Home> Social
Advertisement

Pizza சாப்பிட்டுக்கொண்டே Netflix பார்க்க ஆசையா? இந்த company அதற்கு சம்பளமும் கொடுக்கும்!!

தேசிய பிட்சா தினமான பிப்ரவரி 9 ஆம் தேதியன்று, வேலைக்காக விண்ணப்பித்தவர்களில் ஒரு அதிர்ஷ்டசாலிக்கு பிட்சா சாப்பிட்டுக்கொண்டே மூன்று Netflix தொடர்களை பார்ப்பதற்கு $ 500 வழங்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

Pizza சாப்பிட்டுக்கொண்டே Netflix பார்க்க ஆசையா? இந்த company அதற்கு சம்பளமும் கொடுக்கும்!!

சமீப காலங்களில் பல வினோத வேலை வாய்ப்புகளைப் பற்றி நாம் கேள்விப்பட்டு வருகிறோம். இணையத்தில் பல ஆச்சரியமான பணிகளைப் பற்றிய விளம்பரங்கள் வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு வேலைக்கான விளம்பரம் தற்போது அனைவரின் கவனத்தையும் கவர்ந்து வருகின்றது.

வேலைவாய்ப்பிற்கான வினோத விளம்பரங்களில் இந்த வேலைக்கு கண்டுப்பாக ஒரு தனி இடம் இருக்கும். ஆம்!! அமெரிக்காவின் (America) போனஸ் ஃபைண்டர் என்ற ஒரு நிறுவனம் இந்த விளம்பரத்தை அளித்துள்ளது. சட்டப்பூர்வமான சூதாட்ட

வலைத்தளங்களுக்கான ஒப்பந்தங்களை மதிப்பாய்வு செய்வதற்கும் வழங்குவதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அமெரிக்க வலைத்தளமான போனஸ்ஃபைண்டர், தொழில்முறை பிஞ்ச் கண்காணிப்பாளருக்கான (Professional binge watcher) பணிக்காக விளம்பரம் செய்துள்ளது.

"தடுமாற்றமான நிலையில், 2021 ஆம் ஆண்டு துவங்கியிருக்கிறது. பல நாடுகளில் மீண்டும் லாக்டௌன் (Lockdown) விதிக்கப்படுகின்றது. இந்த நிலையில் போனஸ்ஃபைண்டர் நிறுவனம் மக்களிடையே மகிழ்ச்சியை பரப்ப தன்னால் ஆனதை செய்ய விரும்புகிறது. பிட்சா சாப்பிட்டுக்கொண்டே நெட்ஃப்ளிக்ஸ் பார்க்க தயாராக உள்ளவர்களுக்கு நல்ல தொகையை அளிக்க தயாராக இருக்கிறோம்” என்று அந்த நிறுவனம் தனது வலைத்தளத்தில் விளம்பரம் செய்துள்ளது.

எனவே, தேசிய பிட்சா தினமான பிப்ரவரி 9 ஆம் தேதியன்று, இந்த வேலைக்காக விண்ணப்பித்தவர்களில் ஒரு அதிர்ஷ்டசாலிக்கு பிட்சா சாப்பிட்டுக்கொண்டே மூன்று Netflix தொடர்களை பார்ப்பதற்கு $ 500 வழங்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

ALSO READ: Twitter: சிறந்த கேப்டனாக செயல்பட்டது இம்ரான் கானா? விராட்டா?

தேர்ந்தெடுக்கப்பட்ட நபர், ஒவ்வொரு தொடரையும் நன்றாக பார்த்து, அவற்றின் கதை, கதைக்களம், நடிகர்களின் நடிப்பு தரம், தொடரின் முடிவு போன்ற அம்சங்களை பரிசீலனை செய்து மதிப்பாய்வு செய்ய வேண்டும். மேலும் அவர்கள் உண்ணும் பிட்சாவின் (Pizza) ருசி, பேசின் அமைப்பு, பணத்திற்கான மதிப்பு போன்ற அம்சங்களையும் மதிப்பிட வேண்டும்.

இதற்கிடையில், மற்றொரு வேலை வாய்ப்பு சமூக ஊடகங்களில் (Social Media) அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது. இங்கிலாந்தை தளமாகக் கொண்ட பெட்ரூம் அத்லெடிக்ஸ் என்ற நிறுவனத்தில் காலணி சோதனையாளருக்கான ​​(Slipper Tester) இரண்டு காலியிடங்கள் உள்ளன.

தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள், மாதத்தில் இரண்டு நாட்களுக்கு, ஒரு நாளைக்கு 12 மணி நேரம் நிறுவனம் அளிக்கு காலணியை அணிய வேண்டும். ஒரு மாதத்தில் இரண்டு நாட்களுக்கு இந்த வேலையை செய்ய அவர்களுக்கு மாத சம்பளமாக 333 பவுண்டுகள் வழங்கப்படும். இந்த ஊதியம் அவர்களுக்கு ஒரு வருடத்திற்கு வழங்கப்படும். நிறுவனம் அளிக்கும் பல்வேறு காலணிகள் மற்றும் பிற பொருட்களை அவர்கள் பரிசோதித்து அவற்றைப் பற்றிய பின்னூட்டங்களையும் கருத்துகளையும் அளிக்க வேண்டும்.

ALSO READ: Pakistan PM Imran Khan: ட்விட்டரில் ட்ரோல் ஆகும் காரணம் தெரியுமா?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More