Home> Lifestyle
Advertisement

கமல்ஹாசன் படத்தின் ரீ-மேக் உரிமையை வாங்கினார் ஷாருக்!

கமல்ஹாசன் நடித்து, தயாரித்து 2000-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஹே ராம் ஆகும். இத்திரைப்படத்தில் முன்னணி நடிகர்களான கமலஹாசன், ஷாருக்கான், ராணி முகர்ஜி மற்றும் பலர் நடித்துள்ளனர். 

கமலஹாசனே இப்படத்தை எழுதி இயக்கி தயாரிக்கவும் செய்தார். இசைஞானி இளையராவின் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. இத்திரைப்படம் இந்தியாவின் சார்பில் அந்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருது பெறுவதற்கான போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படம் 3 தேசிய விருதுகளை வென்றுள்ளது. 

தற்போது 18 வருடங்கள் கழித்து இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய அதன் உரிமத்தை நடிகர் ஷாருக்கான் வாங்கியுள்ளார். இதுகுறித்து கமல் கூறுகையில், பரத் ஷாவிடமிருந்து ஹே ராம் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை அவர் பெற்றிருப்பதை அறிந்து மகிழ்கிறேன். அவருடைய உழைப்பையும் நட்பையும் அந்தப் படத்துக்காக அளித்தார். என்று கூறியுள்ளார்.

Read More