Home> Social
Advertisement

’எப்பா சாமி முடியல டா டேய் ’ நண்பனுக்கு உதவ வந்த புண்ணியவான பாருங்க: வைரல் வீடியோ

நண்பனுக்கு உதவ வந்த புண்ணியவான் செய்த செயலைக் கண்டு, நண்பனே திகைத்துப்போன வீடியோ இப்போது வைரலாகியிருக்கிறது.  

’எப்பா சாமி முடியல டா டேய் ’ நண்பனுக்கு உதவ வந்த புண்ணியவான பாருங்க: வைரல் வீடியோ

ஓட்டிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு எந்த மன கஷ்டமும் இருக்காது. எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் அசால்டாக எதிர்கொள்வார்கள். இது எல்லாமே நண்பர்கள் கொடுக்கும் தைரியம் தான். அவர்கள் இருக்கும் வரை அவர்கள் தான் உலகம் என்று இருப்பவர்கள் ஏராளம். ஒரு நாள் கூட நண்பர்களை பிரியாமல் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பவர்கள் இங்கு அதிகம் இருக்கின்றனர். இதெல்லாம் உண்மை என்றாலும், நண்பர்களுக்கு இடையே நடக்கும் குசும்பு விளையாட்டுகளை பொறுத்தவரை ரசனையின் உச்சமாக இருக்கும். அப்போது நீங்கள் அதனை நேரில் பார்த்தால் இரண்டு நாட்களுக்கு உங்களால் சிரிப்பை அடக்க முடியாது. அந்தளவுக்கு அவர்களின் விளையாட்டும், திருவிளையாடல்களும் இருக்கும்.

மேலும் படிக்க | முதலையை மூச்சுத் திணற வைத்து விழுங்கிய பைதான்: வைரல் வீடியோ

அப்படியான ஒரு வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி, பலரையும் ரசிக்க வைத்திருக்கிறது. உதவி செய்ய வந்த நண்பன் செய்த செயலைப் பார்த்து, அவனுடைய நண்பனே திகைத்துப்போனது தான் நகைப்பின் உச்சம். அந்த வீடியோவில் நண்பரின் செருப்பு குளத்துக்குள் விழுந்து இருக்கிறது. அதனை நீருக்குள் இறங்கி எடுக்காமல் கரையில் இருந்து கொண்டே ஒரு குச்சியின் உதவியுடன் எடுக்க முயற்சி செய்கிறார்கள். நண்பரும் அதற்கு உதவி செய்வது போல் பாசாங்கு செய்து கொண்டிருக்கிறார். உண்மையில் செருப்பை நீரில் விட்டவரே ஒரு குச்சியை எடுத்து, அதனை மீட்க முயற்சிக்கிறார். ஒரு சமயத்தில் அந்த குச்சியை நீருக்குள் தவற விட்டுவிடுகிறார். இதனால் என்ன செய்வது என அவர் யோசிப்பதற்குள் அருகில் இருந்த நண்பர் உடனடியாக குளத்திற்குள் இறங்கி, நண்பர் விட்ட குச்சியை எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கிறார்.

இதில் காமெடி என்னவென்றால் அந்த குச்சிக்கு அருகிலேயே தான் அந்த செருப்பும் இருக்கிறது. குச்சியை எடுப்பதற்கு பதிலாக செருப்பையே எடுத்துக் கொண்டு வந்து கொடுத்திருக்கலாம். இதனைப் பார்த்த நண்பர், குச்சியை எடுத்து வந்த புண்ணியவானை பார்த்து சிரிக்கவும் முடியாமல் முறைத்தும் பார்க்க முடியாமல் ரெண்டு கெட்ட நிலைமயாக இருக்கிறார். இந்த வீடியோ இப்போது டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் செம வைரலாக பரவியுள்ளது. டிவிட்டரில் மட்டும் இந்த வீடியோ 1.5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றிருக்கிறது. கமெண்ட் செக்ஷனில் மட்டும் ஏராளமானோர் தங்களுக்கும் இப்படியான நண்பர்கள் இருப்பதாக கூறி சிரிப்புடன் கமெண்ட் அடித்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் படிக்க | குரங்குக்கு கொழுப்பு பாத்தீங்களா..பாவம் அந்த 'பாப்பா': வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More