Home> Social
Advertisement

Game Of Thrones தொடரில் நடிக்கின்றாரா சன்னி லியோன்!

Game Of Thrones-ல் நடிக்க வாய்ப்பு கிடைத்தது உன்மை தான் என பிரபல பாலிவுட் நடிகை சன்னிலியோன் தெரிவித்துள்ளார்!

Game Of Thrones தொடரில் நடிக்கின்றாரா சன்னி லியோன்!

Game Of Thrones-ல் நடிக்க வாய்ப்பு கிடைத்தது உன்மை தான் என பிரபல பாலிவுட் நடிகை சன்னிலியோன் தெரிவித்துள்ளார்!

பாலிவுட்டின் "பேபி டால்" என அழைக்கப்படும் சன்னி லியோன் தனது திரை பிரவேசத்தின் மூலம் தனது ரசிகர்களை மகிழ்விக்க தவறுவதில்லை. பெரிய பெரிய நடிகர்களையும் தனது நடிப்பினால் விழுங்கிவிடும் இவருக்கு சமீபத்தில் பிரபல அமெரிக்க தொடரான Game Of Thrones-ல் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாக தகவல்கள் வெளியானது.

இந்த தகவல் வதந்தியா இல்லை உன்மை  தான என ரசிகர்கள் குழம்பி வந்த நிலையில் இந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சன்னி அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது... Game Of Thrones-ல் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது உன்மை தான், ஆனால் இந்த வாய்ப்பு, தொடரின் இயக்குநரால் கடைசி நிமிடத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்பதால் இந்த வாப்பினை நான் மறுத்துவிட்டேன், என தெரிவித்துள்ளார்.

தனது அபார நடன அசைவுகளால், பாலிவுட் ரசிகர்களை அசையவிடாமல் செய்திருக்கும் சன்னி லியோன் தற்போது பாலிவுட்டில் பிஸியாக வளம் வருகின்றார். பாலிவுட் திரைவுலகில் கால்வைத்து விரைவிலே பெரும் புகழை அடைந்துவிட்டார் இவர். இந்நிலையில் இவரது வாழ்க்கை வரலாற்றினை Zee குழுமத்தின் டிஜிட்டல் தளமான ZEE5-ல் "Karenjit Kaur: The Untold Story of Sunny Leone" என்னும் பெயரில் ஒளிப்பரப்பி வருவது குறிப்பிடத்தக்கது!

Read More