Home> Social
Advertisement

Viral Video: New Nealand MP-யாக சமஸ்கிருதத்தில் oath எடுத்து சரித்திரம் படைத்த இந்தியர்

டாக்டர் ஷர்மா, தனக்கு பல இந்திய மொழிகளில் பேசத் தெரியும் என்றும், இந்தியாவின் பண்டைய மொழியான சமஸ்கிருதத்தை தான் தேர்வு செய்ய விரும்பியதாகவும் கூறினார்.

Viral Video: New Nealand MP-யாக சமஸ்கிருதத்தில் oath எடுத்து சரித்திரம் படைத்த இந்தியர்

நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் (MP) டாக்டர் கௌரவ்சர்மா சர்மா புதன்கிழமை வெளிநாட்டில் சமஸ்கிருத மொழியில் அமைச்சர் பதவிக்கு சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் நாடாளுமன்ற உறுப்பினராகி சரித்திரம் படைத்துள்ளார்

இமாச்சலப் பிரதேசத்தைச் (Himachal Pradesh) சேர்ந்த 33 வயதான டாக்டர் சர்மா சமீபத்தில் நியூசிலாந்தில் உள்ள தொழிலாளர் கட்சியைச் (Labour Party) சேர்ந்த எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

டாக்டர் ஷர்மா, தனக்கு பல இந்திய மொழிகளைப் பேசத் தெரியும் என்றும், இந்தியாவில் பேசப்படும் தற்போதைய மொழிகளின் பரவலான ஒரு மொழியைத் தேர்வு செய்ய தான் விரும்பியதாகவும் கூறினார்.

"நான், கௌரவ் சர்மா, மாட்சிமை பொருந்திய இரண்டாவது ராணி எலிசபெத் மற்றும் அவரது வாரிசுகளுக்கு சட்டப்படி உண்மையானவனாகவும் நியாயமானவனாகவும் இருப்பேன் என உறுதி கூறுகிறேன். கடவுளே எனக்கு உதவுங்கள்" என்று நியூசிலாந்தின் நாடாளுமன்றத்தில் பதவியேற்பு அமர்வின் போது அவர் கூறினார்.

அவர் பேசிய வீடியோவை இங்கே காணலாம்:

ஒரு ட்வீட்டில், நியூசிலாந்து (New Zealand) மற்றும் சமோவாவின் உயர் ஆணையரான முக்தேஷ் பர்தேஷி “நியூசிலாந்து பாராளுமன்றத்தில் இளைய, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களில் ஒருவரான @gmsharmanz இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். முதலில் நியூசிலாந்தின் பூர்வீக மௌரி மொழியிலும், அதைத் தொடர்ந்து இந்தியாவின் பண்டைய மொழியான சமஸ்கிருதத்திலும் அவர் சத்தியப்பிரமாணம் செய்தார். இந்தியா மற்றும் நியூசிலாந்தின் கலாச்சார மரபுகளுக்கு அவர் தனது ஆழ்ந்த மரியாதையைக் காட்டியுள்ளார்” என்று எழுதினார்.

ALSO READ: Scotland அரசு அந்நாட்டு பெண்களுக்கு அளித்துள்ள மிகப்பெரிய பரிசு: Free Sanitary Pads

அவர் ஏன் இந்தியில் பேசவில்லை என்று கேட்ட ஒரு ட்வீட்டுக்கு பதிலளித்தபோது, ​​டாக்டர் ஷர்மா “உண்மையை சொல்ல வேண்டுமானால், நான் அதைப் பற்றி நினைத்தேன், ஆனால் பஹாரி (எனது முதல் மொழி) அல்லது பஞ்சாபியிலும் சத்தியப் பிரமாணம் எடுக்கலாம் என தோன்றியது. ஆனால் எல்லோரையும் மகிழ்விப்பது கடினம். பின்னர், சமஸ்கிருதம் அனைத்து இந்திய மொழிகளையும் (என்னால் பேச முடியாத மொழிகளைக் கூட) உள்ளடக்கிய வகையில், அனைத்துக்கும் மரியாதை செலுத்தும் வகையில் இருக்கும் என நான் முடிவு செய்தேன்” என்று கூறினார்.

விழாவின் வீடியோ வைரலாகி (Viral Video), இந்திய மொழியை உலக அரங்கிற்கு கொண்டு சென்றதற்காக எம்.பி.யை இந்தியர்கள் பாராட்டி வருகின்றனர்.

தொழில் ரீதியாக ஒரு மருத்துவராக இருக்கும் சர்மா, தேசிய கட்சியைச் சேர்ந்த டிம் மேகிண்டோவை 4,386 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து ஹாமில்டன் வெஸ்ட்டை வென்றிருந்தார். அதற்கு முன்னர், அவர் 2017 ஆம் ஆண்டில் தேர்தல்களில் தோல்வியுற்றார். சமஸ்கிருதத்தில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட உலகின் இரண்டாவது இந்திய வம்சாவளித் தலைவர் இவர். 

ALSO READ: Viral news: பழங்குடி குழந்தைகளுக்காக 18 km தினமும் படகோட்டிச் சென்ற அங்கன்வாடி பெண்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More