Home> Social
Advertisement

Video: இந்தியாவில் மட்டும் தான் இந்த மாறி தேர்வு நடக்கும்...

ஒவ்வொரு வருடமும் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளில் லட்ச கணக்கான மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

Video: இந்தியாவில் மட்டும் தான் இந்த மாறி தேர்வு நடக்கும்...

நுழைவு தேர்வு, போட்டி தேர்வுகளில் வெற்றிப்பெற மாணவர்கள் இரத்தம் மற்றும் வியர்வையை சிந்தி முயற்சித்து வருகின்றனர். நாட்டின் பிரதாண நுழைவு தேர்வுகளில் மாணவர்கள் வெற்றி பெற பல ஆண்டுகள் கடின உழைப்பை விலையாக முன்வைக்க வேண்டியுள்ளது.

ஒவ்வொரு வருடமும் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளில் லட்ச கணக்கான மாணவர்கள் பங்கேற்கின்றனர். அரசு அங்கீகாரம் பெற்ற ஒரு கல்லூரியில் பயில தான் மாணவர்கள் எவ்வளவு உழைக்க வேண்டியுள்ளது. 

இந்த போட்டிகளின் காரணமாக கடினமான இலக்கினை சிலர் எளிதில் அடைய பல குறுக்கு வழிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். சுமையைத் தாங்கமுடியாமல் சட்டவிரோதமான வழிமுறைகளை பயன்படுத்துகின்றனர். 

இருப்பினும், இத்தகைய குறுக்குவழிகள் மூலம் மாணவர்கள் இலக்கை அடைந்துவிட கூடாது என ஆசிரியர்களும் தங்களால் முடிந்தவற்றை செய்துவருகின்றனர். 

ஒருகாலத்தில் குறுக்கு வழியில் தேர்சி பெற விரும்பும் மாணவர்கள் கையில் துண்டு சீட்டுடன் செல்வதினை பார்த்திருப்போம். ஆனால் தற்போது விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது அல்லவா,... அதனால் தான் சீட்டுக்கு பதிலாக மாணவர்கள் தேர்வு அறையினுல் Bluetooth கருவியினையே எடுத்துச் சென்றுவிடுகின்றனர். மாணவர்கள் காதில் மறைத்து எடுத்துச்செலும் Bluetooth கருவிகள் உதவியால், வெளியிருந்து அவரது நண்பர் கொடுக்கும் தகவல்களை எளிதாக பெற இயலும். 

இந்த யுக்தி தற்போது பிரபலமாகி வரும் நிலையில், வளர்ந்து வரும் யுக்தியை தடுக்க ஆசிரியர்களும் களத்தில் கையில் Otoscope கருவியுடன் குஇத்து விட்டனர்.

சமீபத்தில் நடைப்பெற்ற நுழைவு தேர்வு ஒன்றில் மாணவர்களின் காதுகளில் Bluetooth கருவி உள்ளதா என்பதை கண்கானிக ஆசிரியர்கள் Otoscope கருவியுடன் தேர்வு அறைக்கு வந்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

வேடிக்கை என்னவென்றால்... இந்த வீடியோவினை எடுத்தவரும் தேர்வு அறைக்குள் தான் இருக்கின்றார். Bluetooth கருவியை கண்டுபிடிக்க தெரிந்த ஆசிரியருக்கு இந்த Mobil போனை கண்டுபிடிக்க தெரியவில்லை போல...

Read More