Home> Social
Advertisement

அதிசய விளக்கும் சேட்டை அணிலும் - வைரல் வீடியோ

பறவைகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் உணவை திருட சென்ற அணில், தொங்கவிடப்பட்டிருக்கும் கோப்பையை பிடித்து பம்பரமாக சுழலும் வீடியோ இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது

அதிசய விளக்கும் சேட்டை அணிலும் - வைரல் வீடியோ

அணிலின் சேட்டை வீடியோவுக்கு இணையத்தில் எப்போதும் வரவேற்பு இருக்கும். கார்டூன் சேனல்களில் ஓடும் பூனை மற்றும் எலியின் சேட்டைகளையும் அதன் சண்டைகளையும் பார்த்து ரசித்தவர்கள் ரியலாக அவ்வாறு நடைபெற்றால் ரசிக்காமல் விட்டுவிடுவார்களா என்ன?. அணிலைப் பொறுத்தவரை அடிக்கடி பார்ப்பவர்களுக்கு தெரியும் அதனுடைய சேட்டை. காட்டுப்புறங்களில் மெதுவாக தத்தி தத்தி செல்லும் அணி, பாதி மரத்தில் நின்று கொண்டு விசில் அடிக்கும். 

மேலும் படிக்க | Viral Video: சிறுத்தையிடம் சிக்கி சின்னா பின்னமான முதலை..!!

பறவைகள் இருந்தால் அதனுடன் விளையாடும். இப்படியான சேட்டைகள் செய்யும் அணில் வீடு ஒன்றில் புகுந்து செய்யும் சேட்டை தான் இணைய வாசிகளை வெகுவாக கவர்ந்து இணையத்திலும் வைரலாகியுள்ளது. இப்போது வைரலாகியிருக்கும் வீடியோவில், வீடு ஒன்றில் புகுந்து அங்கும் இங்கும் வேகமாக ஓடியோடி உலாவுகிறது. பின்னர், கார்டன் ஏரியாவுக்கு வரும் அணில் கம்பி ஒன்றில் பொருத்தப்பட்டிருக்கும் பறவைகளுக்கான உணவு கோப்பையை பார்க்கிறது. பின்னர் வேகமாக அந்த இரும்பு கம்பி மீது ஏறி தொங்கிக் கொண்டிருக்கும் பறவைகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தீனி பாக்ஸ் மீது தாவுகிறது. அடுத்த நொடியே அந்த தீனி பாக்ஸ் பம்பரம்போல் வேகமாக சுழலத் தொடங்குகிறது. 

கிறுகிறுவென அணில் சுழல்வதால் காண்போருக்கு நகைச்சுவையை ஏற்படுத்துகிறது. திருடச் சென்ற இடத்தில் வசமாக சிக்கிக் கொண்ட அணிலால் அந்த தீனி கோப்பையின் சுழற்சியை நிறுத்தவும் முடியவில்லை. புலிவாலை பிடித்த கணக்காக அந்த கோப்பை வேகமாக சுழலுவதற்கு ஏற்ப சுழன்றுகொண்டே இருக்கிறது. டிவிட்டரில் மட்டும் இதுவரை 2லட்சம் பார்வைகளை நெருங்கியுள்ளது. நெட்டிசன்கள் தங்களின் நகைச்சுவையை  கமெண்டாக பதிவு செய்துள்ளனர். 

மேலும் படிக்க | அடக்கடவுளே! யாருமே கிடைக்கலையா... குளத்தில் முதலையுடன் கட்டி பிடித்து நடனம் ஆடும் நபர்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More