Home> Social
Advertisement

SeePics: காதலனின் கடைசி நிமிடத்தில் பிரியாவிடை கொடுத்த காதலி!

இங்கிலாந்து நாட்டின் வட மேற்கு வேல்ஸ் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரின் இறுதி நிமிடத்தில் அவரது காதலி அவருக்கு பிரியாவிடை கொடுத்த சம்பவம் அனைவரது கவனத்தையும் ஏற்படுத்தியுள்ளது!

SeePics: காதலனின் கடைசி நிமிடத்தில் பிரியாவிடை கொடுத்த காதலி!

இங்கிலாந்து நாட்டின் வட மேற்கு வேல்ஸ் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரின் இறுதி நிமிடத்தில் அவரது காதலி அவருக்கு பிரியாவிடை கொடுத்த சம்பவம் அனைவரது கவனத்தையும் ஏற்படுத்தியுள்ளது!

இங்கிலாந்தின் வட மேற்கு வேல்ஸ் பகுதியை சேர்ந்தவர் பிளாக் வார்டு(16). கடந்த செவ்வாய் அன்று அப்பகுதியில் பெருவெள்ள விபத்தில் சிக்கிய இவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிளாக் வார்டு உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்தார்.

விபத்தின் போது அவரது தலையில் ஏற்பட்ட காயம் அவரது மூளையை கொஞ்சம் கொஞ்சமாக செயலிழக்க வைத்துள்ளது. இனிமேலும் பிளாக் உயிர் பிழைப்பது கடினம் என மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், அவரது உயிர் காக்கும் கருவிகளை அகற்ற பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். 

இந்த விவரத்தை அறிந்த பிளேக்-ன் காதலி ஸ்டிபைனி, தன் காதலனுக்கு பிரியா விடை கொடுக்கும் விதமாக, பிளாக் உயிர் பிரியும் வரை அவரை கட்டியணைத்தபடி கண்ணீர் விட்டு கதறியுள்ளார். இந்த சம்பவத்தின் போது தான் எடுத்தக்கொண்ட புகைப்படத்தினை தன் முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள ஸ்டிபைனி "இந்த நாள் எனது வாழ்க்கையின் கடினமான நாள்" என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது... "வாழ்க்கையில் பல சிகரங்களை தொடவேண்டும் என நினைத்தவர் பிளாக் ஆனால் அவை அனைத்தும் ஒரே ஒரு விபத்தால் தலைகீழாக மாறிவிட்டது. இன்று பிளாக் என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டார் என்பதையே என்னால் நம்ப முடியவில்லை" என உருக்கமாக பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Read More