Home> Social
Advertisement

SeePics: தமிழ்படம் 2 படக்குழுவினரின் நகைச்சுவை போஸ்டர்!

தமிழ்படம் 2 படக்குழுவினரின் நகைச்சுவை போஸ்டர் வெளியாகியுள்ளது!

SeePics: தமிழ்படம் 2 படக்குழுவினரின் நகைச்சுவை போஸ்டர்!

தமிழ்படம் 2 படக்குழுவினரின் நகைச்சுவை போஸ்டர் வெளியாகியுள்ளது!

நடிகர் மிர்ச்சி சிவா நடிப்பில், அமுதன் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற திரைப்படம் "தமிழ்படம்". இப்படத்தின் இரண்டாம் பாகத்தினை தற்போது படக்குழுவினர் தயாரித்து வருகின்றனர்.

படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியான. இந்த ட்ரலரில் தமிழகம் முதல் ஹாலிவுட் வரை அனைவரையும் கலாய்த்து, நகைச்சுவையாக காட்சிகள் இடம்பெற்றிருந்தது. 

இந்நிலையில் இத்திரைப்படத்தின் அடுத்த போஸ்டரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் படக்குழுவினர் வின்வெளியில் சீட்டு விளையாடுவது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது டிக் டிக் டிக் திரைப்படம் குறித்த தகவல்கள் பரவி வரும் நிலையில் இந்த போஸ்டரும் டிக் டிக் டிக் திரைப்படத்தினை கலாய்க்கும் வகையிலேயே அமைக்கப்பட்டு இருப்பதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.

இந்தப் படத்தில் முதல் பாகத்தில் திஷா பாண்டே ஹீரோயினாக நடித்தார். எம்.எஸ்.பாஸ்கர், ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி, மனோபாலா, டெல்லி கணேஷ், பரவை முனியம்மா ஆகியோர் நடித்திருந்தனர். தற்போது இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தில் அதே கூட்டணியை வைத்து தமிழ்படம் 2 என்ற பெயரில் படமாகப்பட்டு வருகிறது.

இப்படம் மே 25 திரைக்கு வெளியாகும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. சில தொழில்நுட்ப பிரச்சனைகளால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Read More