Home> Social
Advertisement

ஒரே இடி.. சிதறிய செங்கல் சுவர்... பெண் ஓட்டுனர் எஸ்கேப்.. பதற வைக்கும் விபத்து: வைரல் வீடியோ

Accident Viral Video: விபத்து என்றாலே நம்மை அச்சம் பற்றிக்கொள்ளும். ஆனால், இந்த விபத்து வீடியோ சற்று வித்தியாசமாக உள்ளது.

ஒரே இடி.. சிதறிய செங்கல் சுவர்... பெண் ஓட்டுனர் எஸ்கேப்.. பதற வைக்கும் விபத்து: வைரல் வீடியோ

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. 

விபத்துகள் தொடர்பான பல வீடியோக்களை சமூக ஊடகங்களில் நாம் அடிக்கடி பார்க்கிறோம். உலகம் முழுவதும் விபத்துகள் தொடர்ந்து நடக்கின்றன. இதில் ஏராளமானோர் உயிரிழப்பதும் கசப்பான உண்மை. அதே நேரத்தில், விபத்துகளின் வீடியோக்கள் எதிர்காலத்தில் பயனர்கள் இதுபோன்ற தவறுகளை மீண்டும் செய்வதைத் தடுக்கின்றன. 

தற்போது விபத்து தொடர்பான ஒரு புதிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் ஒரு பெண் டிரைவர் காரை நேராக ஒரு சுவரில் இடிப்பதை காண முடிகின்றது. 

பொதுவாக, சாலையில் விபத்துகள் ஏற்படுவதற்குக் காரணம், மக்கள் அவசரமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டுவதுதான். வைரலாகி வரும் வீடியோவில், ஒரு பெண் அவசரத்தில் இருப்பதைக் காண முடிகின்றது. சாலையில் காரை ஓட்டும் ஒரு பெண், அதிக வாகனங்கள் இல்லாமல் வேகமாக கார் ஓட்ட சாலையில் வாய்ப்பு கிடைத்தவுடனே, காரை வேகமாக ஓட்டுகிறார். வேகமாக காரை ஓட்டி சாலையை கடக்க முயல்கிறார். ஆனால், தன் கட்டுப்பாட்டை இழந்துவிடுகிறார். இதனால் பெரும் விபத்து ஏற்படுகிறது.

மேலும் படிக்க | மணமகன் சொன்னதை கேட்டு மேடையிலேயே முத்தமிட்ட மணமகள்: வைரல் வீடியோ

பயங்கர விபத்தின் வீடியோவை இங்கே காணலாம்:

விபத்துக்குப் பிறகு ஓட்டம் பிடித்த பெண்

சாலையில் இருந்த சுவரில் காரை இடித்த பெண் பெரும் பீதிக்கு ஆளானார். ஆனால், உடனேயே அவர் காரிலிருந்து இறங்கி ஓட்டம் பிடிக்கத் துவங்கினார். அவர் காரை கொண்டு மோதிய செங்கல் சுவர் உடைந்து சிதறுவதை வீடியோவில் காண முடிகின்றது. இந்த சம்பவம் முழுவதும் சாலையோரம் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் Cars Accident என்ற பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த செய்தியை எழுதும் நேரம் வரை, சமூக ஊடகங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனர்கள் அதை விரும்பியுள்ளனர். மேலும் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனர்கள் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | படிக்கட்டுகளில் விழப்போன குழந்தையை காப்பாற்றிய பூனை: பதறவைக்கும் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More