Home> Social
Advertisement

இரவில் திருட காரில் வரும் ஆண்டிகள் -வீடியோ வைரல்

வைரல் வீடியோ:  இந்த வீடியோ ஒரு நாள் முன்பு இன்ஸ்டாகிராமில் memes.bks என்ற பக்கத்தால் பகிரப்பட்டது. அது இப்போது 69,692-க்கும் மேற்பட்ட பார்வைகளுடன் வைரலாகியுள்ளது.

இரவில் திருட காரில் வரும் ஆண்டிகள் -வீடியோ வைரல்

வைரல் வீடியோ: இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

திருட்டு செயலில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் குறித்த காட்சி கேமராவில் சிக்கியதை அடுத்து, அந்த வீடியோ வைரலாகி வருகிறது. அதுவும் அந்த வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் பகிர்ந்த கருத்துக்களை பார்த்தால், அவர்கள் அந்த வீடியோவை பார்த்த பிறகு, கருத்து சொல்லாமல் இருக்க முடியவில்லை என்றே தோன்றுகிறது. 

இந்த வீடியோ ஒரு நாள் முன்பு இன்ஸ்டாகிராமில் memes.bks என்ற பக்கத்தால் பகிரப்பட்டது. அது இப்போது 69,692-க்கும் மேற்பட்ட பார்வைகளுடன் வைரலாகியுள்ளது.

அந்த வீடியோ சிசிடிவி காட்சிகளில், இரவு நேரத்தில் ஒரு கார் சாலையின் ஓரத்தில் நிற்கிறது. காரில் இருந்து இறங்கி கருப்பு நிற ஆடை அணிந்த ஒரு பெண், நடைபாதையில் உலா செல்வது போல் நடந்து வருகிறார். அதேபோல சாலையில் இளஞ்சிவப்பு நிற உடையணிந்த மற்றொரு பெண் நடந்தது செல்வதைக் காணலாம்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by MEMES.BKS (@memes.bks)

ALSO READ |  Viral Video: காயமடைந்தாலும் எஸ்கலேட்டரில் ஏறி மாஸ் காட்டும் மான்

இந்த வீடியோவில் முக்கியமான சம்பவம் என்னவென்றால், கருப்பு நிற ஆடையில் சாலையில் நடந்து வரும், அந்த பெண்மணி, நடைபாதையின் ஓரத்தில் இருக்கும் செடியை வேரோடு பிடுங்கி எடுத்துக்கொண்டு, மீண்டும் காருக்கு போய் ஏறிக்கொள்வதைக் காணலாம். பின்னர் கார் புறப்பட்டு செல்கிறது. அதன் பிறகு என்ன்ன என்ன நடந்தது என்பது குறித்து முழு சம்பவம் கேமராவில் பதிவாகியுள்ளது.

இன்ஸ்டாகிராம் பயனர்கள் இந்த வீடியோ பதிவு முழுவதும் "சிரிக்கும் எமோஜி"கள் மூலம் நிரப்பியுள்ளனர் என்று சொல்லலாம். சாலையின் ஓரத்தில் அரசாங்கம் மரங்களை வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில், செடிகளை நட்டு பராமரித்து வரும் வேளையில் அதை பொதுமக்கள் இப்படி பிடுங்கி செல்வது நியாமா? எனக் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ALSO READ |  Viral Snakes: ஒற்றை மரத்தில் மூன்று நாகங்கள்! இணையத்தில் வைரலாகும் முப்பாம்புகள்!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Read More