Home> Social
Advertisement

சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள்: வீடியோ வெளியிட்ட மோடி!

சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளை ட்விட்டரில் வீடியோ மூலம் நினைவுபடுத்திய மோடி.

சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள்: வீடியோ வெளியிட்ட மோடி!

இந்திய விடுதலைக்காகப் போராடிய ஒப்பற்ற தலைவர்களில் ஒருவர் சுபாஷ் சந்திரபோஸ். இன்று இவரின் 122-வது பிறந்தநாள் தினம். இந்த உலகை விட்டு மறைந்து பல ஆண்டுகள் ஆன பின்னரும், அவரின் மரணம் சம்பந்தமான பல சர்ச்சைகள் தொடர்கின்றன. 

இந்நிலையில், அவரது பிறந்தநாளுக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி, அவரது ட்விட்டர் பக்கத்தின் மூலம் ஒரு வீடியோ ஒன்றைச் பதிவு செய்துள்ளார்.

அதில் அவர் தெரிவித்துள்ளது; `சுபாஷ் சந்திர போஸின் வீரம், அனைத்து இந்தியர்களையும் பெருமையடைய செய்கிறது. அவரின் பிறந்தநாளான இன்று, அந்த மாபெரும் ஆளுமையின் முன்னாள் தலைவணங்குவோம். மக்களின் எண்ணங்களுக்காக அயராது உழைத்த மிகத் தைரியமான தலைவராக அவர் என்றும் நினைவு கூரப்படுவார்' என்று தெரிவித்துள்ளார். 

 

Read More