Home> Social
Advertisement

SeePics: ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசு அளித்த சூர்யா, ஆர்யா!

KV ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு காப்பான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது!

SeePics: ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசு அளித்த சூர்யா, ஆர்யா!

KV ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு காப்பான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா தற்போது இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் NGK திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இதனை அடுத்து தனது 37-வது திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தினை இயக்கநர் KV ஆனந்த் இயக்கிவருகின்றார்.

இத்திரைப்படத்தின் பெயர் சஸ்பன்சாக வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இத்திரைப்படத்தின் பெயரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படதிற்கு காப்பான் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் இயக்குனர் கே.வி ஆனந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் காப்பான், மீட்பான், உயிர்கா என மூன்று டைட்டில்களை வைத்து ரசிகர்களிடம் இப்படத்திற்காக ஓட்டெடுப்பு நடத்தினார். இந்த ஓட்டெடுப்பின் அடிப்படையில் இத்திரைப்படம் பெயர் சூட்டப்பட்டுள்ளாதக தெரிகிறது.

சூர்யா நடித்து வரும் காப்பான் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் மோகன்லால், ஆர்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More