Home> Lifestyle
Advertisement

தளபதி விஜய் படத்திற்கு மேலும் ஒரு சர்வதேச கெளரவம்

அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்து வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘மெர்சல்’. இந்தப் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்தது. இந்தப் படத்தில் நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் என மூன்று ஹீரோயின்கள் நடித்திருந்தனர். 

எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்க, சத்யராஜ், வடிவேலு, சத்யன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். 

கடந்த வருடம் தீபாவளிக்கு வெளியாகி பிரம்மாண்ட வரவேற்ப்பை பெற்றது ‘மெர்சல்’ படம். பல சர்ச்சைகளை தாண்டி 250 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் ஈட்டியது. 

இந்நிலையில் தற்போது மெர்சல் படம் கொரியாவில் நடக்கவுள்ள Bucheon International Fantastic Film Festival-ல் திரையிட அழைப்பு வந்துள்ளதாக கூறப்பட்டு வருகிறது. சமீபத்தில் இந்த படத்திற்கு இங்கிலாந்தில் தேசிய விருது கிடைத்தது. அதை விஜய் ரசிகர்கள் பெருமையுடன் கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More