Home> Social
Advertisement

விஜய் ஆண்டனி-ன் ‘திமிரு பிடிச்சவன்’ Motion Poster வெளியானது!

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகவிருக்கும் திமிரு பிடிச்சவன் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது!

விஜய் ஆண்டனி-ன் ‘திமிரு பிடிச்சவன்’ Motion Poster வெளியானது!

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகவிருக்கும் திமிரு பிடிச்சவன் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது!

நான் திரைப்படத்தின் மூலம் தமிழ்திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. விரல்விட்டு என்னும் அளவிலான படங்களில் மட்டுமே நடித்து தனக்கென ஓர் தனி முத்திரியினை பதித்தவர். தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமான தலைப்புகளைத் தேடிப்பிடித்து சூட்டுவதையும் வழக்கமாக வைத்திருக்கிருக்கும் விஜய் ஆண்டனி தற்போது தனது அடுத்தப்படத்தின் தலைப்பை அறிவித்துள்ளார்.

சமீபத்தில் அவரது காளி படம் வெளியான நிலையில், தனது அடுத்தப் படத்தி நடித்து வருகின்றார். பிச்சைக்காரன், சைத்தான், எமன் நெகட்டிவ்வான தலைப்பை தன் படத்துக்கு வைப்பதை தன்னுடைய பாணியாக வைத்திருக்கும் விஜய் ஆண்டனி அடுத்து நடிக்கும் படத்துகு "திமிரு பிடிச்சவன்" என பெயர் சூட்டியுள்ளார்.

இப்படத்தில் முதல்முறையாக காவலராக  நடிக்கிறார் விஜய் ஆண்டனி. விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்ரேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை கணேஷா என்ற புதுமுக இயக்குநர் இயக்குகிறார். ரிச்சர்ட் எம்.நாதன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். 

இந்நிலையில் இப்படத்தின் மோஷன் போஸ்டரினை தற்போது அவர் வெளியிட்டுள்ளார்!

Read More