Home> Social
Advertisement

ஆம்புலன்ஸில் சென்ற உரிமையாளர்! பின்னால் ஓடிய நாய்! மனதை கவரும் வீடியோ!

தனது உரிமையாளர் ஆம்புலன்சில் சென்றதை தெரிந்து கொண்ட வளர்ப்பு நாய், அந்த ஆம்புலன்ஸிற்கு பின்னால் மருத்துவமனை வரை ஓடி சென்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.  

ஆம்புலன்ஸில் சென்ற உரிமையாளர்! பின்னால் ஓடிய நாய்! மனதை கவரும் வீடியோ!

வைரல் வீடியோவில் ஒன்றில் விசுவாசமான நாய், தன் உரிமையாளர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் செல்கிறார் என்று தெரிந்து கொண்டு அதன் பின்னாலேயே ஓடி செல்கிறது. நாம் இணையத்தில் தினசரி பல விதமான வீடியோக்களை பார்க்கிறோம். அதில் சில வீடியோக்கள் நமது மனதை கவரும் வகையில் இருக்கும். அப்படி ஒன்றாக இந்த நாயின் செயல் அமைத்துள்ளது. மருத்துவமனைக்கு அழைத்து வரை பின்னாலேயே ஆம்புலன்ஸைத் துரத்தி நாய் செல்கிறது. பிறகு சிறிது நேரத்தில் இதனை உணர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர், வண்டியை நிறுத்தி நாயை ஆம்புலன்சுக்குள் செல்ல அனுமதிக்கிறார். அதனை தொடர்ந்து மருத்துவமனை வரை நாய் தன் உரிமையாளருடன் செல்கிறது..

மேலும் படிக்க | இது எங்க ஏரியாவாக்கும்... ட்ராபிக் ஜாமை ஏற்படுத்தி கெத்து காட்டிய சிங்கங்கள்...

இந்த வீடியோ இணையத்தில் பலரது மனதையும் கவர்ந்துள்ளது. X தளத்தில் TaraBull என்ற பயனர் 27 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர், தற்போது வரை இந்த வீடியோவை 15 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. தனது உரிமையாளரை பிரிய மனமில்லாமல் பின்னாலே சென்றதும், பிறகு ஆம்புலன்ஸ்குள் அனுமதித்ததும் பலரது இதயங்களை வென்றுள்ளது. “ஒரு நாய் அதன் உரிமையாளரை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸைப் பின்தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தது. பிறகு அதனை உள்ளே அனுமதித்தனர்” என்ற வார்த்தைகளுடன் பதிவிடப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளத்தில் வீடியோ வைரலானதை தொடர்ந்து, "மனிதர்கள் நாய்களுக்கு தகுதியற்றவர்கள். நாய்கள் மிகவும் நன்றியுள்ளவை மற்றும் எப்போதும் பாதுகாப்பாக இருக்கும்,” என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். மேலும் பலரும் தங்கள் சொந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். “எனது சகோதரி அவரது வீட்டில் இறந்துவிட்டார், பிறகு அவளை ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்ல எடுத்து வைத்தபோது, ​​​​அவரது ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் ஆம்புலன்ஸைப் பின்தொடர்ந்து ஓடியது. அப்போது அது இதயத்தை நொறுங்க செய்தது. இந்த சம்பவம் எனக்கு அதனை நினைவுபடுத்தியது" என்று பதிவிட்டுள்ளார். "நாய்கள் நிச்சயமாக கடவுள் கொடுத்த பரிசு" என்று மற்றொரு பயனர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | குதிரைக்கும் காமெடியான ஹேர்கட்! இது நிலைமையை பாத்தீங்களா..வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More