றது. மேலும் அங்கு நின்று கொண்டிருந்த மற்ற வாகனங்களும் புறப்பட்டு சென்றன.

வனப்பகுதி என்பதால் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி சாலையை கடந்து செல்கின்றன. இதனால் அந்த பகுதியில் செல்லும் விலங்குகளை தொந்தரவு செய்யக்கூடாது என்று வனத்துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட வீடியோவை (Viral Video) பார்த்த அனைவரும் இதை சமூக ஊடகங்களில் (Social Media) வெகுவாக பகிர்ந்து வருகின்றனர்.

ALSO READ: Viral Video: நடுங்க வைக்கும் வீடியோ; இதயம் பலவீனமானவர்கள் பார்க்காதீர்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Read More