Home> Social
Advertisement

சாவகாசமாய் அமர்ந்துகொண்டு கார்ட்டூன் பார்க்கும் பூனைக்குட்டிகள்!

ஒரு பூனையின் மீது மற்றொரு பூனை சாய்ந்துகொண்டு டேப்லெட்டில் கார்ட்டூன் பார்க்கும் காட்சியை  இணையவாசிகள் விரும்பி வருகின்றனர்.  

சாவகாசமாய் அமர்ந்துகொண்டு கார்ட்டூன் பார்க்கும் பூனைக்குட்டிகள்!

இந்த பரபரப்பான சூழலில் இணையத்தில் நாம் காணும் சில சம்பவங்கள் மனதை இதமாக்குவதாய் அமைந்திருக்கிறது.  குழந்தைகளின் குறும்புகள் போல பூனைகளின் குறும்புகளுக்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது, அவை எதேச்சையாக செய்யும் செயல்கள் கூட பலரது இதயங்களையும் கொள்ளை கொண்டு விடுகிறது.  பொதுவாக குழந்தைகள் தான் அதிகமாக கார்ட்டூன் பார்க்க விரும்புவார்கள், கார்ட்டூன் என்றாலே குழந்தைகளுக்கானது தான்.  அப்படி இருக்கையில் இரண்டு பூனைகள் ஆர்வமாக கார்ட்டூன் பார்க்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | கொஞ்சிக் கொஞ்சி பேசி மதிமயக்கும் கிளி; வியப்பில் ஆழ்ந்த நெட்டிசன்கள் 

அந்த காட்சியானது ட்விட்டரில் யோக் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.  அந்த வைரல் வீடியோவில், தரையில் இரண்டு பூனைகள் அமர்ந்து இருப்பதை காணலாம்.  ஒரு பூனை சிகப்பு நிறத்தில் உடையணிந்து கொண்டு அமர்ந்திருக்க, அதன் முன்புறத்தில் அதன் மீது சாய்ந்தவாறு மற்றொரு பூனைக்குட்டி அமர்ந்திருக்கிறது.  இந்த இரண்டு பூனைகளும் ஒரு டேப்லெட்டை வைத்துக்கொண்டு அதில் கார்ட்டூனை விரும்பி பார்த்துக்கொண்டு இருக்கிறது.  அவை இரண்டும் கொஞ்சம் கூட அசையாமல் அந்த கார்ட்டூனை அவ்வளவு கவனமுடன் ரசித்து பார்த்து கொண்டிருக்கிறது.

 

இணையத்தில் பரவிய இந்த வீடியோவை இதுவரை பதின்மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட இணையவாசிகள் பார்த்து ரசித்து இருக்கின்றனர்.  பலரும் இந்த இரண்டு பூனைகளை வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர், மேலும் வீடியோவிற்கு பல லைக்குகள் குவிந்து வருகிறது.

மேலும் படிக்க | தாக்க வந்த புறாவுக்கு கிஸ் கொடுத்த பூனை: இணையவாசிகளை அழ வைத்த வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More